Tuesday, December 28, 2010

13-ம் நம்பர் ஜாடி

ஒரு ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. நாட்டு வைத்தியர்க்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!Wednesday, December 22, 2010

டைட்டானிக் - மறைக்கப்பட்ட உண்மை

உங்களுக்கு மொக்கை தாங்கும் இதயம் இருந்தால் மட்டும் கீழே படிக்கவும்.

வணக்கம் நண்பர்களே, நீங்கள் எல்லாரும் "டைட்டானிக்" திரைப்படம்  பார்த்திருப்பீர்கள். அது ஒரு உண்மை கதை என்பது அனைவரும் அறிந்ததாகும். கப்பல் மூழ்கும் போது  நடந்த யாருக்கும் தெரியாத உண்மை ஒன்றை நான் இங்கு கூற போகிறேன். எனக்கு மட்டும்  எப்படி இந்த உண்மை தெரியும் என நீங்கள் கேட்கலாம்.

Tuesday, December 21, 2010

குச்சிமிட்டாய் - குட்டிகதை

ஒரு பையன் கிட்ட சில குச்சிமிட்டாய்கள் இருந்தது அதே மாதிரி ஒரு பொண்ணு கிட்ட வேற சில மிட்டாய்கள் இருக்குது. அந்த பையன் "உன்கிட்ட இருக்குற மிட்டாய்களையும் என்ன கிட்ட இருக்குற குச்சிமிட்டாய்களையும் மாத்திக்கலாமா? " ன்னு கேட்குறான். அந்த பொண்ணும் "சரி மாத்திக்கலாம்" ன்னு சொன்னாள்.

அவங்க சொன்ன மாதிரி ரெண்டு பேரும் அவங்க அவங்க மிட்டாய்களை மாற்றி கொண்டாங்க. ஆனால், அந்த பையன் மட்டும் தன்கிட்ட இருப்பதுலேயே நல்ல குச்சிமிட்டாய் ஒன்ன வச்சிகிட்டு மத்தது எல்லாம் கொடுத்தான்.

Monday, December 20, 2010

விஜய் வாழ்க! விஜய் வாழ்க!

உங்கள் மனதை கல்லாக்கி கொண்டு கீழே படிக்கவும். நான் எழுதும் போது அப்படிதான் எழுதுனேன்.

ஏன் இந்த உலகம் இளைய தளபதி "விஜய்" பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் ஏளனம் செய்து அவரை காமெடியன் ஆக்குகிறது  என்பது புரியாத புதிராக உள்ளது என்று நான் பொய் கூற  மாட்டேன் ஏனென்றால் அது உலகறிந்த விசயமாகும். அவரது தொடர்ந்த தோல்விகளால் அவரை அவர் ரசிகர்களாக இருந்தவர்களே கிண்டலடித்து கொண்டிருக்கிறார்கள்.

Saturday, December 18, 2010

பொது அறிவு தகவல்கள் - 2

மக்கள்தொகை முதல் 12 நாடுகள்:
 1. சீனா 
 2. இந்தியா
 3. அமெரிக்கா
 4. இந்தோனேசியா 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஏதாவது சீரியஸா எதிர்பாத்து வந்தீங்கன்ன நான் பொறுப்பில்ல 

ஒருநாள் ஒரு மைனாவுக்கு சுயம்வரம் வச்சாங்க. அந்த விழாவில் பல இனங்களை சேர்ந்த பறவைகள் கலந்துகிட்டு அந்த மைனாவ எப்டியாவது கல்யாணம் பண்ணிரம்ன்னு எல்லா பறவைகளும் ரொம்ப உற்சாகமா போட்டில கலந்து கிட்டுங்க.பலபோட்டிகள்வசாங்க எல்லா போட்டிலயும் ஒரு குருவியும் காக்காவும் முதல் இடத்த பிடிச்சது. ஆனால் ஒருத்தர மற்றும்தான் அந்த மைனா கல்யாணம் பண்ண முடியும். அதனால ஒரு "டை பிரேக்கர்" வைச்சாங்க. அது என்னன்னா மைனாவே வந்து அதுக்கு பிடிச்ச மாப்ளைய தேர்வு செஞ்சிக்கலாம் .

