Thursday, July 14, 2011

கடைசில என்னையும் கவிஞன் ஆகிட்டாங்களே - கவிதை தொகுப்பு (பகுதி -2)

சிரிப்பின் ஒலி.
ஒவ்வொரு நரம்பிலும் அதிர்ந்து கொண்டிருக்கிறது.. நீ சத்தமின்றி சிரித்த சிரிப்பின் ஒலி.

நீ பேசுகிறாய்
நீ என்னிடம் ரகசியமாய் பேசும் வார்த்தைகளை ஒட்டுகேட்கவே நம்மருகில் வருகின்றன வண்ணத்துபூச்சிகள்.கடன் கொடு
ஒரு முத்தமாவது கடனாக கொடு. கண்டிப்பாக வட்டியோடு திருப்பி தருகிறேன்.!

தென்றல் காற்றே
தென்றலுக்கும் கூட பொறாமை இருக்கும். எங்கள் நெருக்கத்தில் அதற்கு கூட இடம் இல்லையே! 

நீ இருக்கமாட்டாய் தென்றலே
என்னவளின் பூவிழியில் தூசு இட்ட தென்றலே. என் கண்ணில் பட்டுவிடாதே! பின் யாரும் ரசிக்க நீ இருக்க மாட்டாய்!

நீ கள்ளியடி
நமக்குள் இடைவெளி தேவை என்று கூறி, நீ என் விரல்களை இறுக பிணைப்பதே நீ பொய்யாக கூறியதை கட்டவிழ்த்து விடுகிறது. 

தனிமை 
தனிமையை என்றும் உணர்ந்ததே இல்லை. உன்னை சந்திக்கும் வரை.!!

தேன் கொடு
தேனீக்கள் உன் உதட்டை வட்டமிடுகிறதே.. அவைகளுக்கும் தேன் வேண்டுமாம்!!Monday, July 11, 2011

சப்பை பிகரும் பிகரே!! - கவிதை தொகுப்பு

இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரையும் காயபடுத்த அல்ல. சும்மா உலுலுலுலாய்க்கு. உலகில் எல்லா பெண்களும் அழகே!!

எத்தனை நாள் தான் அழகான பிகருங்களுக்காகவே கவிதை எழுதுறது. சப்பை பிகருங்களையும் கவனிச்சு கவிஞர்கள் கவிதை எழுதவேண்டும். என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தொடக்கம்.. நானே இந்த பதிவின் மூலம்  பிள்ளையார் சுழி போடுறேன்.

கொலு கொளு பொம்மைகள்
உங்கள் வீட்டிலே கொலு வீற்றிருக்கும் கல் பொம்மைகள் அருகில் செல்லாதே.. அவையும் உன்னை கண்டு கொலுவில் இருந்து ஓடிவிடலாம்! 

சப்பை
நீ தான் சப்பை என்று நினைத்திருந்தேன்.. இல்லை.. உன் மூக்கு உன்னை விட சப்பை.. !

நரக வேதனை
தினமும் உன் சிரிப்பில் அழும் உன் அறை கண்ணாடியை விட நரக வேதனையை அனுபவிக்கும் பொருளும் உலகில் உண்டோ!!! 


உன்னை தேடி 

மிருககாட்சிசாலையின் பக்கம் தவறியும் சென்றுவிடாதே!! அங்கே ஒரு கொரிலாகுரங்கு ஜோடி தேடி அலைகிறதாம்!! உன் புகைபடம்
என் வாகனத்தின் முன் எலுமிச்சைபழம், திருஷ்டிக்காக. எனக்கோ அது எனக்கு தேவை இல்லை.. என்னிடம் இருக்கிறது உன் புகைபடம்!! 

பிழைத்தது என் கண்கள்
அதோ அங்கே ஒரு எருமை கூட்டம்.  அங்கே உன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தப்பித்து பிழைத்தது என் கண்கள்.. !

நட்சத்திரங்கள்
நீ பார்த்து இளிததும் சுக்குநூறாக உடைந்த நிலாவின் சில பாகங்களே  நட்சத்திரங்கள்.. !

முத்தம் ஒரு குத்தம்
முத்தம் ஒன்று நீ கேட்டால்,  சத்தம் இன்றி போகும் அதை காதால் கேட்டவனின்  உயிர்..!

உன் பார்வை  
இனி யாரையும் பால் ஊற்றி கொல்லவேண்டாம்.. உன்னை ஒரு நிமிடம் பார்க்க வைத்தாலே போதும்.. !

ஒளிந்து கொள்ளும் இதயம் 
உன்னை காணும் வரை லப்டப் என சீராக துடிக்கும் இதயம், உன்னை கண்டதும்  ஓடி சென்று என் முதுகின் பின்னே சென்று ஒளிந்து கொள்கிறது. !!

