Sunday, December 5, 2010

நீங்களும் ஆகலாம் வானிலை முன்னறிவிப்பாளர்

இந்த பதிவில் நான் எப்படி மிகத்துல்லியமான வானிலை முன் அறிவிப்புகளை சொல்வது என்று கூற போகிறேன். இதை நீங்கள் படித்து முடித்த பிறகு உங்கள பகுதிக்கி மட்டுமல்லாது உங்கள் நாட்டுக்கே ஏன் இந்த உலகத்திற்கே வானிலை முன்னறிவிப்பு கூற முடியும். அதுவும் நீங்கள் கூறும் முன்னறிவிப்பு அப்படியே நடக்கும்.


இதற்கு நீங்க பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான். நான் இந்த பதிவில் கூறுவதை அப்படியே உங்கள் மனதில் பொரிக்க வேண்டும்  நீங்க சொல்வது நடக்கும் என்ற நம்பிக்கை வளர்த்து கொள்ளவேண்டும்.


இப்போ நான் சொல்ல வராத கவனமா குறிச்சி வச்சிகோங்க. "ஓரிரு" இந்த ஒரு வார்த்தை தான் உங்களை சிறந்த வானிலை முன்னறிவிப்பாளர் ஆகப்போகிறது. நீங்க என்ன சொல்ல வந்தாலும் இந்த வார்த்தையை முன்னாடி சேர்த்து சொன்ன போதுங்க. உதரணத்துக்கு நான் ஒரு முன்னறிவிப்பு சொல்லறேன்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு "ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும்." "ஓரிரு இடங்களில் வெயில் அடிக்கும். ஓரிரு இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்" உங்க பகுதியில் பனிக்காலம் என்றால் "ஓரிரு இடங்களில் பனிப்பொழிவு இருக்கும்"ன்னு இதையும் சேத்துகோங்க.


அவ்ளோதாங்க நீங்க certified வானிலை முன்னறிவிப்பாளர் ஆகிடீங்க.

3 comments:

ஹரிஸ் Harish said...

:)..மனப்பாடம் பண்ணிட்டேன்... நானும் வானிலை முன் அறிவிப்பாளரார் தான்...

சம்பத்குமார் said...

எல்லாம் பாத்துகுங்க நானும் வானிலை முன் அறிவிப்பாளர் தான்

goma said...

எவ்வளவு சுலபமான வழியா இருக்கு...
நானும் இனிமேல் ரமணன்தான்

Post a Comment