Showing posts with label கவித கவித. Show all posts
Showing posts with label கவித கவித. Show all posts

Thursday, November 10, 2011

டாக்டர்கள் காதலித்தால் - கவிதை தொகுப்பு

டாக்டர்கள் காதலித்தால் அவர்கள் கவிதை எப்படி இருக்கும்? இதோ இப்படி தான் இருக்கும்.

என் இதயத்தின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் -  உன் புகைபடம்!!

உடலில் உள்ள செல்கள் அனைத்திலும்  உன் அன்பை செலுத்தி என்னை வாழவைகிறாய் நீ!!

கத்தி இன்றி ரெத்தம் இன்றி என்னுள் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவள் நீ!

நீ நர்ஸாக இருந்தாலும் உன்னை என் இதயமென்னும் பர்ஸில் வைத்து தைத்திருகிறேன்!



 
இதயம் பார்கிறது, விழிகள் பேசுகிறது, உதடுகள் கேட்கிறது. ஒவ்வொரு உறுப்பும் அவற்றிற்கு மாறான பணியை செய்கிறதே! இது தான் காதல்நோயின் அறிகுறியோ!!

வெளிப்படுத்தபடாத காதல், சிரிஞ்சில் உள்ள மருந்தை போன்றது. வெளியே வரவில்லை என்றால் விரைவில் எக்ஸ்பயரி ஆகிவிடும்.

இதயதானம் வேண்டி உனக்கொரு கடிதம் எழுதினேன், என் இரத்தத்தை தானமாக்கி!!


Thursday, August 4, 2011

அன்ப பத்தி எல்லாம் கவிதை - என் நிலைமைய பாத்தீங்களா!!

இந்த பதிவு முழுவதும் அன்பை மையமாக கொண்டு எழுதப்பட்டது..

ரசிகன்
உன் அழகிற்கு ஆயிரம் ரசிகர்கள். உன் அன்பிற்கு நான் மட்டுமே ரசிகன்.

மண்புழு நான்
உன் அழகென்னும் பூவை சுற்றி வரும் தேனீ  நானல்ல. உன் இதயமெனும் வேரில் இதமாய் இருக்கம் மண்புழு நான்.

இதயதராசு
என் இதயதராசில் உன் அன்பிற்கு இணையாக.. அஸ்வர்யாராய், அனுஷ்கா, அமலாபால் இவர்களை வைத்து பார்க்கிறேன். துளியும் உயரவில்லை உன் பக்கம்!!




உன் மூச்சு காற்று
உன் அழகை தொட்டு செல்லும் காற்றை விட, நீ மூச்சாக விட்டு செல்லும் காற்றையே சுவாசிக்க விரும்புகிறேன்.. அது உன் இதயத்தை உரசி வந்ததால்!! 

குழந்தை நீ
இதனை வயதான பின்னும் தவழ்கிறாயே என் இதயத்தில்,  அங்கு என்றுமே  நீ குழந்தை தான் என்பதை மூளை சொல்லி தான் என் இதயத்திற்கு தெரியவேண்டும் என்பதில்லை!!

அழியா காதல்
கண் பார்த்து மனம் தேடுவது முதல் காதல், மனம் பார்த்து கண் தேடுவது கடைசி காதல். அதுவே என்றும் அழியா காதல்!

உறவின் அணிகலன்
நம்மை ஆதாரமாக்கி ஈகோவை சேதாரமாக்கி அன்பை செயகூலியாக்கி செய்யப்படும் விலைமதிப்பற்ற  உறவின் அணிகலனே காதல்!

லப், டப்
இதயம் பேசிய ரெண்டே வார்த்தை லப், டப். மூன்றாவதாக இப்பொழுது இன்னொரு வார்த்தை உன் பெயர்..! 

அன்பு காந்தம்
உன் அன்பென்ன ராட்சத காந்தமா? நான் எங்கிருந்தாலும் என்னை உன் பக்கமாகவே ஈர்க்கிறது..!

Thursday, July 14, 2011

கடைசில என்னையும் கவிஞன் ஆகிட்டாங்களே - கவிதை தொகுப்பு (பகுதி -2)

சிரிப்பின் ஒலி.
ஒவ்வொரு நரம்பிலும் அதிர்ந்து கொண்டிருக்கிறது.. நீ சத்தமின்றி சிரித்த சிரிப்பின் ஒலி.

