Thursday, November 11, 2010

காதலே பெரும்குழப்பம்

நான் முதல்முதலா பதிவிட விரும்புவது எப்பவுமே போர் அடிக்காத ஒரு விஷயம். அதாங்க "காதல்".

முதல காதலைபத்தி(அதாவது "காதல்" அப்ப்டிகிற வார்த்தைய) கொஞ்சம் பாப்போம். ஆங்கிலத எடுத்துகிட்டா LOVE அது வெறும் காதலை மட்டும் குறிக்காது. அதுவே அன்பு, நேசம், பாசம் இதெல்லாம் love நு தான் சொல்றாங்க.காதல் என்ற வார்த்தை தமிழை பொறுத்தவரை தனித்தன்மை பெற்றிருக்கு.

இதெல்லாம் விடுங்க. கொஞ்ச நாளாவே நான் பெரிய குழப்பத்தில் இருக்கேன்.
அதாவது காதலப்பத்தி என்ன சொல்லறாங்கன்னா அழகு, பணம், வடிவம் (figure) இதெல்லாம் பாத்து வர்றது காதல் இல்லியமா! இப்படின்னு ஒரு குரூப் சொல்லுது. அதே குரூப் என்ன சொல்லுதுனா மனசுக்கு மகிழ்ச்சி தர்ற எதையும் காதலிக்கலாம்னு.

இப்ப விஷியதுக்கு வரேன் ஒரு அழகான பிகர பாத்தா நெஞ்சில ஐஸ் வச்ச மாறி சில்லுனு இருக்குதுள்ள. அவ திரும்மி பாத்த மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குதுள்ள, வந்து பேசுனா உலகமே மறக்குதுள்ள, மனசுக்கு சந்தோசமா இருக்குதுள்ள. அடுத்து பணம், பணமும் மனசுக்கு மகிழ்ச்சி தர கூடியது தான்.
இதெல்லாம் காதலிக்க கூடாதுன்னு ஏன் சொல்லி கொலப்புறேங்க.

அதனால அழகோ, பணமோ உங்களுக்கு புடிச்சிருந்தா தைரியமா யாரா வேணும்னாலும் காதலிங்கோ

இதுதான்டா இந்த நாட்டமையோட தீர்ப்ப்ப்ப்ப்ப்பு :)

No comments:

Post a Comment