Sunday, November 28, 2010

"B" jokes

பசங்கள கொஞ்சம் புரிஞ்சிகோங்க :(
ஒரு பையன் Car டிரைவ் பண்ணிட்டு போறான். அவன ஒரு பொண்ணு overtake பண்ணிட்டு போற. அந்த பையன் பொண்ண பாத்து "ஏய், கழுதை" என்று சொன்னான். அந்த பொண்ணு உடனே அந்த பையன பாத்து "போடா, பன்னி, எருமைமாடு, முட்டா பயலே" இப்டீல்லாம் திட்டுநாள். தீடீர்னு அந்த பொண்ணுக்கு ஒரு accident road cross பண்ண கழுதை மேல மோதுனனால.
Moral: பொண்ணுக பசங்கள புரிஞ்சிகவே மாட்டாங்க :)

காதலிக்க போறீங்களா? ட்ரைனிங் எடுத்து கோங்க

காதல் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு தொடராக நான் படித்த, அனுபவித்த, எனக்கு தோன்றிய விசியங்களை பகிர்கிறேன்.

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

தொலைக்காட்சியும் மூடபழக்கங்களும்

இங்கு மூடபழக்கங்களை பற்றி பலர் விழிப்புணர்வு செய்தாலும் இன்னும் பலர் அந்த பழக்கங்களில் இருந்து தங்களை விடிவிப்பதில்லை. மீடியாக்கள் விழிப்புணர்வுகளில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதே மீடியாக்கள் மூடபழக்கங்களை வளர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றன.

இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது தொலைக்காட்சி மீடியாக்கள் பற்றி தான். தொலைக்காட்சி மீடியாக்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன என்பதை நான் மறுக்கவில்லை. பல முற்போக்கான நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே தொலைக்காட்சிகள் சில நிகழ்ச்சிகளில் குறிப்பாக மெகா தொடர்களின் மூலமாக மூடபழக்கங்களையும் வளர்க்கின்றன.

Saturday, November 27, 2010

Software field - என்ன தான் பண்றோம்னு தெரிஞ்சுகாங்க :)

"அப்படி என்னதான் வேலைபார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி தான்

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –ன்று நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் ஒருவர். நானும் விவரிக்க ஆரம்பிதேன்..

நாங்கெல்லாம் டிரைன்லயே பிச்சை எடுத்தவங்க

ஒரு திங்கள்கிழமை நண்பர் ஒருத்தரை பார்க்க செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த "மூதாட்டி", மூதாட்டி என்று சொல்லமுடியாது சற்று திடமான உடல் தான். அனைவரிடமும் தர்மம் கேட்டார். சிலர் 2, 5 ருபாய் போட்டார்கள்.

அப்பொழுது அங்குவந்த பேருந்து நடத்துனர் அந்த மூதாட்டியை பேருத்தில் இருந்து வெளியே போகும்படி வற்புறுத்தினார். மூதாட்டி முனகி கொண்டே பேருந்தில் இருந்து கீழே இறங்காமல் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தார். வேகமாக வந்த நடத்துனர் வெளியே செல்லும்படி கூச்சலிட்டார்.

Wednesday, November 24, 2010

சிகெரட் பிடிச்சா சில நல்ல விசியங்களும் இருக்குதுங்க!

எல்லாரும் சிகெரட் பிடிக்காத அது நிகோடின் இருக்குது... Cancer வரும் அது வரும் இது வரும் சொல்லுவாங்க. அது இருக்கட்டும் சிகெரட் பிடிக்கிறதால் சில நல்ல விசியங்களும் இருக்குங்க. என்னனு தெரிஞ்சிக ஆர்வமா இருக்கீங்களா படிச்சி தான் பாருங்களேன்.

இங்க நான் எனக்கு தெரிஞ்ச scientificaa prove பண்ணப்பட்ட 3 points மட்டும் சொல்லறேன்.