Friday, December 10, 2010

மொக்கை மன்னன் - போட்டி

ஆள் ஆளுக்கு கேள்வி கேக்குறாங்க. நானும் கொஞ்ச கேள்வி கேட்கிறேன்.அதிகமாக மொக்கை போடுபவர்களுக்கு மொக்கை மன்னன் பட்டம் கொடுக்கப்படும்.கிரீடம் கீழே.
 1. உங்கள் கணினியின் Mouse ஐ கிரேக்க மொழியில் எப்படி கூறுவீர்கள்? ( Mouse ன்னுதான் சொல்லுவேன்னு சொன்ன உங்க உடம்புல இருக்குற 3 லிட்டர் ரெத்தத்த உறிஞ்சிருவேன்.)

"A" ஜோக்ஸ் - பகுதி 2

 தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. "YESTERDAY I SAW A FILM.."
மாணவன்:- நேற்று டீச்சர் "A" படம் பார்த்தாங்க.. 
தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..
------------------------------------------------------------------------------------------------------------------------------
யானையும் எறும்பும் காதலிக்கின்றன. அனால் எறும்பின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு சொன்னங்க. ஏன் எதிர்ப்புசொன்னங்க?  பொண்ண பெத்தவங்கலாச்சே :p
(புரிசிருக்கும்னு நினைக்கிறேன்)
------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்: நான் sex education class கு வர  மாட்டேன்.
ஆசிரியை:  ஏன்?

Tuesday, December 7, 2010

கொசுவும் பறவை தாங்க - யுவர் ஆனார்

கொசுவும் பறவை இனம் தான், என்பதற்க்கான வலுவான ஆதாரங்களை நான் மிக கடினப்பட்டு திரட்டி இருக்கிறேன். அதை உங்களுக்கு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கொசுக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தெரிவிப்பதற்கு கடமை பட்டு இருக்கிறேன்.

முதலாவதாக, பறவைகளுக்கு பறவை என அவை பறப்பதால் பெயர்வந்ததாக நான் படித்த "Java Programming makes you insane" என்ற புத்தகத்தில் போட்டிருந்தார்கள். இதை வைத்து நன்கு யோசித்து பார்க்கும்போது கொசுக்கள் பறப்பதால் அவை பறவை இணைத்தே சேரும் என்னும் எண்ணம் தோன்றுகிறது


கவலைமறக்க கணிப்பொறி போதும்....

நீங்க உங்க வாழ்க்கைல தேவை இல்லாத சில விசியங்கள போட்டு குழப்பிகிட்டு உங்க உடல் நலத்தை கெடுத்துட்டு இருப்பீங்க. அதுக்கு கணிப்பொறி மூலம் ஒரு தீர்வு நான் சொல்றேன்.  உங்களுக்கு எப்பல்லாம் கஷ்டமா இருக்குதோ அப்போ இந்த செய்முறை செய்தலே போதும்.

Monday, December 6, 2010

கைபேசியின் கதறல்கள்

எல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.

கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. ( Message ஒன்று வந்தடைகிறது.)

செல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன Message வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "பொண்டாட்டி"ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..?

ஐயகோ... !!!! நீங்க இவ்ளோ நல்லவரா?

நீங்கள் : இப்போ தான் புதுசா ஒரு FERRARI Car வாங்கிருக்கேன். License இப்போ தான் புதுசா வாங்கிருக்கேன்.

நான் : 2 வருசமா ஒரே BIKE தான் use பண்ணிட்டு இருக்கேன்.

