Wednesday, January 26, 2011

அடடே ஆச்சர்ய குறி

ஆசிரியர் : டேய், ஏண்டா தரைல உக்காந்து கணக்கு போட்டு கிட்டு இருக்குற?
மாணவன் : நீங்க தானே சொன்னீங்க டேபிள் உபயோகிக்காம கணக்கு போடுன்னு!.


Monday, January 17, 2011

உலகம் அழிய போகுதாம் - பின்விளைவுகள்

இந்தஉலகம் அழிய போகுதுன்னு நிறைய வதந்திகள் மனிதன் தோன்றின காலத்திருந்தே தோன்றியவை. அதுல நான் பிறந்த பிறகு 2000 ம் ஆண்டில் உலகம் அழிய போகுதுன்னு பரவின வதந்தி மிக பிரபலமானது. அது வெறும் வதந்தியாகவே முடிஞ்சி போச்சி. அடுத்து 2012 ம் ஆண்டுன்னு ஒன்னு கிளம்பிருக்குது. இது போதாதுன்னு மே 21, 2011ம் ஆண்டுன்னு ஒன்னும் கிளம்பிருக்குது.

இது போன்ற விசங்களினால் சில பின்விளைவுகள் ஏற்படுது அததான் இப்போ உங்க கிட்ட சொல்லபோறேன். இப்போ இருந்து கொஞ்சம் பின்னாடி ஒரு 11 வருடம் சென்றால் 1999 நான் அப்பொழுது 7-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். 2000 ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் அழிய போகுதுன்னு பரவின வதந்தி எங்க பள்ளியில ரொம்ப பிரபலமானது. 1999 டிசம்பர் மாதமும் வந்துருச்சி அப்போதான் எங்களுக்கு அரையாண்டு பரீட்சை அப்போ எங்க வகுப்பறையில் ஒரு கூட்டம் 2000 தில் தான் தான் உலகம் அழிய போகுதே நாம எதுக்குயா படிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு சந்தோசமா திரிஞ்சிட்டு இருந்தது.
அப்படியே அந்த பரிட்சையும் ஓபி அடிச்சிட்டாங்க. ஆனால் அவங்க நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கல. விடுமுறைக்கு பின் பரிட்சையில் முட்டை மதிப்பெண் வங்கி ஆசிரியர் கிட்ட அடிவாங்கினது தான் மிச்சம்.


சரி சின்ன பசங்க தான் அப்படி இருக்குறாங்கன்னு பாத்தா பெரியவங்க அதுக்கு மேல பண்ணிருக்காங்க. எனக்கு தெரிஞ்ச பக்கத்து வீட்டு மாமா என்ன பண்ணாருன்னா. 2000 தில் உலகம் அழிஞ்சிரும் அதுனால வாழ்க்கைய அதுக்கு முன்னாடி அனுபவிக்கனும் அப்படின்னு லட்ச கணக்கில் கடன் வாங்கி வாழ்க்கைய அனுபவிசிருக்காரு. பாவம் இன்னும் அந்த கடனை அடைச்சிக்கிட்டு இருக்காருன்னா பாத்துகோங்க.

இதெல்லாம் என் கண் முன்னால் நடந்தது நான் எழுதிட்டேன். இன்னும் எத்தனை தெரியாமல் நடந்துருக்குதோ தெரியல. உலகம் இன்னைக்கு அழியுதோ நாளைக்கு அழியுதோ உங்க கடமையை மறக்காம செஞ்சுருங்க. அம்புட்டு தான்.

எப்போ பாத்தாலும் மொக்கையே போடுரயே என கேட்ட பல நண்பர்களுக்கு இந்த பதிவு ஒரு மரண அடியாக இருக்கும் என நம்புகிறேன்.

கீழபாருங்க  Voting Widgets தெரியும். தெரியலன்னா உங்க monitor ஐ நல்லா தொடச்சிட்டு பாருங்க. இப்போ தெரியுதா? ஒரு குத்து குத்திட்டு போய்டே இருங்க.

Sunday, January 16, 2011

உடைகழைப்பும் உங்கள் குணாதிசியமும்

நீங்க டிரஸ் கழட்டும் முறையை (Clothe Removology) வைத்து உங்கள் குணாதிசியத்தை கண்டு பிடிச்சிரலாம். இதை கண்டுபிடிச்சது எவன்னு தெரியல. இது ஆண் பெண் எல்லாருக்கும் பொருந்தும்.

