Friday, June 24, 2011

இணையத்தில் இரு வருடம் - நகைச்சுவை ஆனால் உண்மை


இத்தனை நாட்களாக இணையத்தில் சுற்றி திரிகிறேன்.. அப்படி என்ன தான் பண்ணுகிறேன்? கேளுங்கள் என் ஸ்டோரியை...

பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல பதிவுகளை சந்தித்திருக்கிறது  புதுமையான பல மொக்கைகளை தந்திருக்கிறது. ஆனால், இந்த பதிவு ஒன்றும் உருப்படியானது அல்ல.. பதிவு எழுதும் நான் ஒன்றும் வெட்டிபையன் அல்ல.. பரந்து விரிந்த இந்த இணைய உலகத்திலே உலாவிகளிலே சர்வ்வ்வ்வ சாதாரணமாக உலாவி வந்த ஜீவன்களிலே நானும் ஒருவன். 

பேஸ்புக்கில் அத்துமீறி நுழைந்தேன். ட்விட்டர்ரில் காலடி வைத்தேன் ப்ளாக் எழுத்து கொண்டிருக்கிறேன் இப்படியெல்லாம்  ஏன் ஏதாவது உருப்படியா பண்ணலாம் என்றா !! இல்லை.. . நிச்சமாக இல்லை...

பேஸ்புக்கில் நுழைந்தேன் ஏன்.. பேஸ்புக் என்ற பெயர் சரி இல்லை அதை நோஸ்புக் என்று மற்ற சொல்லியா !! இல்லை.. பேஸ்புக்கில் சாட் செய்து  மாயாஜாலில் டேட் செய்யலாம் என்பற்காக. ட்விட்டர்ரில் காலடி வைத்தேன் ஏன்.. பலரின் DP ல் உள்ள முட்டையை  ஆம்லேட் போட்டு சாபிடுவதற்கா!!  இல்லை.. தனியாக பெண்களை லிஸ்ட் போட்டு அவர்களுடன் கடலை போடுவதற்காக...

உனக்கேன் இந்த வெட்டி வேலை உலகத்தில் பாதி பேர் செய்யாத வேலை என்று நீங்கள் கேட்கலாம். அலுவலகத்தில் வேலை இல்லை... அலுவலகத்தில் பாய் பிரெண்ட் இல்லாத பிகரும் இல்லை.  எனது பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கிறது..  அசந்த நேரத்தில் நீங்கள் விரும்பும் அம்சமான பிகரையும் அபேஸ் செய்து கொண்டுபோகும் கயவர்களை போல என்னையும் வில்லனாக பார்க்கிறீர்களே ஏன்.. இந்த நல்லவனின் பிளாஷ்பாக்கை சைடுல ரீவைண்ட் செய்து பார்த்தல் இவன் கடந்து வந்துள்ள பிகர்கள் எத்தனை வாங்கி இருக்க வேண்டிய உம்மாக்கள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்..

நான் பக்கத்து வீட்டு பெண்ணை பக்கத்தில் பாத்ததில்லை. ஆனால், எதிர் வீட்டு பெண்ணை எட்டி நின்று பாத்திருக்கிறேன்.. நான் அலுவலகத்தில் மீட்டிங் கூட போனதில்லை.. ஆனால், மாயாஜாலில் டேடிங் போய் இருக்கிறேன்.. கேளுங்கள் என் ஸ்டோரியை இந்த பதிவு முடிவதற்கு முன்னாள்.. 

இணையதளத்திலே, இம்சைகள் செய்யாமல் சுதந்திரமாக சுற்றி திரிந்தவன் நான். இணையமக்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் ஒரு விதிவிலக்கா.. ஜிமெயில்லில் அக்கௌன்ட் ஓபன் செய்த நான்.. ஜிங்கிளிகளை காண ட்விட்டர் நோக்கி ஓடோடி வந்தேன்.. ட்விட்டர்ர்ர்ர் என்னை போடா பட்டர்ர்ர் என்றது.. என் எண்ணங்களை நைசாக பகிர்ந்து கொண்டது. புதிய மனிதர்களை தேடி தந்தது.. எல்லாம் சேர்ந்து செட் ஆன நான் இறுதியில் கேடிகளும் கோடிகளும் புரளும் ஐடி பசங்க லிஸ்ட்லும் சேர்ந்தேன்.

என் பெயரோ மூர்த்'தீ அனல் பறக்கும் பெயர். ஆனால் தீயை உபகோகிக்க கையிலோ சிகரெட் இல்லை (ஐ மீன் நான் நல்லவன்). நான் மட்டும் திருந்திஇருந்தால், ட்விட்டர்க்கு 5GB உருப்படியாக  கிடைத்திருக்கலாம், பேஸ்புக்கிற்கு 8GB கிடைத்திருக்கலாம், இந்த ப்ளாகின் பெயரில் வேறு ஒரு உருப்படியான ப்ளாக் கிடைத்திருக்கலாம். இல்லை... அதை தான் என்னை செய்ய விடுகிறதா இந்த இணையஉலகம்.

ட்விட்டரில் அருமையான ட்வீட்கள் போட்டார்கள் ரீட்வீட் செய்தேன். பேஸ் புக்கில் அம்சமான பெண்கள் போட்டோ போட்டார்கள் கமெண்ட் செய்தேன். பதிவர்கள் இதை விட மொக்கையான பதிவுகள் போட்டார்கள் அதையே  நானும் செய்தேன். செய்தேன்... செய்தேன்...   பாலோவர்ஸ் வரும் வரை செய்தேன். என் போட்டோவிருக்கு கமெண்ட் வரும் செய்தேன். ப்ளாக்கிற்கு கூட்டம் வரும் வரை செய்தேன்.. எத்தனை சைட்களடா.. அதில் தான் எத்தனை பிகர்களடா... செய்தேன்.. செய்தேன்.. எல்லா சைட்களின் உள்ளயே போய்  ரெஜிஸ்டர் செய்தேன்.. அங்க போர் அடித்ததால் அவற்றை மூடி விட்டேன். சத்தியம் இதை படித்தவர் ஆகி இருக்கவேண்டும் அரைபைத்தியம்.

நீங்கள் இப்போ தலைதெறிக்க  ஓடி இருக்க வேண்டும்..  உங்கள் உடைகளை  கிழித்திருக்க வேண்டும்.. உங்கள் தலைமுடியை பிய்த்து எரிந்திருக்க வேண்டும்.. செய்தீர்களா... செய்தீர்களா.. இல்லையெனில் திருப்பி ஒருமுறை முதலில் இருந்து படியுங்கள்.

கீழ ஓட்டு பெட்டி இருக்குது. ஓட்டு போடுங்கன்னு நான் சொல்லல நியாபக படுத்தினேன்..

3 comments:

Sri said...

Nice comedy :-)

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா கலக்கல் காமெடி. விவேக் கோர்ட்டில் பேசுவது போலவே இருந்தது...

busybee4u said...

எலார் வாழ்விலும் ஸ்வரைஸ்யம் ஏரலம் இருகு பாஸ்........ நான் பலகர்கு புதுசு உங்கமாதிரி எனகு வரகுடாது

http://busybee4u.blogspot.com

Post a Comment