Tuesday, May 31, 2011

காதலை சொல்ல ஆயிரம் வழி, அதில் இது தனி வழி

ரமேஷ், சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்து வந்தனர். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த வள்ளியை (பெயர் மாற்றப்படவில்லை. ஏன்னா இந்த கதைல ஒரு பாட்டு இருக்கு. அதுக்கு அந்த பேரு வேணும்) இருவருக்கும் நன்றாக தெரியும். வள்ளி அழகான, புத்திசாலியான பொண்ணு  சுருக்கமா சொன்ன "சூப்பர் பிகரு"  ரமேஷ்க்கு வள்ளி மேல் காதலோ காதல். சுரேஷ்க்கு ரமேஷ் வள்ளிய காதலிக்கிறது தெரியும். தினமும் கவிதைங்கிற பேருல சுரேஷ் காதுல்ல கடப்பாறைய இறக்குவான்.
 
 
இப்படியே ஒரு 6 மாதம் போச்சு. "இந்த காதலர் தினத்துல என்னோட காதல வள்ளிகிட்ட சொல்லபோறேன்" ன்னு ரமேஷ் சுரேஷ் கிட்ட சொன்னான்.  அதகேட்ட சுரேஷ் ரமேஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவன உற்சாக படுத்துனான். 

அந்த காதலர் தினமும் வந்தது ரமேஷ் டிப்டாப்பா கைல ஒரு ரோஜா வச்சிக்கிட்டு வள்ளிய எதிர்பாத்து காத்துகிட்டு இருந்தான் (வள்ளிவரபோற... துள்ளிவரப்போற இந்த இசை பின்னணில ஒலிச்சிகிட்டே இருந்தது). வள்ளி வந்தாள். அவள் ரமேஷிடம் பேசகூடவில்லை. ரமேஷ் துவண்டு போனான். இரவெல்லாம் தூக்கமில்லை ஒரே புலம்பல்.
 
ஏன் வள்ளி ரமேஷை ஒதுக்குறான்னு விசாரிச்சதில். எல்லாத்துக்கும் காரணம் இந்த சுரேஷ் என்ன்பது தெரிந்தது. சுரேஷ் காதலர் தினத்துக்கு முந்தயதினம் வள்ளியை வெளியே பார்த்திருக்கிறான். பார்த்ததோடு இல்லாமல் அவளிடம் சென்று "I Love You" ன்னு சொல்லி இருக்குறான் படுபாவி. வள்ளியோட ரியாக்சன் மாறிட்டு, உடனே அந்த பய புள்ள "நான் இல்லை ரமேஷ் சொல்ல சொன்னான்" ன்னு சொல்லி இருக்குறான். வள்ளியோ ரமேஷ் என்னைவிட சின்னபையன் எனக்கு தம்பி மாதிரின்னு சொல்லிட்டு போய்டாலாம்.
 
ரமேஷோ மனமுடைந்து போயிட்டான். ரமேஷை எப்படி இதை தாங்க போறானோ தெரியல. அட  நமக்கு அதுவா முக்கியம், சுரேஷின் ஐடியா நல்லா இருக்குது அதுதான் முக்கியம்
 
ஓட்ட போடுங்க. திட்ட ஆசை படுறவங்க கமெண்ட் போட்டு திட்டலாம்.

Thursday, May 19, 2011

ஒரு தேவதையின் வரிகள் - கவிதைகளின் தொகுப்பு

என்னக்குள் ஓர் அரியாசனம்
'சுற்றமும் நட்பும்' எண்ணற்றோர், பெரும்பான்மை. நீ ஒருவன், சிறுபான்மை. என்னை ஆட்சி செய்ய உன்னை தேர்ந்தெடுத்தேன். பதவி ஏற்றுக்கொள்.


உள்ளத்தில் பெருமழை
ஒரே குடைக்குள் நாம் இருவரும் இணைந்து நடக்க, இந்த பெருமழை ஒரு காரணியல்ல! வெறும் காரணம் மட்டுமே....!!



காதல் நூல்
நட்புக்கும், காதலுக்கும் ஒரு நூல் இடைவெளி உண்டு. அந்த நூலை எடுத்து அதில் வண்ணமலர்கள் கோர்த்து கையில் தந்து சிரித்தாய் நீ!


அழகு
காதல் கவிதைகள் எழுதுவதில் ஆண்கள் அழகு! கவிதையாய் காதலிப்பதில் பெண்கள் அழகு!!

உனக்காக...
விடை பெற்று செல்லும்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன்... நீ விரும்பி பார்த்துக்கொண்டேயிருப்பாய் எனத் தெரிந்து! 

என் சொந்தம்
எழுதிய வரிகளை படித்து உன் இதழோரம் புன்னகை பிறக்குமோ! விழியோரம் ஒரு துளி நீர் உதிர்க்குமோ!! எதுவாயினும் அது என் சொந்தம்


அன்பின் முத்துகள்
நீ பிறந்தநாள் பரிசாக தந்த கொலுசின் முத்துக்களில் ஒன்றும் உதிராமல் இருக்க வேண்டி, அதிராமல் நடக்கப் பழகினேன் நான்! 