(ஒரு நாள் நீங்க நான் signalla நிக்கும் போது உங்க Car வச்சி என்னோட பைக்ல இடிச்சி என்னோட back light உடசிட்டேங்க)

நான்: (கோபத்தோடு bikea விட்டு எழுந்து வந்து உங்கள பிடிச்சி வெளியே இல்லுத்து) இடிச்சதுக்கு காச எடு

நீங்கள்: இல்லையே :)

அதிக சந்தோஷமே தூக்கத்தில் தான் - ஆய்வில் தகவல்

ஒருவரின் வாழ்க்கையில், இரவு நேரம் நன்றாக தூங்குவதே அதிகளவு சந்தோஷத்தை அளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 3,000 பேரிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், ஒருவரின் வாழ்க்கையில் அதிகளவு சந்தோஷம் தரும் விஷயம் எது என்று கேட்கப்பட்டது. இதில், ஒரு நாளின் நெருக்கடிகள் அனைத்தையும் மறந்து இரவு நன்றாக தூங்கி, மறுநாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பதே அதிகளவு சந்தோஷத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பாக்கெட்டில் எப்போதும், பணம் இருப்பது அதிக சந்தோஷத்தை தரும் என, சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


http://savoirbeds.co.uk/Images/the_importance_of_sleep.jpg


இதுகுறித்து, டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தை தருவது எது என்ற கேள்விக்கு, இரவு நன்றாக தூங்குவது என்பது முதலிடத் தையும், பாக்கெட்டில் பணம் இருப்பது இரண்டாம் இடத்தையும், படுக்கையில் துணையை கட்டிப்பிடிப்பது என்பது மூன்றாவது இடத்தையும், அழுகையுடன் சிரிப்பது நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த சூப் நிறுவனத்தை சேர்ந்த ராப் ஸ்டாசி என்பவர் கூறுகையில்,"ஒரு நாள் முழுவதும் கடினமாக உழைத்த பின், படுக்கைக்கு சென்று ரிலாக்ஸ் செய்வதால் கிடைக்கும் உணர்வே அதிகளவு சந்தோஷத்தை கொடுக்கும்!!!

பொது அறிவு தகவல்கள் - 1

மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.

பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்தவுடன் உடனே பறக்கத் துவங்கிவிடும்.

மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.

குரங்கின் மூளை கீழ் பகுதி மூளை, மேல் பகுதி மூளை என இரு பகுதிகளாக இருக்கிறது.

எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.

ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

கூடுகட்டி வசிக்கும் பாம்பு ராஜநாகம்.

அணலி எனற பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும்.

‌சி‌ட்டு‌க்குரு‌வி‌யி‌ன் இதய‌ம் ‌நி‌மிட‌த்‌தி‌ற்கு 1,000 முறை துடி‌க்கு‌ம்.

எறு‌ம்பு த‌ன் எடையை‌ப் போல 50 மட‌ங்கு எடையை இழு‌க்கு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டது.

ஒ‌ட்டக‌ம் சராச‌ரியாக 60 நா‌ட்க‌ள் வரை த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காம‌ல் இரு‌க்கு‌ம்.

‌தி‌மி‌ங்கல‌த்‌தி‌ற்கு 20 ஆ‌யிர‌ம் ப‌‌ற்க‌ள் வரை முளை‌க்கு‌ம்.

பூனைகளு‌க்கு இ‌னி‌ப்பு‌ச் சுவை தெ‌ரியாது.

ம‌னித உட‌லி‌ல் ‌மிகவு‌ம் கடினமான பகு‌தி ப‌ல்.

இரை‌த் ‌தி‌‌ன்னு‌ம் போது க‌‌ண்‌ணீ‌ர் வடி‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ம் முதலை‌.

இமயமலை‌யி‌ன் 8,000 ‌மீ‌ட்ட‌ர் உயர‌த்‌தி‌ல் கூட ஒரு சாதாரண‌த் தேரை‌யின‌ம் உ‌யி‌ர்வா‌ழ்வதாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

"காதல் start ஆகி 1 வருஷம் ஆய்டா?" உங்க மனசுல பல கேள்விகள் வரும்.

காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

Sunday, December 5, 2010

அதிக Friends / Followers வேண்டுமா? மாத்திபோடுங்க

எந்த social networking வலைத்தளத்திலும் அதிக Friends / Followers வேண்டுமென்றால் நீங்க பெருசா எதுவுமே பண்ண வேண்டாம். அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். மூளைய பயன்படுத்தி எதுவுமே பண்ணவேண்டாம். நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒன்னு ஒன்னே ஒன்னு உங்க profile name ஐ கொஞ்சம் change பண்ணினாலே போதுமானது.