நீ பேசுகிறாய்
நீ என்னிடம் ரகசியமாய் பேசும் வார்த்தைகளை ஒட்டுகேட்கவே நம்மருகில் வருகின்றன வண்ணத்துபூச்சிகள்.



கடன் கொடு
ஒரு முத்தமாவது கடனாக கொடு. கண்டிப்பாக வட்டியோடு திருப்பி தருகிறேன்.!

தென்றல் காற்றே
தென்றலுக்கும் கூட பொறாமை இருக்கும். எங்கள் நெருக்கத்தில் அதற்கு கூட இடம் இல்லையே! 

நீ இருக்கமாட்டாய் தென்றலே
என்னவளின் பூவிழியில் தூசு இட்ட தென்றலே. என் கண்ணில் பட்டுவிடாதே! பின் யாரும் ரசிக்க நீ இருக்க மாட்டாய்!

நீ கள்ளியடி
நமக்குள் இடைவெளி தேவை என்று கூறி, நீ என் விரல்களை இறுக பிணைப்பதே நீ பொய்யாக கூறியதை கட்டவிழ்த்து விடுகிறது. 

தனிமை 
தனிமையை என்றும் உணர்ந்ததே இல்லை. உன்னை சந்திக்கும் வரை.!!

தேன் கொடு
தேனீக்கள் உன் உதட்டை வட்டமிடுகிறதே.. அவைகளுக்கும் தேன் வேண்டுமாம்!!



Monday, July 11, 2011

சப்பை பிகரும் பிகரே!! - கவிதை தொகுப்பு

இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரையும் காயபடுத்த அல்ல. சும்மா உலுலுலுலாய்க்கு. உலகில் எல்லா பெண்களும் அழகே!!

எத்தனை நாள் தான் அழகான பிகருங்களுக்காகவே கவிதை எழுதுறது. சப்பை பிகருங்களையும் கவனிச்சு கவிஞர்கள் கவிதை எழுதவேண்டும். என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தொடக்கம்.. நானே இந்த பதிவின் மூலம்  பிள்ளையார் சுழி போடுறேன்.

கொலு கொளு பொம்மைகள்
உங்கள் வீட்டிலே கொலு வீற்றிருக்கும் கல் பொம்மைகள் அருகில் செல்லாதே.. அவையும் உன்னை கண்டு கொலுவில் இருந்து ஓடிவிடலாம்! 

சப்பை
நீ தான் சப்பை என்று நினைத்திருந்தேன்.. இல்லை.. உன் மூக்கு உன்னை விட சப்பை.. !

நரக வேதனை
தினமும் உன் சிரிப்பில் அழும் உன் அறை கண்ணாடியை விட நரக வேதனையை அனுபவிக்கும் பொருளும் உலகில் உண்டோ!!! 


உன்னை தேடி 

மிருககாட்சிசாலையின் பக்கம் தவறியும் சென்றுவிடாதே!! அங்கே ஒரு கொரிலாகுரங்கு ஜோடி தேடி அலைகிறதாம்!! 



உன் புகைபடம்
என் வாகனத்தின் முன் எலுமிச்சைபழம், திருஷ்டிக்காக. எனக்கோ அது எனக்கு தேவை இல்லை.. என்னிடம் இருக்கிறது உன் புகைபடம்!! 

பிழைத்தது என் கண்கள்
அதோ அங்கே ஒரு எருமை கூட்டம்.  அங்கே உன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தப்பித்து பிழைத்தது என் கண்கள்.. !

நட்சத்திரங்கள்
நீ பார்த்து இளிததும் சுக்குநூறாக உடைந்த நிலாவின் சில பாகங்களே  நட்சத்திரங்கள்.. !

முத்தம் ஒரு குத்தம்
முத்தம் ஒன்று நீ கேட்டால்,  சத்தம் இன்றி போகும் அதை காதால் கேட்டவனின்  உயிர்..!

உன் பார்வை  
இனி யாரையும் பால் ஊற்றி கொல்லவேண்டாம்.. உன்னை ஒரு நிமிடம் பார்க்க வைத்தாலே போதும்.. !

ஒளிந்து கொள்ளும் இதயம் 
உன்னை காணும் வரை லப்டப் என சீராக துடிக்கும் இதயம், உன்னை கண்டதும்  ஓடி சென்று என் முதுகின் பின்னே சென்று ஒளிந்து கொள்கிறது. !!

