Wednesday, November 3, 2010

முத்தம்

முத்தம் அது நீங்கள் மட்டும் தனியாக கற்றுக்கொள்ள கூடியதில்லை. அப்படியே கற்று கொண்டாலும் அது theory ஆக தான் முடியும். Practical ஆக கட்ட்ருகொள்வது கொஞ்சம் சிரமமானது. பலருக்கு நேராக Practical test தான் பெயில் ஆனால் அது பெருத்த அவமானம்.

நீங்கள் உங்கள் இணையின் உதட்டை முத்தமிடுகிறேன் என்று உதட்டை கடித்து விட்டாலோ அல்லது உங்கள் இணை காலையில் பல் விளக்காமல் இருந்தாலோ அந்த முத்தம் உங்கள் வாழ்வில் பெருத்த வடு ஆகலாம். அது மட்டுமல்ல முத்தத்தின் மேல் ஒரு வெறுப்பை கூட உண்டு பண்ணலாம். முத்தத்தின் வணிக அருமையை உணர்ந்த சில கம்பெனிகள் பல் விளக்காமல் முதமிடோவொருக்கென சில spray களை வழங்கிவருகின்றன. இதை பல் விளக்குபவர்கள் கூட உபயோகிக்கலாம். முத்தம் fresh ஆக இருக்குமாம்.




முதல் முத்தம் எப்பிடி ஆரம்பிக்கும்:

எதிர்பாராமல் சில. நீங்களும் உங்கள் இணையும் dating செல்லும்போது உங்களை சுற்றியுள்ள ஜோடிகளின் முத்த சத்தம் உங்களை முத்தமிட தூண்டலாம். அல்லது நீங்கள் இருவரும் தனியாக இருக்கும் போது எதோ ஒரு படத்தின் romantic scene ஏதாவது தோன்றி உங்களை முத்தமிட வைக்கலாம்.

பிளான் பண்ணி சில, இன்று எப்பிடியாவது என் இணையை முத்த மிட வைக்க வேண்டும் என்று முன்னரே blueprint போட்டு அனுபவமுள்ள நண்பர்களுடன் ஆலோசனை பெற்று உங்கள் இணையை முத்த மிட வைக்கலாம். இணை கூச்ச சுபாவம் உள்ளவர் என்றால் நீங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு தன ஆகணும். 17 முறை படையெடுத்த கஜினி முகமது வை மறந்து விடக்கூடாது.
இது ஒண்ணுமே வேலைக்கு ஆகலைனா.

"முத்தம் தராதாரை ஒருத்தல் அவர்நாண
முத்தம் கொடுத்து விடல் "

என்கிற நவீன திருவள்ளுவரின் குறளை பின்பற்றலாம். பிறகு "உன்னை காதலிச்சிட்டு இன்னொருத்திக்கு/இன்னொருத்தனுக்கு முத்தம் கொடுக்க சொல்றியா! " இப்பிடி எதாவது சினிமா பஞ்ச சொல்லி தப்பிசிருவாங்க சிலர்.

எப்பிடி இருந்தாலும் முதல்முத்தம் இனிமையாக இருந்தா இந்த முத்தம் மட்டுமல்ல வாழ்வின் எல்லா முத்தங்களும் இனிமையாக இருக்கும்.
மேலும் அதுவே கடேசி முத்தமாவதும் உங்கள் வாயில்தான் உள்ளது.

1 comment:

Anonymous said...

பாட்டி சொன்னது சரியான பதில். வாழ்க பாரதம்! உங்கள் 'முத்தம்' கட்டுரை சூப்பர் அப்பு. (madrasbhavan.blogspot.com)

Post a Comment