Friday, December 10, 2010

மொக்கை மன்னன் - போட்டி

ஆள் ஆளுக்கு கேள்வி கேக்குறாங்க. நானும் கொஞ்ச கேள்வி கேட்கிறேன்.அதிகமாக மொக்கை போடுபவர்களுக்கு மொக்கை மன்னன் பட்டம் கொடுக்கப்படும்.கிரீடம் கீழே.
  1. உங்கள் கணினியின் Mouse ஐ கிரேக்க மொழியில் எப்படி கூறுவீர்கள்? ( Mouse ன்னுதான் சொல்லுவேன்னு சொன்ன உங்க உடம்புல இருக்குற 3 லிட்டர் ரெத்தத்த உறிஞ்சிருவேன்.)
  2. உங்கள் உடம்பில் நகத்துக்கு பதில் முடியும் முடிக்கி பதில் நகமும் வளர்ந்தால் உங்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?
  3. நீங்கள் ஒருநாள் பிச்சை காரராக இருந்தால் நீங்கள் செய்ய விரும்பும் சாதனை? (நோ சாப்பாடு மேட்டர்)
  4. புலி(tiger)யோதரை சாப்டுருக்கீன்களா?
  5. உங்களின் வாழ்க்கயில் மிக வருத்தமான நாள்? ("கல்யாண நாள" கண்டிப்பா சொல்ல கூடாது)
  6. உங்கள் புகைபடத்தை பார்த்து நீங்களே பயந்ததுண்டா?
  7. இருதய புற்றுநோய் என்றால் என்ன?
  8. நீங்க தமிழ் தெரியாத யாரையாவது தமிழில் திட்டி இருக்கீங்களா?
  9. உங்களால் தும்மல் வரும்போது கொட்டாவி விட முடியுமா? (ஆதாரம் வேண்டும்)
  10. நீங்க அமெரிக்க ஜனாதிபதி? நான்?
  11. நீங்கள் கொடிய தண்டனை என நினைப்பது?
  12. நீங்க சேர விரும்பும் தீவிரவாத இயக்கம்?
  13. வீட்டுக்குள்ள வரும்போது வலதுகால் எடுத்துவச்சி வருவீங்களா? இடதுகாலா? இல்ல ரெண்டுகாலும் எடுத்துவச்சி வருவீங்களா?
  14. சொர்க்கம் மற்றும் நரகம் என்பது ?
  15.  நீங்கள் கேட்க விரும்பும் ஒரே ஒரு வரம்?
  16. மாதம் ஒருமுறை மொக்கை மன்னன் போட்டி நடத்துவது பற்றி உங்கள் கருத்து?
உங்களுடைய மொக்கை பதில்களுக்காக காத்திருக்கிறேன்.
நான் ஊருக்கு புதுசு. நீங்க யாரை வேண்டுமானாலும் போட்டிக்கு அழைக்கலாம்

2 comments:

சென்னை பித்தன் said...

// 16. மாதம் ஒருமுறை மொக்கை மன்னன் போட்டி நடத்துவது பற்றி உங்கள் கருத்து?//
போட்டியெல்லாம் வேண்டியதே இல்லை!நிரந்தர முதல்வர் என்பது போல் நிரந்தர மொக்கை மன்னன்---
நீங்கள்தான்!!

Anonymous said...

yov mokkai poya

Post a Comment