உதரணத்துக்கு உங்கபேரு ராஜா என்றால் ராஜீ, அருண் என்றால் அருணா இவ்வளதாங்க. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரிஞ்ச்ருக்கும். அதான் உங்க gendera Female ஆ மாத்திபோடுங்க.

நீங்களும் ஆகலாம் வானிலை முன்னறிவிப்பாளர்

இந்த பதிவில் நான் எப்படி மிகத்துல்லியமான வானிலை முன் அறிவிப்புகளை சொல்வது என்று கூற போகிறேன். இதை நீங்கள் படித்து முடித்த பிறகு உங்கள பகுதிக்கி மட்டுமல்லாது உங்கள் நாட்டுக்கே ஏன் இந்த உலகத்திற்கே வானிலை முன்னறிவிப்பு கூற முடியும். அதுவும் நீங்கள் கூறும் முன்னறிவிப்பு அப்படியே நடக்கும்.


இதற்கு நீங்க பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான். நான் இந்த பதிவில் கூறுவதை அப்படியே உங்கள் மனதில் பொரிக்க வேண்டும்  நீங்க சொல்வது நடக்கும் என்ற நம்பிக்கை வளர்த்து கொள்ளவேண்டும்.

"காதல் start ஆகிடிச்சா? ட்ரைனிங் எடுத்து கோங்க"

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ட்ரைனிங் இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும்  இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

Saturday, December 4, 2010

"கேட்டதா சொல்லு" வார்த்தை - மனித தன்மை அற்ற செயல்

"கேட்டதா சொல்லு" இந்த வார்த்தையை உபயோகிப்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது ஒன்னே ஒன்னு தான்.

"கேட்டதா சொல்லு.... கேட்டதா சொல்லுனு சொல்றேங்களே தவிர என்னத்த கேட்கனும்னு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேன்றீங்க." இதுல வேற "கண்ணடிப்பா கேட்டதா சொல்லுனு சொல்றீங்க." அதான் கேட்டுறேன் என்னத்த கேட்கணும் இது பல சமயத்துல என்ன ரொம்பவே குழப்புது.

Friday, December 3, 2010

"A" ஜோக்ஸ்னா இதுதானா?

"A" ஜோக்ஸ் பிடிக்கதுணா படிக்கதீங்க. பிடிக்காமலா இவ்ளோ தூரம் link click பண்ணி வந்துருக்கீங்க. கூச்ச படாம படிங்க :D

ரணகலத்திளையும் குதூகலம்:
ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழப்போகிறது. அதில் இருந்த பெண் பயணி பித்துபிடித்த மாதிரி குதித்துக்கொண்டே "நான் சாகும்போது என் பெண்மையை நான் உணரவேண்டும் " என்று சொல்லு கொண்டு தன உடைகளை களைத்தார். "எங்கு யாராவது ஆம்பளைங்க இருக்கீங்களா என் பெண்மையை உணரவைக்க?" என்று உரக்க கூறினார். அதில் ஒரு ஆண் எழுந்து மளமள வென தன் ஆடைகளை கழற்றி ஆடைகளை Iron பண்ணி தரும்படி கேட்டார் :D
டமால் டிமீல் புஸ்ஸ்ஸ்ஸ்(palne crashed)

Thursday, December 2, 2010

இனிமேல் F தமிழ் எழுத்து

இத படிச்சிட்டு தமிழ் பற்று பொங்கி என்ன திட்ட கூடாது. இது வெறும் நகைச்சுவை தான்

தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Fried rice, Figure, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.


Wednesday, December 1, 2010

அவ என்ன காதலிக்கிறாளா தெரியலியே? ட்ரைனிங் எடுத்து கோங்க

1) எங்காவது காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் கவனம் அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.

2) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த உங்க ஆளு , பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூம் என்றால் double confirm .