அணு ஆற்றல்
அணுவை துளைத்து ஆற்றல் எடுத்தால் கதிர்வீச்சு. உன்னை காணும் நாள் எல்லாம் எனக்கு நாசமா போச்சு..!!

சப்ப பிகருக்காக சப்ப கவிதைகள் எழுதியாச்சு..   இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. "எல்லா புகழும் இறைவனுக்கே!!" ஏ.ஆர் ரகுமான் சொன்னது. "எல்லா பெண்களும் அழகே!!" இது நான் சொன்னது.Saturday, July 2, 2011

இது ஒரு காதல் கடிதம்

அன்புள்ள என்னுயிர் தோழிக்கு, 

உனக்கு காதல் கடிதம் எழுதலாம் என்று எழுத ஆரம்பித்து விட்டேன்.. ஆனால், என்ன எழுதுவது என்று தெரியவில்லை. உன்னை காதலிக்க சொல்லி இந்த கடிதத்தை நான் எழுதவில்லை. என் இதயம் அமர்ந்த உனக்கு என் காதலை தெரியபடுத்தவே இதை எழுதுகிறேன்.  உன்னை எப்படி காதலிதேன் என்பதும் எனக்கு புரியவில்லை. நீ என்னை காதலிக்கிறாயா என தெரியவில்லை. நீ என்னோடு இல்லை என்றாலும் நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. நீ சென்ற பாதையில் என்றாவது நடப்பேன் என்று நடையாய் நடக்கிறேன்.. நீ சுவாசித்த காற்றை நான் என்றாவது சுவாசிபேன் என்ற எண்ணத்தில் நான் இப்போதும் சுவாசித்து கொண்டிருக்கிறேன். 


நீ இட்ட கோலம் கண்டேன், ரசித்தேன்.  நீ சூடி அழகேற்றிய மலர் கண்டேன், மெய் சிலிர்த்தேன். உன் மூக்கில் அமர்ந்திருக்கும் மூக்குத்தி கண்டேன், உன் பெண்மையை ரசித்தேன். உன் காதுகளில் அலங்காரமாய் கம்மல் கண்டேன், ஏனோ அவைகளை பழித்தேன். ஏனோ, உன்னை மட்டும் இதுவரை முழுதும் காணாமல் இருந்து விட்டேன். உன்னை நித்தமும் காண முயல்கிறேன். நீ என்னுள்ளே இருந்தாலும் என்னருகே அமர்ந்தாலும் என்னோடு நடந்தாலும் எனக்கு தெரிவது உன் உள்ளத்தின் உருவம் மட்டுமே!

உன்னை ஒவ்வொரு நாளும் சுற்றி வந்ததாய் பெருமைபடும் சூரியனை போல நானும் ஒவ்வொரு நாளும் உன் வார்த்தைகள் என்னை சுற்றி வருவதை கண்டு நிதம் மகிழ்கிறேன். நீயோ என்னிடம் பிடித்தவைகளை பேசுகிறாய். ஆனால், எனக்கோ உன்னிடம் பேசிகொண்டிருப்பதே பிடித்து போய் விட்டது. அன்றொருநாள் கனவில் "பார்க்காமலே காதலிக்கிறப் பழக்கம் மீன்களுக்குண்டு" என்கிறேன். அதை கேட்டு அதிசயித்து கண்களை உருட்டினாய். "சந்திக்காத காதல் மீன்கள் இரண்டும் ஒன்றுபோல உருள்கின்றன" என்று நான் எனக்குள்ளேயே நினைத்து கொண்டேன். எத்தனை கவிதை எழுதியும் படித்தும் உன்னை வர்ணிப்பதில் திருப்தி அடையாதவனகவே இருக்கிறேன்.

எனக்கு காதல் கடிதம் எழுதி அனுபவமில்லை.. ஏதோ, என்னுள்ளான உன் நினைவுகளை இங்கே எழுதி இருக்கிறேன். பிடிக்கவில்லை எனில் கசக்கி எரிந்துவிடாதே!! இதயத்தை தான் வைத்து கொண்டாய், இதையாவது என்னிடம் திருப்பி கொடுத்துவிடு! என்னிடம் இருக்கும் உன் நினைவுகளில் ஒன்றாக இதையும் பத்திர படுத்திகொள்கிறேன்.
இப்படிக்கு,
அன்புள்ள தோழன்..

இத படிச்சி புட்டு யாரும் எனக்கு எழுதிகொடுங்க எனக்கு எழுதிகொடுங்கன்னு  தொல்லை பண்ண கூடாது.. நான் ரொம்ப பிஸி...