டிரெஸ்ஸை கழட்டி கண்ட இடத்தில் எறிபவரா நீங்கள், நீங்கள் எல்லோரிடமும் சுலபமாக நண்பர்களாகி விடுவீர்கள். எதையுமே பொறுமையா யோசிச்சி முடிவு எடுப்பீங்க. உங்க வீட்ல  உள்ள ஆட்கள் உங்க அறையை பத்தி, "என்ன இங்க ஏதும் புயல் வீச்சிச்சா?" அப்படின்னு கூட கேட்கலாம். ஆனால், மத்தவங்க நம்பள பத்தி என்ன நினைப்பார்கள் என்று கவலை பட மாட்டீர்கள். இது ங்க சந்தோசமாவும் சுதந்திரமாவும் இருப்பீர்கள்.

Saturday, January 15, 2011

கல்லு ஒன்னு மாங்கா ரெண்டு

அதாவது நேற்று ஒரு கனவு அத தான் உங்களுக்கு சொல்ல போறேன். அது ஏற்கனவே என்னோட சின்ன வயசுல யாரோ சொன்ன கதை தான் இது. அததான் இப்போ உருட்டி திரட்டி சொல்லபோறேன்.

அதாவது நானும் என்னோட Program Manger ம் ரயில்ல மும்பை போய்கிட்டு இருக்கோம். ரயில்ல ஏறதுக்கு முன்னாடியே நம்ம கோச்ல எத்தனை பிகருங்க இருக்குதுன்னு List பாக்குறது வழக்கம். கனவுங்கரதுனால வழக்கத்த விட முடியுமா என்ன?  ஏதோ கொஞ்சம் பிகருங்க இருந்தது.

அதுல பாருங்க எனக்கும் PM க்கும் பக்கத்து சீட் தான். ஆனா என்னோட சீட்க்கு எதிர் சீட்ல ஒரு சூப்பர் பிகரு அவுங்க பாட்டிமா கூட வந்து உகாந்துருந்தா. நானும் ரொம்ப நேரமா அந்த பிகரையே பாத்துட்டு இருந்தேன். அந்த பிகரும் என்னையே பாத்துகிட்டு இருந்தா. ரெண்டு பேரும் மாறி மாறி நூல் விட்டுகிட்டு இருந்தோம். கொஞ்சம் கொஞ்சம் சிக்னல் பரிமாறிகிட்டோம்.

Monday, January 10, 2011

கமகம சமையல் செப் மொக்கைசாமி

நானும் என்னோட நண்பர்களும் ஒரு உயிர்தர உணவகத்துக்கு ஒரு பார்ட்டிக்கு போயிருந்தோம். அங்கே சாப்பாடு ரொம்ப அருமையான மனத்தோட இருந்தது. திடீர்ன்னு அங்கே செப் மொக்கைசாமியை பார்த்தேன் அவரு என்னோட நண்பன் தான். அவர் தான் அந்த உணவத்தோட சீப் குக்.

செப் மொக்கைசாமி, எப்படி இருக்க? உங்கவீட்டு பக்கத்துல கேரள குட்டி எப்படி இருக்கா? அப்படி இப்படி விசாரித்து பேசிகிட்டு இருந்தோம். ஏன் இங்க உணவுகள் எல்லாமே அற்ப்புத மனத்துடன் இருக்குதுன்னு அவன்கிட்ட கேட்டேன்.

Saturday, January 8, 2011

நீங்கள் புத்திசாலியா?

எத்தனை நாளுக்கு தான் மொக்கை பதிவை எழுதுவது ஒரு மாற்றத்துக்காக நீங்க புத்திசாலியான்னு சோதிச்சி பாக்க போறேன். ஒன்னும் இல்ல ரெண்டே ரெண்டு கேள்விதான் கொஞ்சம் யோசித்து பதில் சொல்லுங்க.

ஒன்னாவது கேள்வி:

ஒரு அறை அதற்கு ஒரே ஒரு கதவு கதவை மூடிட்டா ஒரு சிறிய வெளிச்சம் கூட அந்த அறைக்கு உள்ளேயோ வெளியவோ போகாது. அந்த அறைக்கு உள்ள ஒரே ஒரு பல்பு.

Monday, January 3, 2011

மல்லிகைபூ ரசம் வழங்குபவர் செப்.மொக்கைசாமி

வணக்கம் நான் தான் செப் மொக்கைசாமியோட நண்பன். அவருக்கு சமையல் மேல ரொம்பவும் தான் காதல். செப்.மொக்கைசாமி பத்தி அவரே எழுதுனா அது அவருக்கு அவமானம் அதான் அவர பத்தி நானே எழுதுறேன்.

செப்.மொக்கைசாமி பத்தி சொல்லனும்னா அவர் பேர பாத்து இவரு மொக்கைன்னு நினைச்சிராதீங்க. அவரு சமயைல்கலாவள்ளவர். இவரு புதுசா யாருமே முயற்சி செய்து பக்காதா அசத்தலான ரெசிபி மட்டும் தான் செய்வாரு. பிகருங்க விசியத்துல அவரு ரொம்ப கெட்டிக்காரர்.