Sunday, November 28, 2010

"B" jokes

பசங்கள கொஞ்சம் புரிஞ்சிகோங்க :(
ஒரு பையன் Car டிரைவ் பண்ணிட்டு போறான். அவன ஒரு பொண்ணு overtake பண்ணிட்டு போற. அந்த பையன் பொண்ண பாத்து "ஏய், கழுதை" என்று சொன்னான். அந்த பொண்ணு உடனே அந்த பையன பாத்து "போடா, பன்னி, எருமைமாடு, முட்டா பயலே" இப்டீல்லாம் திட்டுநாள். தீடீர்னு அந்த பொண்ணுக்கு ஒரு accident road cross பண்ண கழுதை மேல மோதுனனால.
Moral: பொண்ணுக பசங்கள புரிஞ்சிகவே மாட்டாங்க :)

காதலிக்க போறீங்களா? ட்ரைனிங் எடுத்து கோங்க

காதல் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு தொடராக நான் படித்த, அனுபவித்த, எனக்கு தோன்றிய விசியங்களை பகிர்கிறேன்.

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

தொலைக்காட்சியும் மூடபழக்கங்களும்

இங்கு மூடபழக்கங்களை பற்றி பலர் விழிப்புணர்வு செய்தாலும் இன்னும் பலர் அந்த பழக்கங்களில் இருந்து தங்களை விடிவிப்பதில்லை. மீடியாக்கள் விழிப்புணர்வுகளில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதே மீடியாக்கள் மூடபழக்கங்களை வளர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றன.

இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது தொலைக்காட்சி மீடியாக்கள் பற்றி தான். தொலைக்காட்சி மீடியாக்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன என்பதை நான் மறுக்கவில்லை. பல முற்போக்கான நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே தொலைக்காட்சிகள் சில நிகழ்ச்சிகளில் குறிப்பாக மெகா தொடர்களின் மூலமாக மூடபழக்கங்களையும் வளர்க்கின்றன.

Saturday, November 27, 2010

Software field - என்ன தான் பண்றோம்னு தெரிஞ்சுகாங்க :)

"அப்படி என்னதான் வேலைபார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி தான்

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –ன்று நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் ஒருவர். நானும் விவரிக்க ஆரம்பிதேன்..

நாங்கெல்லாம் டிரைன்லயே பிச்சை எடுத்தவங்க

ஒரு திங்கள்கிழமை நண்பர் ஒருத்தரை பார்க்க செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த "மூதாட்டி", மூதாட்டி என்று சொல்லமுடியாது சற்று திடமான உடல் தான். அனைவரிடமும் தர்மம் கேட்டார். சிலர் 2, 5 ருபாய் போட்டார்கள்.

அப்பொழுது அங்குவந்த பேருந்து நடத்துனர் அந்த மூதாட்டியை பேருத்தில் இருந்து வெளியே போகும்படி வற்புறுத்தினார். மூதாட்டி முனகி கொண்டே பேருந்தில் இருந்து கீழே இறங்காமல் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தார். வேகமாக வந்த நடத்துனர் வெளியே செல்லும்படி கூச்சலிட்டார்.

Wednesday, November 24, 2010

சிகெரட் பிடிச்சா சில நல்ல விசியங்களும் இருக்குதுங்க!

எல்லாரும் சிகெரட் பிடிக்காத அது நிகோடின் இருக்குது... Cancer வரும் அது வரும் இது வரும் சொல்லுவாங்க. அது இருக்கட்டும் சிகெரட் பிடிக்கிறதால் சில நல்ல விசியங்களும் இருக்குங்க. என்னனு தெரிஞ்சிக ஆர்வமா இருக்கீங்களா படிச்சி தான் பாருங்களேன்.

இங்க நான் எனக்கு தெரிஞ்ச scientificaa prove பண்ணப்பட்ட 3 points மட்டும் சொல்லறேன்.