என் பொருள்  நீ
மென்பொருளோ, வன்பொருளோ உன் பணி பற்றி ஏதும் அறியேன் நீ ''என்' பொருள்'' என்பதை தவிர!


மின்னும் அஞ்சல்
தினம் வரும் மின்னஞ்சல்களில் உன் பெயர் இல்லாவிடில் மற்றவையும் படிப்பதில்லை. உன் அஞ்சல் இருந்தால் மற்றவை படித்தாலும் புரிவதில்லை. 


இவை அனைத்தும் என்னுடைய படைப்புகள் இல்லை... உரியவரின் அனுமதி பெற்றே பதிவிட்டு இருக்கிறேன்.

எவ்வளவோ படிச்சிடீங்க இதையும் படிங்க...

இது ஒரு கதை அவ்வளோதான். இது ஒரு நகைச்சுவைக்காக எழுதபட்டது தான். 

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள். 

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப்  வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400  டீம்க்கு $100 லாபம்).

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள், "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல  "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க 

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் டாக்கிஸ்.



Monday, May 9, 2011

ட்விட்டர், பேஸ்புக்கை விட்டு விட்டு உருப்பட சில யோசனைகள்

வேலை வெட்டிய விட்டுட்டு சொந்த கேர்ள்பிரெண்ட்டை கூட விட்டுட்டு ட்விட்டர், பேஸ்புக் -ல் குடும்பம் நடத்துபவரா நீங்கள் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதிலிருந்து விடுபட உங்களுக்கு சில யோசனைகளை கூறுகிறேன்.


  1. முதலும் முடிவுமாக நீங்கள் செய்யவேண்டிய வேலை நீங்கள் ஆணாக இருந்தால் இதிலுள்ள பெண்கள் சகவாசத்தையும், பெண்கள், ஆண்கள் சகவாசத்தையும் கலட்டிவிடுவது மிகுந்த பயனை தரும். 
  2. இதுலயே மூணு நாள் மூச்சி விடாம  இருந்தீங்கன்னா... இதுல மட்டும் இல்ல உங்க வாழ்கையில் உள்ள எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடு பட்டு விடலாம். (உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா பிளாஷ் நியூஸ்ல கூட வரலாம்... )
  3. ஒவ்வொரு முறை logout செய்யும் போதும் நீங்கள் உபயோக படுத்திய கணினியை அடித்து நொறுக்குவதன் மூலம் இதிலிருந்து சுலபமாக விடுபடலாம்
  4. ஒவ்வொரு முறை login செய்யும் போதும் உங்கள் தலையை சுத்தியல் கொண்டு சிறிது ரெத்தம் வருமளவு மெதுவாக "நங்." என்று அடிக்கவும். ரெத்தம் வரவில்லை என்றால் " நங் நங்.." என்று அடிக்கவும். இன்னும் வரவில்லை என்றால் "நச்சு"ன்னு ஒரே போடு போடவும். 
  5. "ட்விட்டர், பேஸ்புக் -ஐ  விட்டு விட்டு உருப்படுவோர் சங்கம்" அப்படின்னு ட்விட்டர்ல ஒரு hashtag -ம் பேஸ்புக்கில்  ஒரு group -ம் உருவாக்கி உருப்படலாம்.   
இதை மற்றவர்களுக்கும் சென்றடைய செய்து அவர்களும் உருப்பட உதவ வேண்டுகிறேன் . (ஓட்டு போடுங்க)

Friday, May 6, 2011

த்ரிஷாவுக்காக... ஒரு ரீமிக்ஸ்




மண்ணானாலும் திரிஷா தலையில் மண்ணாவேன் (களிமண்ண சொன்னேன்)
ஒரு மரமானாலும் திரிஷா தோட்டத்து மரமாவேன் 
ஒரு கல்லனாலும் திரிஷா குளியலறை கல்லாவேன்  
ஒரு புல்லானாலும் திரிஷா அடிக்கும் புல்லாவேன். நான் ...

(மண்ணானாலும்) 

பொன்னானாலும்  திரிஷா கழுத்தில் செயின் (கொஞ்சம் நீளமான செயின்) ஆவேன்
பனி பூவானாலும்  திரிஷா தலையில்  பூவாவேன்
தமிழ் பேச்சானாலும்  திரிஷா புகழ் பாடும் பேச்சாவேன்
மனம் தெளிவானாலும்  திரிஷா அருளால் பித்தவேன்.  நான் ...

(மண்ணானாலும்) 

ஒரு சொல்லானாலும்  திரிஷா என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும்  திரிஷாவுக்கு சுவையாவேன்
நீ உண்டானாலும் அதுக்கு நானே முதலாவேன்
நீ தண்ணி அடித்தாலும் அதுக்கு நானே சைடுடிஷ் ஆவேன். நான்....(மண்ணானாலும்)