இங்கு மூடபழக்கங்களை பற்றி பலர் விழிப்புணர்வு செய்தாலும் இன்னும் பலர் அந்த பழக்கங்களில் இருந்து தங்களை விடிவிப்பதில்லை. மீடியாக்கள் விழிப்புணர்வுகளில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதே மீடியாக்கள் மூடபழக்கங்களை வளர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றன.
இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது தொலைக்காட்சி மீடியாக்கள் பற்றி தான். தொலைக்காட்சி மீடியாக்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன என்பதை நான் மறுக்கவில்லை. பல முற்போக்கான நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே தொலைக்காட்சிகள் சில நிகழ்ச்சிகளில் குறிப்பாக மெகா தொடர்களின் மூலமாக மூடபழக்கங்களையும் வளர்க்கின்றன.
அதாவது, பிரார்த்தனை செய்யும் போது விளக்கு அணைவது, நடந்து செல்லும் போது கால் வழுக்குவது, பூனை குருக்கேசெல்வது போன்றவை கடவுள் தமக்கு நடக்க விருக்கும் தீமையை உணர்த்த செய்வதாக காட்சிகள் சித்தரிக்கபடுகின்றன. அடுத்த scene இல் அதற்க்கு தகுர்ந்தார் போல் காட்சிகளும் இடம் பெறுகின்றன.
தொலைக்காட்சிகளில் பிரதானமாக இதை போன்ற மெகா தொடர்களையே பார்க்கும் பலர் அவர்களுக்குள் ஏற்படுத்தப்பர்டிருந்த சிறிதளவு விழிப்புணர்வுகளை இழந்து மீண்டும் மீண்டும் மூடபழக்கத்திலே ஊறிவிடுகிறாகள்.
சிந்தியுங்கள்.தெளிவாகுங்கள். முடிந்தால் குழம்பியிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தெளிவாக்குங்கள்.
"மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்." என்ற இந்த கூற்றை இங்கு குறிப்பிட நான் விரும்புகிறேன்.
உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகின்றன.
12 comments:
hi moorthy..karuthu super..ama epdi unaku AD display aguthu..en blog la adsense activate pannen...bt deactivate ayiduchu..nee epdi panne?
சசி, உங்க கருத்துக்கு நன்றி
மெகா தொடர் பார்த்தன் விளைவாக ஒரு பெண்மணி எண்ண ஆனார் என்பதை இன்று தினமலருடன் வந்த வாரமலர் புத்தகத்தின் 'இது உங்கள் இடம்' பகுதியில் போட்டிருக்கிறார்கள் மூர்த்தி. இந்த அவலம் என்று நீங்குமோ..
நன்றி, நானும் அதை படித்தேன். மிகவும் வருத்தமான செய்திதான்.
தலைவரே நீங்க தப்பு கணக்கு போட்டுடீங்க. அவங்களை பொறுத்தவரை முதலில் வியாபாரம். அப்புறம்தான் கொள்கை மண்ணாங்கட்டி எல்லாம். பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்த எல்லா தொலைகாட்சிகளுமே மக்களை முட்டாளாக்கும் வேலையை கனஜோராக செய்து வருகின்றன. பகுத்தறிவு என்றால் மக்களை சிந்திக்க வைப்பது. ஆனால் இவர்கள் செய்வது மக்களை சிந்திக்க விடாமல், தாங்கள் சொல்வதை கேட்க செய்வது. கொடுமைடா சாமி.
நண்பரே பாலா, பகுத்தறிவை வளர்க்கும் சில நிகழ்ச்சிகளும் உள்ளன. என்பதையும் அனைவரும் அப்போ கொள்ளதான் வேண்டும்.
சம்பந்தப்பட்ட சேனல்களில் பகுத்தறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பது என் கருத்து.
சம்பந்த பட்ட சேனல்களில் இல்லாமல் இருக்கலாம். நான் எனது கருத்தில் எல்லா சேனல்களையும் குறிப்பிட்டு சொல்லி இருந்தேன். ஆனால், பெரும்பாலோனோர் சம்பந்த பட்ட சேனல்களை தவிர வேறு சேனல்களை பார்ப்பதில்லை என்பது தான் வருத்தம் :(
பொதுவாக தமிழில் வரும் அனைத்து சேனல்களிலும் பக்தி தொடர் ஒன்று வந்து கொண்டுதான் இருக்கிறது. அதே போல ராசிக்கல், போன் செய்து விடை சொன்னால் 10000 ரூபாய், மூலிகை மருத்துவம் போன்ற நிகழ்ச்சிகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றம் நடந்தது என்ன நிகழ்ச்சி கூட அரைமணி நேரம் சும்மா பில்டப் கொடுத்து விட்டு, கடைசியில் தான் இதெல்லாம் பொய் என்று சொல்கிறார்கள்.
நான் Discovery , NGO, ... போன்ற அறிவை வளர்க்க கூடிய சேனல்களை பற்றி கூறினேன். நீங்க ராசிக்கல், பக்திமாலைனு போறீங்களே!
ஆண்கள் என்ற வகையில் எல்லாம் சரிதான். ஆனால் பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்ப்பது தமிழ் சேனல்தான். அவர்கள் எல்லாம் டிஸ்கவரி, நாட் ஜியோ எல்லாம் பார்ப்பது சிங்கம் மான் வேட்டையாடும் பைட் சீனுக்கு மட்டும்தான். சில ஊர்களில் கேபிளில் வெறும் தமிழ் சேனல் மட்டும்தான் வரும்.
இது போன்ற ஒரு நிலையை தான் நான் என் பதிவில் கூறியிருந்தேன்
Post a Comment