Tuesday, November 16, 2010

Microsoftக்கு 10 கேள்விகள்

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

Monday, November 15, 2010

பெண்கள் மூளை மலிவானது (தலைப்பை பார்த்து முடிவு பண்ணாதீங்க )

மருத்துவமனையில் ஒருவருக்கு மூளையில் பிரச்சனை உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் மருத்துவர் அறையில் இருந்து வந்து உறவினர்களிடம் நோயாளிக்கு உடனடியாக "மூளை மாற்று அறுவை சிகிச்சை" செய்தால் தான் நோயாளி பிழைப்பார். உடனடியாக, மூளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

மூளை வேண்டுமானால் நானே ஏற்பாடு செய்துவிடுகிறேன் என்றார். "சரி, எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள்" என்று உறவினர்களில் பலரும் மருத்துவரை கேட்டு கொண்டார்கள். உறவினர்களில் ஒருவர் எவ்வளவு மூளைக்கு செலவாகும் என்றார்.

Thursday, November 11, 2010

காதலே பெரும்குழப்பம்

நான் முதல்முதலா பதிவிட விரும்புவது எப்பவுமே போர் அடிக்காத ஒரு விஷயம். அதாங்க "காதல்".

முதல காதலைபத்தி(அதாவது "காதல்" அப்ப்டிகிற வார்த்தைய) கொஞ்சம் பாப்போம். ஆங்கிலத எடுத்துகிட்டா LOVE அது வெறும் காதலை மட்டும் குறிக்காது. அதுவே அன்பு, நேசம், பாசம் இதெல்லாம் love நு தான் சொல்றாங்க.காதல் என்ற வார்த்தை தமிழை பொறுத்தவரை தனித்தன்மை பெற்றிருக்கு.

Wednesday, November 3, 2010

இந்த ரெண்டும் ஒட்டவே ஒட்டாது - 1

வாழ்க்கைல ஒட்டவே ஒட்டாத விசியங்கள்:
 1. தாமரை இலையும் தண்ணீரும்
 2. விடுமுறையும் வேலையும்
 3. நீயும் நானும்
 4. மக்கு பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளும்
 5. வயசானவங்களும் கணினியும்
 6. இதயமும் மூளையும்
 7. இட்லியும் pizza உம்
 8. அறிவியலும் மூடநம்பிக்கையும்
 9. ஒல்லியான பொன்னும் குண்டான பையனும்
 10. சிலர் நானும் கணக்கும்முனு சொல்லுவாங்க
 11. இந்தியாவும் பாகிஸ்தானும்
 12. DMK யும் ADMK யும்
 13. பெற்றோகள் நினைப்பதும் பிள்ளைகள் நினைப்பதும்
 14. தொழிலும் சந்தோசமும்
 15. திருமணமும் விடுதலையும்
 16. அழகான பொண்ணும் ஏழை பையனும்
 17. சாமியார்களும் குற்றங்களும் (உண்மையானு தெரியல)
 18. Twitter உம் facebook உம்
 19. நடைமுறையும் கற்பனையும்
 20. இதை படித்தவர்களும் மூளையும்

முத்தம்

முத்தம் அது நீங்கள் மட்டும் தனியாக கற்றுக்கொள்ள கூடியதில்லை. அப்படியே கற்று கொண்டாலும் அது theory ஆக தான் முடியும். Practical ஆக கட்ட்ருகொள்வது கொஞ்சம் சிரமமானது. பலருக்கு நேராக Practical test தான் பெயில் ஆனால் அது பெருத்த அவமானம்.

நீங்கள் உங்கள் இணையின் உதட்டை முத்தமிடுகிறேன் என்று உதட்டை கடித்து விட்டாலோ அல்லது உங்கள் இணை காலையில் பல் விளக்காமல் இருந்தாலோ அந்த முத்தம் உங்கள் வாழ்வில் பெருத்த வடு ஆகலாம். அது மட்டுமல்ல முத்தத்தின் மேல் ஒரு வெறுப்பை கூட உண்டு பண்ணலாம். முத்தத்தின் வணிக அருமையை உணர்ந்த சில கம்பெனிகள் பல் விளக்காமல் முதமிடோவொருக்கென சில spray களை வழங்கிவருகின்றன. இதை பல் விளக்குபவர்கள் கூட உபயோகிக்கலாம். முத்தம் fresh ஆக இருக்குமாம்.

Friday, October 1, 2010

விரைவில்

விரைவில் நான் என் பதிவுகளை பதிவிட உள்ளேன். நன்றி