உங்கள் மனதை கல்லாக்கி கொண்டு கீழே படிக்கவும். நான் எழுதும் போது அப்படிதான் எழுதுனேன்.
ஏன் இந்த உலகம் இளைய தளபதி "விஜய்" பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் ஏளனம் செய்து அவரை காமெடியன் ஆக்குகிறது என்பது புரியாத புதிராக உள்ளது என்று நான் பொய் கூற மாட்டேன் ஏனென்றால் அது உலகறிந்த விசயமாகும். அவரது தொடர்ந்த தோல்விகளால் அவரை அவர் ரசிகர்களாக இருந்தவர்களே கிண்டலடித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் விஜய் "முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாமை தோற்கும்" என்ற முது மொழிக்கேற்ப வாழ்பவர். அவர் தொடர் தோல்விகளுக்கு பிறகும் உற்சாகத்துடன் வேறு தொழிலுக்கு போகாமல் தொடர்ந்து நடித்து சாதிக்க முயன்று வருவதே இதற்கு சான்று.
"முயற்சி திருவினை ஆக்கும்" இந்த பழமொழிக்கும் கூட இவரே பெரிய உதாரணம். தொடர்ந்து பிறமொழி படங்களை மொழி மாற்றம் செய்து தோல்வியை தழுவினாலும் "முயற்சி திருவினை ஆக்கும்" என்ற மூலமந்திரத்தை அடிப்படையாக கொண்டு செயல் படும் அவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
"அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு" அத்திபழம் உள்ளே அழுகி இருக்க காரணம் அத்திபழம் இல்லை அதை தாக்கி இருக்கும் சிறு புழுக்கள் தான். என்று அந்த புழுக்கள் தாக்குதலில் இருந்து பழத்திற்கு விடுதலை கிடைக்கிறதோ அன்றே அந்தபழம் இன்னிப்பு சுவை மிகுந்த பழம்.
"அப்பன் அருமை மாண்டால் தெரியும்" விஜய் படங்கள் அதிகம் வருவதால் அதன் அருமை உங்களுக்கு தெரியவில்லை. ஒரு வருடம் விஜய் படங்களில் நடிக்காமல் இருந்தால் தான் எங்கே விஜயின் படம்... எங்கே விஜயின் படம்.... என உங்கள் மனம் துடிக்கும்.
பி.கு: இப்போ உங்க ரெத்தம் கொதிக்கலாம் அப்படியே போகாமல் கருத்து/ஓட்டு போட்டு போங்க.
6 comments:
தோடா... பழமொழி சொன்னா நுபவிக்கணும் ஆராயக்கூடாது...
தோடா......சொல்லுறது சுலபம் ...அத
அனுபவிக்கிறது கஷ்டம் .
ஓகே ரைட்டு
யாரோ சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது விஜய்க்கும்,கமலுக்கும் உள்ள வித்தியாசம் கமல் ஒரு படத்தில் 10 வேடத்தில் நடிப்பார் விஜய் 10 படத்தில் ஒரு வேடத்தில் நடிப்பார் என்று. சரியாகத்தான் இருக்கி
றது.
///யாரோ சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது விஜய்க்கும்,கமலுக்கும் உள்ள வித்தியாசம் கமல் ஒரு படத்தில் 10 வேடத்தில் நடிப்பார் விஜய் 10 படத்தில் ஒரு வேடத்தில் நடிப்பார் என்று. சரியாகத்தான் இருக்கி
றது. ////
சூப்பர் கமெண்டு ஹா ஹா ஹா........
இனியவன் சார்...
ஏன் சார் விஜய் மேல இம்புட்டு கோவம்... 10 படம்னு சாதாரணமா சொல்லி நிறுத்திட்டீங்க... அவரு 50 படத்துல நடிச்சு இருக்கார்... அத்தனை படத்துலயும் ஒரே மாதிரி நடிச்சு சாதனை பண்ணி இருக்கார்....
வரலாற்று பிழை சரி செஞ்சாச்சு... யப்பா. வந்த வேல முடிஞ்சது...
Post a Comment