Friday, October 28, 2011

நான்சென்ஸ் தத்துவங்கள் - படித்து பயனுறுக

வாழ்க்கைக்கு தேவையில்லாத நான்சென்ஸ் தத்துவங்கள். படித்து பயனுறுக!

காஞ்ச மரத்தை உழுக்கினாலும் அதிலிருந்து  இலைகள் உதிர்வதில்லை.

பக்கத்துக்கு வீட்டு பிகர் ஆர்ம்'ஸ் காட்டினாலும் அசருவது இல்லை.

சுத்தாத காத்தாடி காற்று தருவதில்லை.

உருகிய ஐஸ்கிரீம் மீண்டும் உருகுவது இல்லை.

ஜூஸ் மீண்டும் பழம் ஆவதில்லை, நுரை மீண்டும் சோப்பு ஆவதில்லை. 

மழைதரும் மேகம் மண்ணை தொடுவதில்லை.

குறி பார்த்து தலையில் எச்சம் போடும் காக்கா, அதற்கு ஸ்பெஷல் ட்ரைனிங் எடுப்பதில்லை.

இதேபோல நீங்க ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிக்கனும்... இந்த பதிவுல பயன் உருற அளவுக்கு ஒன்னும் உருப்படியா இல்லை.

Thursday, October 13, 2011

முதல் திருமணம் - படிபவர்களுக்கு தலைவலி இலவசம்


தலைப்ப பாத்துட்டு இலக்கிய இலக்கண பண்டைய காப்பிய மேட்டர் எதாச்சும் இருக்கும்னு வந்தீங்களா! உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு! இந்த பதிவுல எனக்கு எப்படி முதல் திருமணம் நடந்ததுன்னு சொல்ல போறேன்.  ஆனா, நானும் இன்னும் பிரம்மச்சாரி தாங்க. கிளைமாக்ஸ் கொஞ்சம் செண்டிமெண்ட்டா இருக்கும் நீங்க அழக்கூடாது.

நான் சென்னையில் வலதுகால் வைத்த அந்த நாட்கள்ல இருந்து சொல்ல ஆரம்பிக்கறேன். சுமார் ஒரு 4 வருஷத்துக்கு முன்னாடி சென்னை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சிங்கம் சுத்திட்டு இருந்ததுன்னு பிரபல பத்திரிக்கை தலைப்பு செய்தி வந்தது. உங்களுக்கு எல்லாம் அது மறந்திருக்கலாம். எனக்கு அது நல்லா நியாபகம் இருக்கு. நீங்களே சொல்லுங்க அந்த சிங்கம் அத எப்படிங்க மறக்கும்.  ஸ்டேஷன் விட்டு வெளிய வந்ததும் கலைந்திருந்த தலைய சூறாவளி வந்து சுத்தம் பண்ணிட்டு போச்சு... சரி சரி.. திரைகதை எல்லாம் சொன்னா பக்கம் பக்கமா போயிரும் படிக்கற நீங்க பாவம்னு நினைச்சி கதைய மட்டும் சொல்றேன். 

நான் வந்து 23 வது நாள் "வேலைக்கு ஆள்தேவை" பேப்பரில் இந்த விளம்பரத்தை பார்த்தேன். உடனே போன் பண்ணினேன். கிளம்பி அந்த டார்கெட்கும் போய் சேர்ந்தேன். அங்கதான் அந்த தேவதைய முதல் முறையா பாத்தேன். ச.. என்ன ஒரு அழகு.. இது கண்ணா இல்ல ஆளை பார்வைலையே சுடற கன்னா.. கட்டினா இவளை தான் கட்டிக்கனும்ன்னு வழக்கமான  டயலாக் ஒன்னு மண்டைல ஓடிட்டே இருந்தது. கடைசில தான் தெரிஞ்சது அவங்க தான் என்னை இண்டர்வியூவ் பண்ண போற HR ன்னு. உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்னு நினச்சிட்டு நல்ல பிள்ளையா இண்டர்வியூவ் முடிச்சிட்டு சோகமா போய்டேன்.

