Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts

Wednesday, October 12, 2011

பில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது எப்படி?

பில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது என்ன சாதாரண விசயமா அவர மாதிரியே நாமளும் கஷ்டப்பட்டு யோசிச்சா தானே சக்ஸஸ் பண்ணமுடியும்.  எப்படியாவது பில்கேட்ஸ் மாப்பிள்ளை ஆகிறலாம்ன்னு ஷேக்ஸ்பியர் ஹாம்லெட்டோட ஏழாவது அத்யாயம்ல இருந்து எட்டாவது குறளை எடுத்து கூகிள்ல கொஞ்சம் விவரங்களை தேடி பிடிச்சி ஒரு மாஸ்டர் பிளான் ரெடி பண்ணிருக்கேன். இந்த பிளான் ரொம்ப ரகசியமா இருக்கோனும்.. இல்ல பிளாப் ஆகிரும். கண்டிப்பா இது பில்கேட்ஸ்க்கு தெரியகூடாது.



பிளான்;
பில்கேட்ஸ் கிட்ட போய் அவர் பொண்ண என்னக்கு கட்டி வைங்கன்னு கேப்பேன்.. அவர் கண்டிப்பா மாட்டேன்னு தான் சொல்லுவாரு. என்ன இருந்தாலும் அவரும் ஒரு பொண்ண பெத்தவரு தானே! நான் வேர்ல்ட் பேங்க் CEO ன்னு சொல்லுவேன் அப்போ அவர் சந்தோசமா ஒத்துப்பாரு.. அவரு கண்டுபிடிசிட்டா? அப்படின்னு நீங்க கேக்கலாம் அங்க தான் மாஸ்டர் பிளான் இருக்கு வேர்ல்ட் பேங்க் போய் என்னை CEO வா அப்பாயன்ட் பண்ணுங்கன்னு சொல்லிருவேன்.. அவங்க கண்டிப்பா மாட்டேன்னு தான் சொல்லுவாங்க. நான் பில்கேட்ஸ் மாப்பிளை  என்னையே அப்பாயன்ட் பண்ண மாட்டியான்னு தமிழ் பட வில்லன் ரேஞ்சுக்கு சௌண்டா கேப்பேன் . அவங்களும் மரியாதைல அப்பாயன்ட் பண்ணிருவாங்க.  அப்பறம் என்ன பொண்ணும் கிடைச்சிட்டு வேர்ல்ட் பேங்க் CEO வாவும் ஆயாச்சு.. இனி கெட்டிமேளம் தான்!!

பின்குறிப்பு: 
ஏற்கனவே இந்த SMS எங்களுக்கு வந்துட்டுன்னு யாரும் கமென்ட கூடாது.

Thursday, May 19, 2011

எவ்வளவோ படிச்சிடீங்க இதையும் படிங்க...

இது ஒரு கதை அவ்வளோதான். இது ஒரு நகைச்சுவைக்காக எழுதபட்டது தான். 

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள். 

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப்  வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400  டீம்க்கு $100 லாபம்).

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள், "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல  "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க 

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் டாக்கிஸ்.