Monday, January 3, 2011

மல்லிகைபூ ரசம் வழங்குபவர் செப்.மொக்கைசாமி

வணக்கம் நான் தான் செப் மொக்கைசாமியோட நண்பன். அவருக்கு சமையல் மேல ரொம்பவும் தான் காதல். செப்.மொக்கைசாமி பத்தி அவரே எழுதுனா அது அவருக்கு அவமானம் அதான் அவர பத்தி நானே எழுதுறேன்.

செப்.மொக்கைசாமி பத்தி சொல்லனும்னா அவர் பேர பாத்து இவரு மொக்கைன்னு நினைச்சிராதீங்க. அவரு சமயைல்கலாவள்ளவர். இவரு புதுசா யாருமே முயற்சி செய்து பக்காதா அசத்தலான ரெசிபி மட்டும் தான் செய்வாரு. பிகருங்க விசியத்துல அவரு ரொம்ப கெட்டிக்காரர்.


அப்படிதான் பாருங்க ஒருநாள். அவரோட Girl Friend கூட Girl Friend வீட்டுல  கடலை போட்டுக்கிட்டு இருக்கும் போது அவருக்கு திடீர்ன்னு விக்கல் வந்துடுச்சி உடனே Girl Friend ஒரு டம்ளர் தண்ணி கொண்டுவந்து தந்தாங்க. தண்ணியா குடிச்சி முடிச்சா பிறகு வாய்குள்ள ஏதோ தட்டுப்படுது என்னடான்னு பாத்தா மல்லிகைப்பூ அதான் Jasmine. அப்போ அவருக்கு வந்த யோசனை தான் மல்லிகைபூ ரசம்.

எத்தனை நாளைக்கு தான் இந்த பூக்களை எல்லாம் தலையில் வைத்து அழகு பார்ப்பது கொஞ்சம் சமையல்ல சேர்த்து தான் பாப்போமே என்று அந்த மல்லிகைபூ ரசத்தை தயார் செய்தார் செப்.மொக்கைசாமி. அதனுடைய ரகசியத்தை பகிர்ந்து கொள்வதில் செப்.மொக்கைசாமி மிகவும் வருத்தமடைகிறார்.

மல்லிகைபூ ரசம் :

செய்ய தேவையான பொருட்கள் : 
மல்லிகை பூ - காதலி தலையில் இருந்து பறித்தது - 50 கிராம்
தண்ணீர் - காதலி கையால் வாங்கியது - 250 மில்லி
உப்பு - சூடு சுரணை வேண்டுமென்றால்/இருந்தால் மட்டும்  (நமக்குல்லாம் உப்பு தேவைபடாது)
தேங்காய், தக்காளி, எண்ணெய், சீரகம், மிளகு - போட்ட போடுங்க போடாட்டி போங்ககக...


செய்முறை:
ம்ம்ம்ம்... மேலே உள்ள எல்லாத்தையும் ஒரு பாத்திரத்துல போட்டு கலக்கு கலக்குன்னு கலக்கணும் பூ மார்க்கெட் குள்ள போனமாதிரி குப்புன்னு மல்லிகை பூ வாடைவரும். அதுக்கு பிறகு சூடு படுத்தனும். கண்டிப்பா கொதிக்க விட்டுற கூடாது. அவ்வளவுதான் மல்லிகைபூ ரசம் ரெடி.

உண்ணும் முறை:
இதை முதலில் யாரவது உங்களுக்கு வேண்டாதா நபர்கள் இருந்தால் அவர்களுக்கு கொடுத்து விட்டு குறைந்தது 1 மணி நேரம் அவரை கண்காணிக்க வேண்டும். அவர் உயிரோடு இருந்தாலோ அல்லது பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் இருந்தாலோ மட்டும் நீங்கள் சாப்பிடவும். உங்கள் காதலிக்கும் கொஞ்சம் கொடுத்து அவரையும் அசத்துங்கள்

போகாதீங்க போகாதீங்க அதுக்குள்ளே என்ன அவசரம். எனக்கு கருத்து / ஓட்டு போட்டுட்டு போய் மல்லிகைபூ ரசம் செய்யுங்க. செய்து பார்த்துட்டு எப்படி இருக்குன்னு செப்.மொக்கைசாமி அவர்களுக்கு சொல்லுங்க. மீண்டும் சந்திப்போமா ?

4 comments:

Philosophy Prabhakaran said...

நன்று... ஏன் இன்னும் திரட்டிகளில் இணைக்கவில்லை... நேரம் காலம் பார்த்து இணைப்பீர்களோ...

Unknown said...

நேரம் வரும்போது கண்டிப்பா இணைப்பேன் :)

Anonymous said...

மல்லிகைப் பூ ரசம் சூப்பர் .. நல்ல பதிவு.. சிரிக்கத் தூண்டியது

Unknown said...

@ANKITHA VARMA //மல்லிகைப் பூ ரசம் சூப்பர்
அதுக்குள்ளே சமைச்சி பாத்திடீங்கபோல? :P

Post a Comment