அணு ஆற்றல்
அணுவை துளைத்து ஆற்றல் எடுத்தால் கதிர்வீச்சு. உன்னை காணும் நாள் எல்லாம் எனக்கு நாசமா போச்சு..!!

சப்ப பிகருக்காக சப்ப கவிதைகள் எழுதியாச்சு..   இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. "எல்லா புகழும் இறைவனுக்கே!!" ஏ.ஆர் ரகுமான் சொன்னது. "எல்லா பெண்களும் அழகே!!" இது நான் சொன்னது.



Wednesday, June 8, 2011

கடைசில என்னையும் கவிஞன் ஆகிட்டாங்களே - கவிதை தொகுப்பு

நீ ஒரு புதிர்
விலகி சென்றால் அணைக்கிறாய்.. நெருங்கி வந்தால் தடுக்கிறாய்.. உன்னை புரிந்து கொள்ள உனை படைத்த பிரம்மனாலும் இயலாது. 

பாவையின் பார்வை
உன் கண்கொண்டு வைரங்களை பார்க்காதே, அவையும் தன்னை மறந்து ஒளிராமல் இருந்துவிடும்.

ஏக்கம் 
உன் வீட்டு ரோஜா செடியின் மொட்டுகளிடம் கேட்டேன். ஏன் மலரவில்லை என்று. அவையும் தன் இதழ் குவித்து உன்னை முத்தமிட காத்து கொண்டிருகின்றனவாம்!!


சிதறிய நட்சதிரங்கள்
வானில் சிதறி கிடக்கும் நட்சதிரங்கள் கூட நீ வெட்டும் போது சிதறிய உன் நக துண்டுகளுக்கு ஈடாகாது!

Thursday, May 19, 2011

ஒரு தேவதையின் வரிகள் - கவிதைகளின் தொகுப்பு

என்னக்குள் ஓர் அரியாசனம்
'சுற்றமும் நட்பும்' எண்ணற்றோர், பெரும்பான்மை. நீ ஒருவன், சிறுபான்மை. என்னை ஆட்சி செய்ய உன்னை தேர்ந்தெடுத்தேன். பதவி ஏற்றுக்கொள்.


உள்ளத்தில் பெருமழை
ஒரே குடைக்குள் நாம் இருவரும் இணைந்து நடக்க, இந்த பெருமழை ஒரு காரணியல்ல! வெறும் காரணம் மட்டுமே....!!



காதல் நூல்
நட்புக்கும், காதலுக்கும் ஒரு நூல் இடைவெளி உண்டு. அந்த நூலை எடுத்து அதில் வண்ணமலர்கள் கோர்த்து கையில் தந்து சிரித்தாய் நீ!


அழகு
காதல் கவிதைகள் எழுதுவதில் ஆண்கள் அழகு! கவிதையாய் காதலிப்பதில் பெண்கள் அழகு!!

உனக்காக...
விடை பெற்று செல்லும்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன்... நீ விரும்பி பார்த்துக்கொண்டேயிருப்பாய் எனத் தெரிந்து! 

என் சொந்தம்
எழுதிய வரிகளை படித்து உன் இதழோரம் புன்னகை பிறக்குமோ! விழியோரம் ஒரு துளி நீர் உதிர்க்குமோ!! எதுவாயினும் அது என் சொந்தம்


அன்பின் முத்துகள்
நீ பிறந்தநாள் பரிசாக தந்த கொலுசின் முத்துக்களில் ஒன்றும் உதிராமல் இருக்க வேண்டி, அதிராமல் நடக்கப் பழகினேன் நான்! 


என் பொருள்  நீ
மென்பொருளோ, வன்பொருளோ உன் பணி பற்றி ஏதும் அறியேன் நீ ''என்' பொருள்'' என்பதை தவிர!


மின்னும் அஞ்சல்
தினம் வரும் மின்னஞ்சல்களில் உன் பெயர் இல்லாவிடில் மற்றவையும் படிப்பதில்லை. உன் அஞ்சல் இருந்தால் மற்றவை படித்தாலும் புரிவதில்லை. 


இவை அனைத்தும் என்னுடைய படைப்புகள் இல்லை... உரியவரின் அனுமதி பெற்றே பதிவிட்டு இருக்கிறேன்.