Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Saturday, September 17, 2011

ஒரு பெண்ணிடம் நேர்காணல்


எனக்கு பொழுதுபோகலை அதனால ஒரு பெண்ணிடம் சில கேள்விகள்  கேட்டேன். அவங்களுக்கும் பொழுதுபோகலை அதனால பதில் சொன்னங்க..  உங்களுக்கும் பொழுதுபோகலைன்னா இத படிங்க..

கேள்வி: மிஸ். உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீங்க எத்தனை வருசமா மிஸ்.உஷாவா இருக்கீங்க?
பதில்: பிறந்ததில் இருந்தே மிஸ் உஷா தான். 
(பெண்களால் ரசசியத்தை காக்கமுடியாதுன்னு யார்யா சொன்னா.. அவங்களோட  உண்மையான வயச சாகும்வரை ரகசியமாவே வச்சிருபாங்கலாம். அதற்கு இது ஒரு சாம்பிள்.)

கேள்வி: வருங்கால அமெரிக்க ஜனாதிபதி உஷா.. இந்த வாக்கியத்துல எத்தனை உண்மை இருக்கிறது?
பதில்: அது உறுதியா தெரியல.. ஆனா, சிறந்த குடும்பத்து குத்துவிளக்கு, நல்ல மருமகள், அன்பான மனைவி இப்படி சில பதவிகள் எல்லாம் கண்டிப்பா உண்டு.

கேள்வி: உங்க பிளஸ் என்னது?
பதில்: என்னோட  உயரம் 5.8. கூட்டத்துல கூட சைட் அடிக்க வசதியா இருக்கு.

கேள்வி:  நீங்க சைட் அடிக்கறத எதாவது அறிகுறி வச்சி தெரிஞ்சிக்கலாமா?
பதில்: எதோ முக்கியமான வேலைக்காக தான் உங்க பக்கம் திரும்பற மாதிரி நடிப்போம்.. ஆனா, அக்சுவலி அது சைட் தான்.. ஆஸ்கார் அவார்ட் வாங்கின நடிகர்களே தோத்து போயிருவாங்க.

கேள்வி: ஏன் எல்லா பொண்ணுகளும் தங்களை ஒரு உலகஅழகி ரேஞ்சுக்கு பீல் பண்றீங்க?
பதில்: நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை.

கேள்வி:  பசங்க என்ன பண்ணினா தான் நீங்க லவ் பண்ணுவீங்க?
பதில்: ஒரு தடவை முடிவு பண்ணிட்ட எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம். அதாவது, லவ் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட லவ் வந்தா கூட வெளிய சொல்லமாட்டோம்.. (தெளிவா குழப்பிடாங்கன்னு மட்டும் தெரியுது)

கேள்வி: "பாய்ஸ்" ரெண்டே வார்த்தையில் சொல்லுங்க? 
பதில்: பசங்க இல்லைனா பொண்ணுங்க லைப்பே போர். அஞ்சு வார்த்தை வந்துட்டு அட்ஜஸ்ட் பண்ணிகோங்க (இந்த பதிலுக்கு உங்களுக்கு அவார்ட் கொடுக்கலாம்)

கேள்வி: இன்றைய தலைமுறை பசங்களுக்கு நீங்க ஏதாவது அட்வைஸ் சொல்ல ஆசைபடுறீங்களா?
பதில்: அட்வைஸ் பண்ற அளவுக்கு பசங்க கெட்டு போய்டாங்களா... நீங்க நீங்களா இருங்க நாங்க நாங்களா இருக்கோம். பால்கோவான்ன இனிக்கனும் பாவக்காய்ன்னா கசக்கனும்..

கேள்வி: உங்களை ஒருத்தன் கரெக்ட் பண்ண பாக்கறான்.. அத தெரிஞ்சா என்ன செய்வீங்க?
பதில்: அட்வைஸ் பண்ணுவோம்.. அவன் பக்கதுல வரதுக்கே பயப்படற அளவுக்கு அட்வைஸ் பண்ணுவோம்.

கேள்வி: உங்கள் வாழ்க்கை லட்சியம்? 
பதில்: pass

கேள்வி: பெண்களை உண்மையா காதலிக்கற பசங்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?
பதில்: பொண்ணு ஒத்துகிட்டா பாருங்க.. இல்லாட்டி உங்களுக்கு ஆயிரம் பிகர் மடியும் மச்சி..

கேள்வி: உலகத்துல பசங்க எல்லாரும் ஓவர்நைட்ல சாமியாரா போய்டா என்ன பண்ணுவீங்க? 
பதில்: பிரியாணி சாப்ட்டு ப்ரீயா தூங்குவோம்.

கேள்வி: உங்க பெட்ரூம்ல ஒரு மெழுகுசிலை வைக்கறதா இருந்த அது யாரோட சிலையா இருக்கும்?
பதில்: கல்யாணம் முடியும் வரை சூர்யா.. கல்யாணத்துக்கு பிறகு கல்லானாலும் கணவன்.


