Sunday, January 16, 2011

உடைகழைப்பும் உங்கள் குணாதிசியமும்

நீங்க டிரஸ் கழட்டும் முறையை (Clothe Removology) வைத்து உங்கள் குணாதிசியத்தை கண்டு பிடிச்சிரலாம். இதை கண்டுபிடிச்சது எவன்னு தெரியல. இது ஆண் பெண் எல்லாருக்கும் பொருந்தும்.

டிரெஸ்ஸை கழட்டி கண்ட இடத்தில் எறிபவரா நீங்கள், நீங்கள் எல்லோரிடமும் சுலபமாக நண்பர்களாகி விடுவீர்கள். எதையுமே பொறுமையா யோசிச்சி முடிவு எடுப்பீங்க. உங்க வீட்ல  உள்ள ஆட்கள் உங்க அறையை பத்தி, "என்ன இங்க ஏதும் புயல் வீச்சிச்சா?" அப்படின்னு கூட கேட்கலாம். ஆனால், மத்தவங்க நம்பள பத்தி என்ன நினைப்பார்கள் என்று கவலை பட மாட்டீர்கள். இது ங்க சந்தோசமாவும் சுதந்திரமாவும் இருப்பீர்கள்.


டிரெஸ்ஸை கழட்டி பத்திரமா வைப்பவரா நீங்கள், நீங்கள் சீரியஸ்ஸான ஆளு. நீங்க எப்போமே அமைதியான சூழ்நிலைய விரும்புவீங்க. உங்களுக்கு எல்லாமே பெர்பெக்டா இருக்கணும். நீங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர். நீங்க குடுப்பத்து மேல அதிக கவனம் கொண்டவர்.


சட்டையை கழட்டி 10 நிமிடம் கழித்து பாண்ட்டை கழற்றுபவரா  நீங்கள், நீங்கள் தன்னம்பிக்கைவாதி. இயற்க்கையாவே நீங்க கொஞ்சம் புத்திசாலி. நீங்க எதையுமே ஆழமா ஆராஞ்சி பாத்து கேள்வி மேல கேள்வியா கேப்பீங்க. உங்களுக்கு கூட்டம், நெரிசல்னா அலர்ஜி. உங்களுக்கு ஓய்வு எடுக்குறது ரொம்ப பிடிக்கும்.

வாட்ச், செயின், ... எல்லாத்தையும் கழட்டிட்டு கொஞ்ச நேரம் கழித்து டிரெஸ்ஸை கழற்றுபவரா  நீங்கள், நீங்க ரொம்ப இளகிய மனம் கொண்டவர். நண்பர்களுக்கு அட்வைஸ் மேல அட்வைசா பண்ணு வீங்க. அதுனால உங்களை "கருத்து கந்தசாமி" ன்னு கூட உங்கள் நண்பர்கள் கூப்பிடலாம். நீங்க ரொம்ப ரொமாண்டிக்கான ஆளு.

வீட்டுக்கு வந்து எப்போடா டிரெஸ்ஸ மத்துவோம்ன்னு வேக வேகமா டிரெஸ்ஸை கழற்றுபவரா  நீங்கள், நீங்க மத்தவங்க நினைக்கிறத பத்தி கவலை படுபவர். நீங்க குடுபத்தை அதிகம் நேசிப்பவர். எப்போமே பிஸியா இருப்பீங்க. நீங்க அதிகமா மன அழுத்தத்துக்கு உள்ளாவீங்க. அதிகமா கோபப்படுவீங்க.

எல்லாநாளும் ஒரே மாதிரி இல்லாமல் வேற வேற மாதிரி டிரெஸ்ஸை கழற்றுபவரா  நீங்கள், நீங்க எதுலயுமே ஆர்வமா இருப்பீங்க. நீங்க ஒரு intresting character. உங்களுக்கு நல்லா ஊர் சுத்துறது பிடிக்கும். உங்களுக்கு "ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி". நீங்க சமூகபாங்கனவர்.

இதுல நீங்க எந்த ரகம்? ஓட்டோ கருத்தோ தயங்காம போட்டுருங்க.

1 comment:

Post a Comment