மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.
பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்தவுடன் உடனே பறக்கத் துவங்கிவிடும்.
மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.
குரங்கின் மூளை கீழ் பகுதி மூளை, மேல் பகுதி மூளை என இரு பகுதிகளாக இருக்கிறது.
எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.
ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
கூடுகட்டி வசிக்கும் பாம்பு ராஜநாகம்.
அணலி எனற பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும்.
சிட்டுக்குருவியின் இதயம் நிமிடத்திற்கு 1,000 முறை துடிக்கும்.
எறும்பு தன் எடையைப் போல 50 மடங்கு எடையை இழுக்கும் திறன் கொண்டது.
ஒட்டகம் சராசரியாக 60 நாட்கள் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கும்.
திமிங்கலத்திற்கு 20 ஆயிரம் பற்கள் வரை முளைக்கும்.
பூனைகளுக்கு இனிப்புச் சுவை தெரியாது.
மனித உடலில் மிகவும் கடினமான பகுதி பல்.
இரைத் தின்னும் போது கண்ணீர் வடிக்கும் உயிரினம் முதலை.
இமயமலையின் 8,000 மீட்டர் உயரத்தில் கூட ஒரு சாதாரணத் தேரையினம் உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
2 comments:
அருமை
நன்றி
Post a Comment