Wednesday, January 26, 2011

அடடே ஆச்சர்ய குறி

ஆசிரியர் : டேய், ஏண்டா தரைல உக்காந்து கணக்கு போட்டு கிட்டு இருக்குற?
மாணவன் : நீங்க தானே சொன்னீங்க டேபிள் உபயோகிக்காம கணக்கு போடுன்னு!.

ஒரு குடிகாரன் பார்ல உக்காந்து அழுதுகிட்டு இருக்குறாரு. அதபாத்த இன்னொரு குடிகாரர். ஏன்பா, அழுவுறன்னு கேட்டார். "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இந்த புல்லுக்காக என்னோட மனைவிய வித்துட்டேன் அதான் வருத்தப்பட்டுகிட்டு இருக்கேன்" என்றார்.
"பாத்தியா, உன்மனைவி மேல் உனக்குள்ள அன்பு அவளை பிரியும் போது தான் உனக்கு தெரியுது" என்றார், ஆறுதல் சொல்லவந்தவர். "அட அது இல்ல நாளைக்கு குடிக்கிறதுக்கு என்னத்த பண்றதுன்னு நினைச்சிதான் வருத்தப்பட்டுகிட்டு இருக்கேன்" என்றார், அந்த தலைசிறந்த குடிகாரர்.!!!!



ஆசிரியர்: ஏண்டா, தினமும் லேட்டா வர?
மாணவன்: நான் ரோட்ல நடந்து வருவனா, ஸ்கூல் பக்கம் வரும்போது "School Zone. Go Slow " அப்படின்னு எழுதிருக்குமா அப்பா நான் மெதுவா நத்தை மாதிரி மெதுவா ஊர்ந்து வருவனா அதான் லேட் ஆகிருது.
ஆசிரியர்: o-௦


உலகத்தில் இருப்பது ஒரே ஒரு சிறந்த குழந்தைதான் அது எல்லா அம்மாகளிடமும் இருக்கும். உலகத்தில் இருப்பது ஒரே ஒரு சிறந்த பிகருதான் அது உங்க பக்கத்து வீட்ல தான் இருக்கும்


தான் தவறு செய்யும்போது அதை ஒப்புகொள்பவன், "நேர்மையானவன்"
தான் தவறு செய்திருப்பேனோ என்ற எண்ணம் வந்தாலே அதை ஒப்புகொள்பவன், "சிறந்த மனிதன்"
தான் தவறே செய்யாத போது அதை ஒப்புகொள்பவன், "கணவன்"


"உங்களின் மனைவி/காதலியின் பிறந்தநாளை நினைவில் வைத்துகொள்ள சிறந்த வழி. ஒரு முறை அதை மறப்பது தான்" - ஏதோ ஒரு புண்ணியவான்


நானும் என் மனைவியும் 24 வருடங்களாக சந்தோசமாக இருந்தோம். நாங்க இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வரை (அடடே ஆச்சர்ய குறி)

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//உங்களின் மனைவி/காதலியின் பிறந்தநாளை நினைவில் வைத்துகொள்ள சிறந்த வழி. ஒரு முறை அதை மறப்பது தான்//

அனுபவஸ்த்தன்...

MANO நாஞ்சில் மனோ said...

வடையும் எனக்கே....

Philosophy Prabhakaran said...

NICE... இன்னும் நிறைய படியுங்கள், சிந்தியுங்கள்... உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

Post a Comment