Tuesday, December 7, 2010

கொசுவும் பறவை தாங்க - யுவர் ஆனார்

கொசுவும் பறவை இனம் தான், என்பதற்க்கான வலுவான ஆதாரங்களை நான் மிக கடினப்பட்டு திரட்டி இருக்கிறேன். அதை உங்களுக்கு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கொசுக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தெரிவிப்பதற்கு கடமை பட்டு இருக்கிறேன்.

முதலாவதாக, பறவைகளுக்கு பறவை என அவை பறப்பதால் பெயர்வந்ததாக நான் படித்த "Java Programming makes you insane" என்ற புத்தகத்தில் போட்டிருந்தார்கள். இதை வைத்து நன்கு யோசித்து பார்க்கும்போது கொசுக்கள் பறப்பதால் அவை பறவை இணைத்தே சேரும் என்னும் எண்ணம் தோன்றுகிறது



கொசுக்களும் பறவைகளை போலவே முட்டை போட்டு குஞ்சி பொறிக்கின்றன. அதுவும் பறவைகளை போலவே கொசுகளிலும் பெண் கொசுக்கள் தான் முட்டை போடுகின்றன. என்பது அனைவராலும் மறுக்க முடியாத/மறைக்க முடியாத உண்மை. (இந்த கண்ண்டுபிடிப்புக்கு என்ன பாராட்டணும்னா பின்னூட்டத்துல பாரட்டிருங்க )



பெரும்பாலான பறவைகளை போலவே கொசுக்களும் நீர் இருக்கும் இடங்களிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. பறவைகளை போலவே கொசுக்களும் தங்கள் குஞ்சிகளுக்கு பால் கொடுப்பதில்லை.


கிபி. 2ம் நூற்றாண்டுகளில் கொசுக்கள் பறவைகள் அல்ல என்பதற்க்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது கொசுக்கள் பறவைகள் என்பதை மேலும் உறுதி செய்கின்றன.

இவை தவிர உங்களுக்கு வேறு ஆதாரங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் போடவும். கொசுக்கள் அழிந்துவரும் இனமாக இருக்கின்றன. எனவே, Allout, மார்ட்டின், கொசுவலை போன்றவற்றை தவித்தும் கொசுக்களை காத்திட ரெத்தம் கொடுத்து உதவவும்.
_____________________________________________________________

மேலும் கொசுக்களை காயப்படுத்திய இந்த பாடலை நான் வன்மையாக  கண்டிக்கிறேன். இது மேலும் தொடந்தால் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த பாடலை தடை செய்யும்படி அரசை கேட்டுகொள்கிறேன்,




பின்குறிப்பு; நான் இந்தபதிவை எழுத "ரங்குஸ்கி" இடம் பணம் வாங்கவில்லை. கொசுக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் எழுதினேன். கருத்து/ஓட்டு  போடுங்கள்... கொசுக்களை காப்பாற்றுங்கள்.

5 comments:

Anonymous said...

kosukkalai kaappaaththuvathu irukkattum, first ungkala kaapaathikunga kosukkalidamirunth...

Unknown said...

புலி, சிங்கம் கூடத்தான் ஆபத்தானது அதை காப்பட்ட்ற வேணும்னு சொல்றோம்ல? அதுபோல தான் இதுவும்.
நான் கொசுக்களுக்கு ஆதரவா பேசி இருக்கேன் அதுனால என்ன கடிக்காது. நீங்க கவலைபடாதீங்க

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Unknown said...

@prabhakaran தங்கள் வருகைக்கும்/பின்தொடர்புக்கும் நன்றி

sridevi said...

hahahahaha

Post a Comment