Wednesday, December 1, 2010

அவ என்ன காதலிக்கிறாளா தெரியலியே? ட்ரைனிங் எடுத்து கோங்க

1) எங்காவது காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் கவனம் அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.

2) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த உங்க ஆளு , பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூம் என்றால் double confirm .

3) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த உங்க ஆளு, Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

4) செல்போனில் எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் உங்க ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். ( நோட்: உங்க கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...)

5) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் உங்க கால் வரும்போது தனக்கே கேட்காதவாறு வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)

6) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

7) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, உங்களையே முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.

8) உங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

9) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)

10) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்.

முந்தய Article "காதலிக்க போறீங்களா? ட்ரைனிங் எடுத்து கோங்க"
அடுத்த Article "காதல் start ஆகிடிச்சா? ட்ரைனிங் எடுத்து கோங்க"

4 comments:

ஹரிஸ் Harish said...

:)..கலக்குறீங்களே நண்பா...இன்னைக்கு கன்பார்ம் பண்ணீர்ரன்..

அனுபவமோ..

ஹரிஸ் Harish said...

நண்பா word verification ஐ எடுத்துவிடுங்கள்..

Unknown said...

நன்றி, ஹரிஸ்
Word verification ஐ எடுத்துவிடலாம். ஆனால் இங்கு spammers தொல்லை அதிகம்

Unknown said...

ஹரிஸ், Conform பண்ணிடீங்களா?

Post a Comment