Saturday, December 4, 2010

"கேட்டதா சொல்லு" வார்த்தை - மனித தன்மை அற்ற செயல்

"கேட்டதா சொல்லு" இந்த வார்த்தையை உபயோகிப்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது ஒன்னே ஒன்னு தான்.

"கேட்டதா சொல்லு.... கேட்டதா சொல்லுனு சொல்றேங்களே தவிர என்னத்த கேட்கனும்னு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேன்றீங்க." இதுல வேற "கண்ணடிப்பா கேட்டதா சொல்லுனு சொல்றீங்க." அதான் கேட்டுறேன் என்னத்த கேட்கணும் இது பல சமயத்துல என்ன ரொம்பவே குழப்புது.

அதுமட்டும் இல்ல நீங்க "அப்பாவ கேட்டதா சொல்லு", "அம்மாவை கேட்டதா சொல்லு", "அண்ணன் கேட்டதா சொல்லு", "தாத்தா பட்டிய கேட்டதா சொல்லு" "அத்தைய மாமாவ கேட்டதா சொல்லு"  இன்னும் "பலபல பேர கேட்டதா சொல்லு" இதெல்லாம் சொல்ற நீங்க அவங்ககிட்ட எல்லாம் என்னத்த கேட்ட்கனும்னு ஏன் சொல்லமாட்டேன்றீங்க :(  என்னத்த கேட்டகனும் சொல்லலீனா அவங்கள நீங்க விலைக்கு தான் கேட்ட்குறீங்கலோனு நினைக்க தோணுது.

இதெல்லாம் பரவாஇல்ல "உன் husbanda கேட்டதா சொல்லு", "உன் wifea கேட்டதா சொல்லு", "உன் Boyfreinda கேட்டதா சொல்லு", "உன் GirlFrienda கேட்டதா சொல்லு"  இப்படி எல்லாம் சொல்லும் போது அவுங்க மனசு எவ்வளவு காயப்ப்படும்னு கேக்குறவங்க யோசிக்கணும். அப்படியும் நீங்க கேட்டீங்கனா நீங்க மனசாட்சி இல்லாதவர்.

எனவே இந்த வார்த்தை "கேட்டதா சொல்லு" வை உபயகிப்பது மனித தன்மை அற்ற செயல் என்று கூற விழைகிறேன். நன்றி வணக்கம்.

அதுமட்டும் இல்ல உங்களுக்கு ஏதாவது இது போல் ஒரு வார்த்தை சர்ச்சைக்குரியதாக தெரிந்தால் உடனே தெரியபடுத்தவும். அதையும் ஒரு வாங்கு வாங்கிவிடுகிறேன்.

உங்களுக்கு இப்போவே கண்ணு இருட்டிட்டு வந்தாலும் பரவா இல்ல ஒரு VOTE இல்ல comment போட்டுட்டு போங்க.

9 comments:

துளசி கோபால் said...

:-)))))))))))))))))))

Anonymous said...

"Keatatha sollu" means - convey my regards to them; They are in my heart; I am thinking about them.

The party receive this message will be happy that, their loved one remembers to convey their love.

It may make them upset, if there is no message to them.

Anonymous said...

அருமையான கேள்வி, தமிழ் அர்த்தம் மிகுந்த மொழி, அதில் ஐயமில்லை. அந்தக் காலங்களில் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்ததோடு, பொருள்பட பேசினார்கள், பின்னாளில் வந்த மடசமூகம் அனைத்தயும் சுருக்கி , பொறுக்கி விட்டனர்,

// கேட்டதா சொல்லு என்பது, நலம் கேட்டதா சொல்லு என்றுதான் வரவேண்டும் '//

ஆனால் பிறந்த வீட்டில் தர வேண்டிய சீரை, வரதட்சணையை கேட்டதா சொல்லுனு பெண்டாட்டிய அனுப்பி வைச்சதால என்னவோ. இப்படியாச்சுனு நினைக்கிறேன்

வலைச்சரம் said...

அன்புள்ள தோழருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பதிவின் எழுத்து தரம், படைப்புத் திறன் ஆகியவற்றை பரிசீலித்து தங்களின் வலைப்பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளோம். இந்த இணைப்பில் ஆட்சேபனை இருந்தால் எமக்கு தெரிவிக்கவும், இணைப்பினை விரும்பினால் தவறாமல் எமது இணையப்பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றிகள்,

வலைச்சரம் நிர்வாகம்

Unknown said...

கேட்டதா சொல்லு-எவ்வளவு அன்பான உறவையும்,நெருக்கத்தையும்,அக்கறையையும் வெளிப்படுத்தும் வார்த்தை.உடல்நலம்,பொருளாதாரம்,உறவுகள் எல்லாவற்றையும்,நலன் விசாரிக்கும் ஒரு வார்த்தையை இப்படி போட்டு,தாக்கி,தெரிலன்னகேட்டதா சொல்லு-எவ்வளவு அன்பான உறவையும்,நெருக்கத்தையும்,அக்கறையையும் வெளிப்படுத்தும் வார்த்தை.உடல்நலம்,பொருளாதாரம்,உறவுகள் எல்லாவற்றையும்,நலன் விசாரிக்கும் ஒரு வார்த்தையை இப்படி போட்டு,தாக்கி,ம்.....தெரிலன்னா பெரியவங்களை கேட்டுக்கிடனும்.

Unknown said...

வலைச்சரம், என்னை உங்கள் வலைதளத்தில் இணைத்ததிற்கு மிக்க நன்றி.
உற்சாக படுத்தியதற்கு நன்றி

Unknown said...

@ankithavarma, காலத்திற்க்கேற்ப மாறுவது எல்லா மொழிக்கும் பொருந்தும். அதற்காக "மடசமூகம்" என்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

Unknown said...

@thamizhan அவ்வளவு பாசம் இருந்தால் "நல்ல இருக்காங்காலன்னு கேட்டதா சொல்லு" அப்டின்னு சொல்லலாமே?. பாசத்திற்காக இரண்டு வார்த்தைகள் கூட அதிகம் கூற முடியாதா? :)

Anonymous said...

haa haa

:)))))))))))))))

Post a Comment