ட்வென்டி/ ட்வென்டி கிரிகெட் போட்டிகள் ரொம்ப விறு விறுப்பா இருக்குது. கிரிகெட் போட்டிகள் ரொம்பவும் பிரபலம் ஆகிவிட்டது.
இப்போ பசங்க பரிட்சை என்றாலே வெறுப்பா பாக்குறாங்க. அதுக்காக ஒரு மாற்றத்துக்கு ட்வென்டி/ ட்வென்டி ரகத்துல பரிட்சை நடத்தினா வெறுப்பை பெருமளவு குறைக்கலாம். அதற்காக சில ஆலோசனைகள்
- பரிட்சை எழுதும் நேரம் 2 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரமாக்க படவேண்டும். அதே போல் மதிப்பெண் 50 ஆக குறைக்க படவேண்டும்
- பரிட்சை எழுதும் போது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைவெளி விடவேண்டும்.
- Free Hit கொடுக்க படவேண்டும். அதாவது மாணவர்களே கேள்வியை தேர்ந்தெடுக்கலாம்.
- முதல் 15 நிமிடம் powerplay கொடுக்கப்பட வேண்டும். அதாவது எந்த மேற்பார்வையாளரும் அங்கு இருக்க கூடாது. (இது ரோம அருமையா இருக்க போகுது)
- ஒவ்வொரு சரியான பதிலுக்கும் Cheer Girls நடனமாடி அவர்களை உற்சாக படுத்த வேண்டும்.
- Man / Woman of The Exam தேர்ந்தெடுக்க பட்டு அவர்களுக்கு யமஹா க்லடியாடோர் பைக் பரிசாக வழங்க பட வேண்டும்.
போடுங்கையா ஓட்டு கண்ண திறந்து பாத்து.... v v
No comments:
Post a Comment