நானும் என்னோட நண்பர்களும் ஒரு உயிர்தர உணவகத்துக்கு ஒரு பார்ட்டிக்கு போயிருந்தோம். அங்கே சாப்பாடு ரொம்ப அருமையான மனத்தோட இருந்தது. திடீர்ன்னு அங்கே செப் மொக்கைசாமியை பார்த்தேன் அவரு என்னோட நண்பன் தான். அவர் தான் அந்த உணவத்தோட சீப் குக்.
செப் மொக்கைசாமி, எப்படி இருக்க? உங்கவீட்டு பக்கத்துல கேரள குட்டி எப்படி இருக்கா? அப்படி இப்படி விசாரித்து பேசிகிட்டு இருந்தோம். ஏன் இங்க உணவுகள் எல்லாமே அற்ப்புத மனத்துடன் இருக்குதுன்னு அவன்கிட்ட கேட்டேன்.
இதெல்லாம் எங்களோட பரம ரகசியம் அதெல்லாம் எப்படி வெளிய சொல்லறது ன்னு சொன்னான். வெக்கபடாம சொல்லு ன்னு சொல்ல அவன் தயங்கிகிட்டே சொல்ல ஆரம்பிச்சான்.
அது வேற ஒன்னும் இல்லடா.... அதாவது எனக்கு கீழ சில குட்டி செப் வேலை பாப்பாங்க. என்னோட வேலை குட்டி செப்கள் எப்படி சமைச்சாலும் அதோட மனத்த கூட்றது தான். அதுக்கு எனக்கு தேவை 5 பாட்டில் பாடி ஸ்ப்ரே, 4 பாட்டில் சென்ட் அவ்வளவு தான். நான் எல்லா உணவிலும் கொஞ்சம் கொஞ்சம் ஸ்ப்ரே தெளிப்பேன் அவ்வளவு தான். அதுக்கப்பறம் சாப்பாடுல கமகம வாசனை வரும்.
இதை நீ உங்கள் வீட்டுலயும் கூட பண்ணலாம். பாடி ஸ்ப்ரே கொஞ்சம் காஸ்லி ன்னு நினைச்சா நீ காக்ரௌச் ஸ்ப்ரே, மஸ்கிட்டோ ஸ்ப்ரே கூட உபயோகிக்கலாம். அது கூட நறுமண வாசனைகளில் கிடைக்கிறது. அப்படின்னு சொன்னான் செப் மொக்கைசாமி. எனக்கு வாயில் இருந்து வார்த்தையே வரலை ஏன்னா நான் அங்கே அந்த சாப்பாட சாப்டுட்டுத்தான் பேசிட்டு இருந்தேன்.
அப்படியே நான் அங்கே இருந்து கிளம்பினேன். "டேய், இந்த ரகசியத்த யார்கிட்டயும் சொல்லிறாதே" ன்னு சொன்னான். நானும் தலையை ஆட்டிகிட்டே வந்துட்டேன்.
நான் விடுவனா உங்க எல்லார் வீட்டு சாப்பாடும் கமகமக்கணும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த டிப்சை உங்க எல்லாருக்கும் சொல்லிட்டேன். இனிமே நீங்களும் கமகமன்னு சமைக்கலாம்.
வர்ர்ர்ர்டா .......
பிகு: இது முழு கற்பனை
6 comments:
vadai
அடடா அருவாளை வீட்டுல வச்சிட்டு வந்துட்டேனே....
Great Mokkai
அய்யய்யோ பிகு பார்க்காம செய்து விட்டேனே....
@BADUR ஐயய்யோ... முதல்ல ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க :P
நன்றி மனோ, விக்னேஷ் :)
Post a Comment