சில நாட்கள் கழிந்தது. நானும் அவளை மறந்துட்டேன், ஒரு நாள் அவளே எனக்கு போன் பண்ணி எங்கிட்ட பேசினா என் ரெஸ்யூம்ல இருந்து என் நம்பர் எடுத்திருப்பா போல கள்ளி!!!. நான் கொஞ்சம் பெர்சனாலிட்டியான பையன் தான் என்று இங்கு சொல்ல கடமை பட்டிருக்கிறேன். அப்படியே நான் அவளுக்கு போன் பண்ணி பேச ஆரம்பிச்சேன். நான் பேச அவ பேச இப்படியே ரெண்டுநாள் கொஞ்சம் பேசிட்டே இருந்தோம். 

அடுத்த நாள்  எனக்கு முதல் கல்யாணம் நடந்துச்சு. அந்த கதைய தெரிஞ்சிக்க  மேல படிங்க. அன்னைக்கு காலைல என்னை அவ ஆபீஸ் வர சொன்னா. நானும் அவள பார்க்க சந்தோசமா போனேன். போனதும் ஆபர் லெட்டர் கொடுத்து வேலைல சேர சொல்லிடாங்க. அந்த வேலை தான் என் முதல் மனைவி. அத தான் நான் முதல கல்யாணம் பண்ணிகிட்டேன்!!!!!! இங்கிலீஷ் படம் மாதிரி கதைல என்ன ஒரு ட்விஸ்ட் இல்ல. எழுதும் போது எனக்கே கண்ணீர் வந்துட்டு  ரொம்ப செண்டிமெண்ட் இல்லையா, அதான்.

பின்குறிப்பு: நானும் HR ம் போன்ல பேசிட்டு இருந்தோம்னு சொன்னேன் என்ன பேசினோம்னு  சொல்லாம விட்டுட்டேன் . வேற ஒன்னும் இல்ல வேலைய பத்தி தான். இத முதல்லையே சொல்லிருந்தா கதைல ஒரு விறுவிறுப்பு இருந்திருக்காது.


Wednesday, October 12, 2011

பில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது எப்படி?

பில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது என்ன சாதாரண விசயமா அவர மாதிரியே நாமளும் கஷ்டப்பட்டு யோசிச்சா தானே சக்ஸஸ் பண்ணமுடியும்.  எப்படியாவது பில்கேட்ஸ் மாப்பிள்ளை ஆகிறலாம்ன்னு ஷேக்ஸ்பியர் ஹாம்லெட்டோட ஏழாவது அத்யாயம்ல இருந்து எட்டாவது குறளை எடுத்து கூகிள்ல கொஞ்சம் விவரங்களை தேடி பிடிச்சி ஒரு மாஸ்டர் பிளான் ரெடி பண்ணிருக்கேன். இந்த பிளான் ரொம்ப ரகசியமா இருக்கோனும்.. இல்ல பிளாப் ஆகிரும். கண்டிப்பா இது பில்கேட்ஸ்க்கு தெரியகூடாது.பிளான்;
பில்கேட்ஸ் கிட்ட போய் அவர் பொண்ண என்னக்கு கட்டி வைங்கன்னு கேப்பேன்.. அவர் கண்டிப்பா மாட்டேன்னு தான் சொல்லுவாரு. என்ன இருந்தாலும் அவரும் ஒரு பொண்ண பெத்தவரு தானே! நான் வேர்ல்ட் பேங்க் CEO ன்னு சொல்லுவேன் அப்போ அவர் சந்தோசமா ஒத்துப்பாரு.. அவரு கண்டுபிடிசிட்டா? அப்படின்னு நீங்க கேக்கலாம் அங்க தான் மாஸ்டர் பிளான் இருக்கு வேர்ல்ட் பேங்க் போய் என்னை CEO வா அப்பாயன்ட் பண்ணுங்கன்னு சொல்லிருவேன்.. அவங்க கண்டிப்பா மாட்டேன்னு தான் சொல்லுவாங்க. நான் பில்கேட்ஸ் மாப்பிளை  என்னையே அப்பாயன்ட் பண்ண மாட்டியான்னு தமிழ் பட வில்லன் ரேஞ்சுக்கு சௌண்டா கேப்பேன் . அவங்களும் மரியாதைல அப்பாயன்ட் பண்ணிருவாங்க.  அப்பறம் என்ன பொண்ணும் கிடைச்சிட்டு வேர்ல்ட் பேங்க் CEO வாவும் ஆயாச்சு.. இனி கெட்டிமேளம் தான்!!

