Wednesday, December 14, 2011

காதல் - ஒரு களஞ்சியம்

காதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண்றாங்கன்னு உங்களுக்கு தோனலாம்.  ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு அத நீங்க எல்லாரும் தெரிஞ்சிக்கனும். 

காதலர்கள் ஏன் ஒரே ஐஸ்கிரீம் வாங்கி ரெண்டு பேரும் சாப்டுறாங்க? 
இந்த ஐஸ்கிரீம் மாதிரியே வாழ்க்கைல வர்ற சுகதுக்கங்களையும் ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கணும் என்ற எண்ணத்தில்.. 

காதலர்கள் ஏன் பைக்ல இடைவெளி இல்லாமல் நெருக்கமா உட்கார்ந்து போறாங்க?
சாலைகளில் வரும் மேடுபள்ளங்கள் போல வாழ்கையில் வரும் எல்லா சூழலிலும் உன் கூட இடைவெளி ஏற்படாம நெருக்கமாவே இருப்பேன் என்ற எண்ணத்தில்..

காதலர்கள் ஏன்  தியேட்டர்ல கடைசி ரோ சீட்ல உக்கறாங்க?
தியேட்டர் என்பது வாழ்க்கை போன்றது. இந்த வாழ்க்கையை கடைசிவரை (அதான் கடைசி ரோ) உன் பக்கத்திலேயே இருந்து நீ அழும்போது கண்ணீரை துடைத்தும், சிரிக்கும் போது உன்னை ரசித்தும் துணையாக இருப்பேன் என்ற எண்ணத்தில்..

காதலர்கள் ஏன் மொபைல்ல இருந்து எப்போ பாரு SMS அனுப்பிகிட்டே இருக்காங்க?
சில விஷயங்கள் வார்த்தையால் பேச கொஞ்சம் ஈகோ தடையா இருக்கலாம். இல்ல கூச்சமா இருக்கலாம். உதாரணதுக்கு மன்னிப்பு  முகத்துக்கு நேர கேக்க முடியாம இருக்கலாம். ஆனா, அத அப்படியே விட்டா காதலே கலாசலா ஆகலாம். SMS அனுப்பி மன்னிப்பு கேட்டுட்டு பிறகு நேர்ல மன்னிப்பு கேக்கும் போது புரிதல் பெருகும். காதல் வளரும்.



காதலர்கள் ஏன் சிறு சிறு பொய் கூறுகிறார்கள்?
எப்பேர்பட்ட அரிச்சந்த்ரன் கூட காதல்னு வந்துட்டா பொய் சொல்லித்தான் ஆகனும். சரி, மேட்டர்கு வரேன். காதலிக்கறவங்க பொய்யை எப்படி மெய்யுனு கண்மூடி தனமா நம்புவாங்களோ அதே போல உன்னுடனான வாழ்க்கை போராட்டத்தில் ஏற்படும் துன்பங்களையும் இன்பங்களாக நம்பனும். அப்படிங்கற ஒரு சம்பர்தாயம் தான்.

காதலிகள் மிஸ்டு கால்கள் மட்டும் ஏன் அடிகிறார்கள்? 
நான் உன்னை அடிச்சா, என்னை திருப்பி அடிக்க கூட உனக்கு மனசு வராது.. அட்லீஸ்ட் நான் அடிச்ச இந்த மிஸ்டு காலுக்கவது பதிலுக்கு ஒரு கால் அடிப்பன்னு ஒரு ஆசைல தான் இந்த மிஸ்டு கால் அடிகிறேன். என்ன சரிதானே, காதலிகளா!!

காதலர்கள் சண்டை போடுறாங்க.. அதுல என்னங்க அர்த்தம் இருக்க முடியும்?
இருக்கு... அர்த்தம் இருக்கு.. "போருக்கு பின் அமைதி" அப்படின்னு ஒரு பழமொழி போப் ஆண்டவர்ல இருந்து போதிதர்மர் வரை சொல்லிருகாங்க... அதை கடைபிடிச்சி.. அந்த அமைதியை அனுபவிபதற்காக..

காதலர்கள் ஏன் காதலர் தினம் கொண்டாடுகிறார்கள்? 
லவ்வுமா நல்வாழ்கையின் ஆரம்பம்ம்ம்.. அஸ்திவாரம்ம்ம்... அப்படின்னு சூப்பர் ஸ்டார்ரே சொல்லிருகாரு. அதுக்கு ஒரு தினம் கொண்டாடாம விட்டா எப்படிமா..

உங்களுக்கும் பொழுதுபோகலைனா காதல் பத்தி கேள்வி கேளுங்க.. அர்த்தம் கண்டுபிடிச்சி விளையாடலாம்.. வர்டா!! 

1 comment:

Post a Comment