Saturday, January 15, 2011

கல்லு ஒன்னு மாங்கா ரெண்டு

அதாவது நேற்று ஒரு கனவு அத தான் உங்களுக்கு சொல்ல போறேன். அது ஏற்கனவே என்னோட சின்ன வயசுல யாரோ சொன்ன கதை தான் இது. அததான் இப்போ உருட்டி திரட்டி சொல்லபோறேன்.

அதாவது நானும் என்னோட Program Manger ம் ரயில்ல மும்பை போய்கிட்டு இருக்கோம். ரயில்ல ஏறதுக்கு முன்னாடியே நம்ம கோச்ல எத்தனை பிகருங்க இருக்குதுன்னு List பாக்குறது வழக்கம். கனவுங்கரதுனால வழக்கத்த விட முடியுமா என்ன?  ஏதோ கொஞ்சம் பிகருங்க இருந்தது.

அதுல பாருங்க எனக்கும் PM க்கும் பக்கத்து சீட் தான். ஆனா என்னோட சீட்க்கு எதிர் சீட்ல ஒரு சூப்பர் பிகரு அவுங்க பாட்டிமா கூட வந்து உகாந்துருந்தா. நானும் ரொம்ப நேரமா அந்த பிகரையே பாத்துட்டு இருந்தேன். அந்த பிகரும் என்னையே பாத்துகிட்டு இருந்தா. ரெண்டு பேரும் மாறி மாறி நூல் விட்டுகிட்டு இருந்தோம். கொஞ்சம் கொஞ்சம் சிக்னல் பரிமாறிகிட்டோம்.




திடீர்ன்னு ரயில் குகைகுள்ள போச்சி போன கொஞ்ச நேரத்துல "இச் இச்" ன்னு முத்த சத்தமும் "பளார்" ன்னு ஒரு அரை சத்தமும் கேட்டுச்சு. கோச்சே அமைதி ஆகிடுச்சி. ரயில் குகையை விட்டு வெளியவும் வந்துடுச்சி.

பாட்டிமா, "ஆயோக்கிய பையன் என்ன தைரியம் இருந்தா என்னோட பேத்திக்கு முத்தம் கொடுத்துருப்பான்". அப்படின்னு மனசுல நினைசிகிட்டாங்க.

என்னோட PM, "இந்த பயல் இப்படி பண்ணிருப்பான்... ஆனா அதுக்கு அந்த பொண்ணு தவறுதலா என்ன அடிச்சிருப்பா". அப்படின்னு மனசுல நினைசிகிட்டான்.

அந்த பொண்ணு, "ரொம்ப சந்தோசம். முத்தம் நல்லா இருந்தது. ஏன் தான் இந்த பாட்டி அந்த பையன (அதாவது என்னை ) அரஞ்சிசோ? ". அப்படின்னு மனசுல வருத்த பட்டுகிட்டு இருந்தா.

நான், "இந்த நிமிடம் என்வாழ்க்கையில் அற்புதமான தருணம். இதேமாதிரி ஒரு தருணம் நம்ம வாழ்க்கைல மறுபடியும் வருமா?" அப்படின்னு மனசுல சந்தோசத்தில் நீச்சல் அடிச்சேன்.

ஏன்னா, ஒரே சமயத்தில நான் அந்த பொன்னையும் கிஸ் பண்ணிட்டேன். என்னோட PM மையும் பளார்ன்னு அரைஞ்சிட்டேன். "கல்லு ஒன்னு மாங்கா ரெண்டு " இல்லையா?

அடுத்த குகை எப்போவரும் என்ற எதிர்பார்ப்போடு விடை பெறுகிறேன். கருத்தோ ஓட்டோ போடறதுக்கு யோசிக்காதீங்க. காசா பணமா போட்ருங்க...

2 comments:

ஞாஞளஙலாழன் said...

ஏற்கனவே கேள்வி பட்ட ஜோக்கு தான் என்றாலும் படிக்கப் புதுமையாகவே உள்ளது:-)

MANO நாஞ்சில் மனோ said...

வடை போச்சே....

Post a Comment