உங்களுக்கு மொக்கை தாங்கும் இதயம் இருந்தால் மட்டும் கீழே படிக்கவும்.
வணக்கம் நண்பர்களே, நீங்கள் எல்லாரும் "டைட்டானிக்" திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அது ஒரு உண்மை கதை என்பது அனைவரும் அறிந்ததாகும். கப்பல் மூழ்கும் போது நடந்த யாருக்கும் தெரியாத உண்மை ஒன்றை நான் இங்கு கூற போகிறேன். எனக்கு மட்டும் எப்படி இந்த உண்மை தெரியும் என நீங்கள் கேட்கலாம்.
நேற்று இரவு என் கனவில் வந்த எனது "கொள்ளு தாத்தா" தான் இத பத்தி சொன்னார். அவர் அந்த கப்பல் மூழ்கும் போது அந்த கப்பலில் பயணம் செய்தவர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் சாகும்போது போட்ட ஒரு மொக்கை போட்டிருக்கிறார் அது ஒரு மனிதரின் உயிரை பலிவாங்கியது. அது பற்றி என் கனவில் வந்து சொல்லி அழுது கொண்டே சிரிக்கிறார். அதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
டைட்டானிக் ஏப்ரல் 10 ம் தேதி சௌத்ஹம்ப்டன் நகரிலிருந்து நியூயார்க் நகரத்திரிக்கு புறப்பட்ட தாம். நான்கு நாட்கள் கழித்து அது ஓட்டை விழுந்து மூழ்கி கொண்டிருந்ததாம். அனைவரும் பதட்டத்துடன் அங்கும் இங்கும் அலறிக்கொண்டு ஓடிகொண்டிருந்தார்கள்.
அப்பொழுது என் "கொள்ளு தாத்தா" அங்கு இருந்த கேப்டன் தொப்பியை தலையில் வைத்து அழகு பார்த்து கொண்டிருந்தாராம். அவசரமாக அங்கு வந்த ஒருவர் "கேப்டன் இங்க இருந்து நிலபகுதி எவ்வளவு தொலைவில் இருக்குது" என்று கேட்டாராம். ஒரு கிலோ மீட்டர் தூரம் என்றாராம் என் "கொள்ளு தாத்தா". சரி நான் நீச்சல் அடித்து கொண்டு நான் போகபோறேன். ரொம்ப நன்றி என்று சொல்லி கொண்டு கடலில் குதித்து விட்டார் அந்த மனிதர்
"குதித்த பிறகு எந்த திசைல போகணும், கேப்டன்" என்று கேட்டார். "அப்படியே கீழ் திசையில் ஒரு கிலோ மீட்டர் போனால் நிலபகுதி வந்துரும்" என்று மொக்கை போட்டு சிரித்தாராம் என் "கொள்ளு தாத்தா". அதை கேட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தாராம். இதை சொல்லி இரண்டு நாளாக என்கனவில் வந்து அழுது கொண்டே சிரிக்கிறார் என் "கொள்ளு தாத்தா".
எங்க கொள்ளு தாத்தா இதுல இருக்குராரன்னு பாத்து சொல்லுங்க
கருத்தையும் ஓட்டையும் போடுங்கோ!
2 comments:
எனக்கு உங்க கொள்ளுத்தாத்தா கனவ விட மூணு பத்துரூவா ஆடியோ சூப்பரு
kollu thaathth'ndeenga..aala kolra thaaththa'va irupar polirukke!
Post a Comment