என்னக்குள் ஓர் அரியாசனம்
'சுற்றமும் நட்பும்' எண்ணற்றோர், பெரும்பான்மை. நீ ஒருவன், சிறுபான்மை. என்னை ஆட்சி செய்ய உன்னை தேர்ந்தெடுத்தேன். பதவி ஏற்றுக்கொள்.
உள்ளத்தில் பெருமழை
ஒரே குடைக்குள் நாம் இருவரும் இணைந்து நடக்க, இந்த பெருமழை ஒரு காரணியல்ல! வெறும் காரணம் மட்டுமே....!!
காதல் நூல்
நட்புக்கும், காதலுக்கும் ஒரு நூல் இடைவெளி உண்டு. அந்த நூலை எடுத்து அதில் வண்ணமலர்கள் கோர்த்து கையில் தந்து சிரித்தாய் நீ!
அழகு
காதல் கவிதைகள் எழுதுவதில் ஆண்கள் அழகு! கவிதையாய் காதலிப்பதில் பெண்கள் அழகு!!
உனக்காக...
விடை பெற்று செல்லும்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன்... நீ விரும்பி பார்த்துக்கொண்டேயிருப்பாய் எனத் தெரிந்து!
என் சொந்தம்
எழுதிய வரிகளை படித்து உன் இதழோரம் புன்னகை பிறக்குமோ! விழியோரம் ஒரு துளி நீர் உதிர்க்குமோ!! எதுவாயினும் அது என் சொந்தம்
அன்பின் முத்துகள்
நீ பிறந்தநாள் பரிசாக தந்த கொலுசின் முத்துக்களில் ஒன்றும் உதிராமல் இருக்க வேண்டி, அதிராமல் நடக்கப் பழகினேன் நான்!
என் பொருள் நீ
மென்பொருளோ, வன்பொருளோ உன் பணி பற்றி ஏதும் அறியேன் நீ ''என்' பொருள்'' என்பதை தவிர!
மின்னும் அஞ்சல்
தினம் வரும் மின்னஞ்சல்களில் உன் பெயர் இல்லாவிடில் மற்றவையும் படிப்பதில்லை. உன் அஞ்சல் இருந்தால் மற்றவை படித்தாலும் புரிவதில்லை.
இவை அனைத்தும் என்னுடைய படைப்புகள் இல்லை... உரியவரின் அனுமதி பெற்றே பதிவிட்டு இருக்கிறேன்.
1 comment:
//மின்னும் அஞ்சல்
தினம் வரும் மின்னஞ்சல்களில் உன் பெயர் இல்லாவிடில் மற்றவையும் படிப்பதில்லை. உன் அஞ்சல் இருந்தால் மற்றவை படித்தாலும் புரிவதில்லை.//
அருமை.. வாழ்த்துக்கள்
Post a Comment