பின்குறிப்பு: 
ஏற்கனவே இந்த SMS எங்களுக்கு வந்துட்டுன்னு யாரும் கமென்ட கூடாது.

Monday, October 3, 2011

சண்டே குளிக்காதீங்க - இத முதல்ல படிங்க

சண்டே குளிச்சா பல பிரச்சனைகள் லைப்ல வருது என்பது பலர் அறியாத உண்மை.. எப்படின்னு கேட்கிறீங்களா கீழபடிங்க நீங்களே ஒத்துபீங்க.

சண்டே குளிச்சா வெளிய போகலாம்ன்னு தோனுது, வெளிய போன எந்த பிகரையாவது  சைட் அடிக்கலாம்னு தோனுது, சைட் அடிச்சா அப்படியே கொஞ்சம் சிக்னல் காட்டலாம்னு தோனுது, சிக்னல் வந்தா அப்படியே கொஞ்சம் பேசலாம்ன்னு தோனுது, அப்படியே பேச ஆரம்பிச்சா கடலை போடலாம்னு தோனுது, கடலை போட்டா அப்படியே நெக்ஸ்ட் சண்டே ப்ரீயான்னு கேக்க தோனுது, ப்ரீன்னு சொன்னா வெளிய போகலாமான்னு கேக்க தோனுது, எங்க போகலாம்னா பீச்க்கு போகலாம்ன்னு தோனுது, பீச் போன பைக்ல தான் போகனும்னு தோனுது, பைக்ல போன சடன் பிரேக் போடனும்னு தோனுது, அங்க போன அவ ரசிக்கிறதை எல்லாம் நாமளும் ரசிக்கனும்னு தோனுது, அப்படியே ரசிச்சா அதுக்குள்ள டைம் ஆகிடுச்சானு தோனுது, அப்படியே ட்ராப் பண்ணும் போது நெக்ஸ்ட் சண்டே சினிமா போலாமான்னு கேக்க தோனுது, அப்படியே போனாலும் நல்ல ரொமாண்டிக் மூவிக்கு போகலாம்ன்னு தோனுது, அப்படியே மூவி போனாலும் படத்த பாக்காம அவளை பாக்கலாம்னு தோனுது, படம் முடிஞ்சதும் அப்படியே  ஐஸ்கிரீம் பார்லர் போலாம்ன்னு தோனுது, கடைகாரர் நீங்க கேட்ட ப்லேவர் ஒன்னே ஒன்னுதான் இருக்குனு சொல்லனும்னு நினைக்க தோனுது, அவளும் "இட்'ஸ் ஓகே ஒன்ன ரெண்டுபேரும் ஷேர் பண்ணிக்கலாம்"ன்னு சொன்ன நன்னா இருக்கும்னு தோனுது, அப்பறம் அன்னைக்கு நைட் எல்லாம் ஒரே கவிதையா தோனுது, கடைசில இது தான் லவ்வோன்னு தோனுது, அடுத்தநாள் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணிடலாம்னு தோனுது, ஆனா பாருங்க அவ மட்டும் ஒத்துகிட்டா லைப்லாங்  கஷ்டம்னு மட்டும் தோனவே மாட்டிகுது.இதெல்லாம் தேவையா? பேசாம சண்டே குளிக்கமா ஒரு ஓரமா மூடிகிட்டு தூங்கினா இந்த பிரச்சனை எல்லாம் வருமா..யோசிங்கபா.. நல்லா யோசிங்க o: