ஒரு பையன் கிட்ட சில குச்சிமிட்டாய்கள் இருந்தது அதே மாதிரி ஒரு பொண்ணு கிட்ட வேற சில மிட்டாய்கள் இருக்குது. அந்த பையன் "உன்கிட்ட இருக்குற மிட்டாய்களையும் என்ன கிட்ட இருக்குற குச்சிமிட்டாய்களையும் மாத்திக்கலாமா? " ன்னு கேட்குறான். அந்த பொண்ணும் "சரி மாத்திக்கலாம்" ன்னு சொன்னாள்.
அவங்க சொன்ன மாதிரி ரெண்டு பேரும் அவங்க அவங்க மிட்டாய்களை மாற்றி கொண்டாங்க. ஆனால், அந்த பையன் மட்டும் தன்கிட்ட இருப்பதுலேயே நல்ல குச்சிமிட்டாய் ஒன்ன வச்சிகிட்டு மத்தது எல்லாம் கொடுத்தான்.
அந்தநாள் இரவு அந்த பொண்ணு நிம்மதியா தூங்கிட்டு இருந்தாள். ஆனால், அந்த பையனுக்கு இரவு தூக்கமே வரவில்லை. அவன் நான் ஒரு குச்சிமிட்டாய் கொடுக்காம ஏமாத்துனது போலவே அவளும் ஏமாதிருப்பாலோன்னு யோசிகிட்டே தூக்கத்தையே இழந்து விட்டான்.
கருத்து: நீங்கள் 100 சதவிகிதம் உங்கள் உறவை கொடுக்கவில்லை என்றால் உங்களுக்குள் அந்த உறவை பற்றி தேவை இல்லாத சந்தேகங்கள் எழும். இது காதல், நட்பு போன்ற எல்லாத்துக்கும் பொருந்தும்.
3 comments:
nice
நல்ல சிந்தனை தோழரே ...
தொடரட்டும் உங்கள் பயணம்
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
Post a Comment