Tuesday, November 16, 2010

Microsoftக்கு 10 கேள்விகள்

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

Monday, November 15, 2010

பெண்கள் மூளை மலிவானது (தலைப்பை பார்த்து முடிவு பண்ணாதீங்க )

மருத்துவமனையில் ஒருவருக்கு மூளையில் பிரச்சனை உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் மருத்துவர் அறையில் இருந்து வந்து உறவினர்களிடம் நோயாளிக்கு உடனடியாக "மூளை மாற்று அறுவை சிகிச்சை" செய்தால் தான் நோயாளி பிழைப்பார். உடனடியாக, மூளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

மூளை வேண்டுமானால் நானே ஏற்பாடு செய்துவிடுகிறேன் என்றார். "சரி, எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள்" என்று உறவினர்களில் பலரும் மருத்துவரை கேட்டு கொண்டார்கள். உறவினர்களில் ஒருவர் எவ்வளவு மூளைக்கு செலவாகும் என்றார்.

Thursday, November 11, 2010

காதலே பெரும்குழப்பம்

நான் முதல்முதலா பதிவிட விரும்புவது எப்பவுமே போர் அடிக்காத ஒரு விஷயம். அதாங்க "காதல்".

முதல காதலைபத்தி(அதாவது "காதல்" அப்ப்டிகிற வார்த்தைய) கொஞ்சம் பாப்போம். ஆங்கிலத எடுத்துகிட்டா LOVE அது வெறும் காதலை மட்டும் குறிக்காது. அதுவே அன்பு, நேசம், பாசம் இதெல்லாம் love நு தான் சொல்றாங்க.காதல் என்ற வார்த்தை தமிழை பொறுத்தவரை தனித்தன்மை பெற்றிருக்கு.

Wednesday, November 3, 2010

இந்த ரெண்டும் ஒட்டவே ஒட்டாது - 1

வாழ்க்கைல ஒட்டவே ஒட்டாத விசியங்கள்:
 1. தாமரை இலையும் தண்ணீரும்
 2. விடுமுறையும் வேலையும்
 3. நீயும் நானும்
 4. மக்கு பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளும்
 5. வயசானவங்களும் கணினியும்
 6. இதயமும் மூளையும்
 7. இட்லியும் pizza உம்
 8. அறிவியலும் மூடநம்பிக்கையும்
 9. ஒல்லியான பொன்னும் குண்டான பையனும்
 10. சிலர் நானும் கணக்கும்முனு சொல்லுவாங்க
 11. இந்தியாவும் பாகிஸ்தானும்
 12. DMK யும் ADMK யும்
 13. பெற்றோகள் நினைப்பதும் பிள்ளைகள் நினைப்பதும்
 14. தொழிலும் சந்தோசமும்
 15. திருமணமும் விடுதலையும்
 16. அழகான பொண்ணும் ஏழை பையனும்
 17. சாமியார்களும் குற்றங்களும் (உண்மையானு தெரியல)
 18. Twitter உம் facebook உம்
 19. நடைமுறையும் கற்பனையும்
 20. இதை படித்தவர்களும் மூளையும்

முத்தம்

முத்தம் அது நீங்கள் மட்டும் தனியாக கற்றுக்கொள்ள கூடியதில்லை. அப்படியே கற்று கொண்டாலும் அது theory ஆக தான் முடியும். Practical ஆக கட்ட்ருகொள்வது கொஞ்சம் சிரமமானது. பலருக்கு நேராக Practical test தான் பெயில் ஆனால் அது பெருத்த அவமானம்.

நீங்கள் உங்கள் இணையின் உதட்டை முத்தமிடுகிறேன் என்று உதட்டை கடித்து விட்டாலோ அல்லது உங்கள் இணை காலையில் பல் விளக்காமல் இருந்தாலோ அந்த முத்தம் உங்கள் வாழ்வில் பெருத்த வடு ஆகலாம். அது மட்டுமல்ல முத்தத்தின் மேல் ஒரு வெறுப்பை கூட உண்டு பண்ணலாம். முத்தத்தின் வணிக அருமையை உணர்ந்த சில கம்பெனிகள் பல் விளக்காமல் முதமிடோவொருக்கென சில spray களை வழங்கிவருகின்றன. இதை பல் விளக்குபவர்கள் கூட உபயோகிக்கலாம். முத்தம் fresh ஆக இருக்குமாம்.