Saturday, January 8, 2011

நீங்கள் புத்திசாலியா?

எத்தனை நாளுக்கு தான் மொக்கை பதிவை எழுதுவது ஒரு மாற்றத்துக்காக நீங்க புத்திசாலியான்னு சோதிச்சி பாக்க போறேன். ஒன்னும் இல்ல ரெண்டே ரெண்டு கேள்விதான் கொஞ்சம் யோசித்து பதில் சொல்லுங்க.

ஒன்னாவது கேள்வி:

ஒரு அறை அதற்கு ஒரே ஒரு கதவு கதவை மூடிட்டா ஒரு சிறிய வெளிச்சம் கூட அந்த அறைக்கு உள்ளேயோ வெளியவோ போகாது. அந்த அறைக்கு உள்ள ஒரே ஒரு பல்பு.

அந்த அறைக்கு வெளிய மூன்று சுவிட்ச். இப்போ உங்க வேலை என்னன்னா அந்த மூணு சுவிட்ச்ல எது அந்த பலப்போட சுவிட்ச் அப்படின்னு கண்டுபிடிக்கிறது தான்.


இதென்ன பெரிய விஷயம் ஒவ்வொரு சுவிட்ச்சா போட்டு பாத்து சுலபமா கண்டுபுடிச்சிருவோம்ல அப்படின்னு நீங்க நினைப்பீங்க. அவசரபடாதீங்க உங்களுக்கு சில விதி முறைகள் இருக்குது.
  1. அறையோட கதவு மூடிதான் இருக்கும்.
  2. நீங்க ஒரு முறை கதவை திறக்கலாம்.
  3. கதவை திறக்கும் போது ஒரு சுவிட்ச் தான் ON - ல இருக்கணும்.
  4. பல்பை கலட்ட கூடாது .
  5. கதவை திறந்த பிறகு  சுவிட்ச்சை தொட கூடாது.

ரெண்டாவது கேள்வி: 
ரோட்டல ஒரு பையனும் பொண்ணும் நடந்து போறாங்க. பையனோட மாமியார் பொண்ணோட மாமியாரோட அம்மா அப்படின்னா அந்த பையனுக்கும் பொண்ணுக்கும் என்ன உறவு? 

சரியான  பதில்கள் வரவில்லை எனில்  விடைகள்  விரைவில் வெளியிடப்படும்.


மத்தவங்க மூளையையும் சோதிக்கணும் இல்லையா? அதுக்கு ஓட்டு போட்டு உதவுங்கள்.

10 comments:

பாலா said...

1. முதலில் ஒரு ஸ்வீட்சை ஆன் செய்து விட்டு சிறிது நேரம் கழித்து அதை ஆப் செய்துவிட்டு, இன்னொரு சுவிட்சை ஆன் செய்ய வேண்டும். இப்போது அறைக்குள் சென்று பல்பை தொட்டு பார்த்தால் சூடாக இருப்பது முதல் ஸ்விட்சின் பல்ப். எரிந்து கொண்டிருப்பது தற்போது ஆன் செய்திருக்கும் பல்ப். மற்றொன்று இன்னொரு சுவிட்ச். அவ்வளவுதான்

2. மாமனாரும் மருமகளும் சரிதானா?

Unknown said...

@பாலா முதல் பதில் சரி. இரண்டாவது சரியல்ல.

BADUR said...

இரண்டாவது கேள்விக்கு பதில்

மாமனார்,மருமகள் என்று நினைக்கிறேன்...

(மண்டைய கொழப்ப வச்சிட்டீங்க்ளே.....

(முதல் கேள்விக்கு இன்னும் மண்டைய பிச்சுக்கிறேன்)

BADUR said...

முதல் கேள்விக்கான பதில்.

முதலில் மூன்று சுவிட்சுகளையும் ஆன் செய்து விட்டு சிறிது நேரம் ரூமின் வெளியேவே காத்திருக்கனும்.

பின் அந்த மூன்று சுவிட்சுகளையும் ஒவ்வொன்றாக தொட்டுப்பார்க்கனும்.

எந்த சுவிட்ச் சூடாக இருக்கிறதோ அந்த சுவிட்சை மட்டும் ஆனில் வைத்து ரூமை திறந்தால் உள்ளே பல்ப் எறியும்...

ஹா ஹா ஹா...

இந்த சின்ன கேள்விக்கு இப்படி மண்டைய குழப்பிக்கிட்டேன்.

(always Rock MR&A/C-Mechanical Refrigeration and Air Condition)

Unknown said...

@BADUR முதல் கேள்விக்கானா உங்கள் முயற்சி அருமை. இந்த கால ச்விட்ச்களுக்கு இது பொருந்தாது. வேற எதாவது முயற்சி பண்ணி பாருங்க.

இரண்டாவது சரியல்ல.

faris said...

1st kalvikki vidai:
kathavai thirakkum pothu oru switch ON la irukkum. enave ulla bulb erindu kondirundal athuve anda bulbin switch.

ulle bulb erinthu kondu irukka villai endral matra irandil onrai pottal athan moolam bulb erindal athuthan switch.

athuvum eriya vittal Moonravathu Switch than ulle ulla bulbin Switch.

easya kandu pidichcidalame

2nd kalvikki vidai:
Mama - Marumahal

Unknown said...

@faris உங்களுக்குத்தான் 5 வது பாயிண்ட் போட்டுருக்கேன்

BADUR said...

பாலாவின் பதில் அற்புதம்....

இரண்டாம் கேள்விக்கு பதில் என்ன...?

Unknown said...

இரண்டாம் கேள்வி:

சித்தப்பா தான் சரி
http://twitpic.com/3kkjuq

Anonymous said...

2 ND ANSWER HUSBAND AND WIFE 9941994159 THIS IS MY NUM

Post a Comment