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

கேள்வி: தமிழ்ல உங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை?  
பதில்: அரசியல். ஏன்னா, எனக்கு அரசியல் தெரியாது.. இத்துனூண்டு கூட..



Friday, March 11, 2011

பதிவர்களுக்கு சில பஞ்ச் டயலாக்

பதிவர்கள் பஞ்ச் டயலாக் இல்லமா கஷ்டபடுறதா எனக்கு உளவுத்துறை தகவல் வந்தது. அதுக்காத்தான் இந்த பஞ்ச் பதிவு.
  1. கண்ணா... படிக்கிறத படிக்காம இருக்க முடியாது. படிக்காம இருக்குறத படிக்க முடியாது.
  2. நான் எப்போ எழுதுவேன் எப்படி எழுதுவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்துல கரைக்ட்டா  எழுதுவேன்.
  3. ஆண்டவன் சொல்றான்.  பதிவு எழுதி முடிக்கிறான்.
  4. என் பதிவு... தனி பதிவு.... சீண்டாத தாங்கமாட்ட
  5. நாலு பேருக்கு பொழுதுபோகலைன்னா.... எந்த மாதிரி பதிவு போட்டாலும் தப்பில்லை. (டோன்ட டோன்ட டோன்ட டோய் டோன்ட டோய் )
  6. ஒருதடவை பப்ளிஷ் பண்ணிடேன்னா  என் பதிவை நானே தொட மாட்டேன்.
  7. எவ்வளவோ போஸ்ட் பண்ணியாச்சி இத பண்ண மாட்டமா...
  8. அசந்தா பதிவு போடுறது உங்க பாலிசி. அசராம கமெண்ட் போடுறது எங்க பாலிசி. 
  9. பிளாக்குறவனும் பிளாக்மெயில் பண்றவனும் ஒண்ணா சேர்ந்ததா சரித்திரமே கிடையாது.
  10.  மிளகுப்பு (என் ப்ளாக் பேருதான்) .... தமிழ்லயே எல்லாருக்கும் பிடிச்ச ஒரே ப்ளாக். (சில கொடுமையான விசயங்கள பொருத்துகணும்)
உங்களுக்கு ஏதாவது பஞ்ச் டயலாக் தெரிஞ்சா சொல்லுங்க அதையும் இதுல சேத்துகிடுவோம்.

Sunday, January 16, 2011

உடைகழைப்பும் உங்கள் குணாதிசியமும்

நீங்க டிரஸ் கழட்டும் முறையை (Clothe Removology) வைத்து உங்கள் குணாதிசியத்தை கண்டு பிடிச்சிரலாம். இதை கண்டுபிடிச்சது எவன்னு தெரியல. இது ஆண் பெண் எல்லாருக்கும் பொருந்தும்.

டிரெஸ்ஸை கழட்டி கண்ட இடத்தில் எறிபவரா நீங்கள், நீங்கள் எல்லோரிடமும் சுலபமாக நண்பர்களாகி விடுவீர்கள். எதையுமே பொறுமையா யோசிச்சி முடிவு எடுப்பீங்க. உங்க வீட்ல  உள்ள ஆட்கள் உங்க அறையை பத்தி, "என்ன இங்க ஏதும் புயல் வீச்சிச்சா?" அப்படின்னு கூட கேட்கலாம். ஆனால், மத்தவங்க நம்பள பத்தி என்ன நினைப்பார்கள் என்று கவலை பட மாட்டீர்கள். இது ங்க சந்தோசமாவும் சுதந்திரமாவும் இருப்பீர்கள்.

Wednesday, November 3, 2010

இந்த ரெண்டும் ஒட்டவே ஒட்டாது - 1

வாழ்க்கைல ஒட்டவே ஒட்டாத விசியங்கள்:
  1. தாமரை இலையும் தண்ணீரும்
  2. விடுமுறையும் வேலையும்
  3. நீயும் நானும்
  4. மக்கு பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளும்
  5. வயசானவங்களும் கணினியும்
  6. இதயமும் மூளையும்
  7. இட்லியும் pizza உம்
  8. அறிவியலும் மூடநம்பிக்கையும்
  9. ஒல்லியான பொன்னும் குண்டான பையனும்
  10. சிலர் நானும் கணக்கும்முனு சொல்லுவாங்க
  11. இந்தியாவும் பாகிஸ்தானும்
  12. DMK யும் ADMK யும்
  13. பெற்றோகள் நினைப்பதும் பிள்ளைகள் நினைப்பதும்
  14. தொழிலும் சந்தோசமும்
  15. திருமணமும் விடுதலையும்
  16. அழகான பொண்ணும் ஏழை பையனும்
  17. சாமியார்களும் குற்றங்களும் (உண்மையானு தெரியல)
  18. Twitter உம் facebook உம்
  19. நடைமுறையும் கற்பனையும்
  20. இதை படித்தவர்களும் மூளையும்