இது போன்ற விசங்களினால் சில பின்விளைவுகள் ஏற்படுது அததான் இப்போ உங்க கிட்ட சொல்லபோறேன். இப்போ இருந்து கொஞ்சம் பின்னாடி ஒரு 11 வருடம் சென்றால் 1999 நான் அப்பொழுது 7-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். 2000 ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் அழிய போகுதுன்னு பரவின வதந்தி எங்க பள்ளியில ரொம்ப பிரபலமானது. 1999 டிசம்பர் மாதமும் வந்துருச்சி அப்போதான் எங்களுக்கு அரையாண்டு பரீட்சை அப்போ எங்க வகுப்பறையில் ஒரு கூட்டம் 2000 தில் தான் தான் உலகம் அழிய போகுதே நாம எதுக்குயா படிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு சந்தோசமா திரிஞ்சிட்டு இருந்தது.
அப்படியே அந்த பரிட்சையும் ஓபி அடிச்சிட்டாங்க. ஆனால் அவங்க நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கல. விடுமுறைக்கு பின் பரிட்சையில் முட்டை மதிப்பெண் வங்கி ஆசிரியர் கிட்ட அடிவாங்கினது தான் மிச்சம்.
சரி சின்ன பசங்க தான் அப்படி இருக்குறாங்கன்னு பாத்தா பெரியவங்க அதுக்கு மேல பண்ணிருக்காங்க. எனக்கு தெரிஞ்ச பக்கத்து வீட்டு மாமா என்ன பண்ணாருன்னா. 2000 தில் உலகம் அழிஞ்சிரும் அதுனால வாழ்க்கைய அதுக்கு முன்னாடி அனுபவிக்கனும் அப்படின்னு லட்ச கணக்கில் கடன் வாங்கி வாழ்க்கைய அனுபவிசிருக்காரு. பாவம் இன்னும் அந்த கடனை அடைச்சிக்கிட்டு இருக்காருன்னா பாத்துகோங்க.
இதெல்லாம் என் கண் முன்னால் நடந்தது நான் எழுதிட்டேன். இன்னும் எத்தனை தெரியாமல் நடந்துருக்குதோ தெரியல. உலகம் இன்னைக்கு அழியுதோ நாளைக்கு அழியுதோ உங்க கடமையை மறக்காம செஞ்சுருங்க. அம்புட்டு தான்.
எப்போ பாத்தாலும் மொக்கையே போடுரயே என கேட்ட பல நண்பர்களுக்கு இந்த பதிவு ஒரு மரண அடியாக இருக்கும் என நம்புகிறேன்.
கீழபாருங்க Voting Widgets தெரியும். தெரியலன்னா உங்க monitor ஐ நல்லா தொடச்சிட்டு பாருங்க. இப்போ தெரியுதா? ஒரு குத்து குத்திட்டு போய்டே இருங்க.
3 comments:
// 2000 ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் அழிய போகுதுன்னு பரவின வதந்தி எங்க பள்ளியில ரொம்ப பிரபலமானது.
அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் ஷூமேக்கர் லெவி என்கிற பூமியை விட பெரிய விண்கல் பூமியில் மோதப்போகிறது என்று பெரிய வதந்தி கிளம்பியது. என் நண்பர்கள் பலர் வாய்விட்டு கதறி அழுதனர். பின்னர் அது வியாழன் கிரகத்தில் போய் மோதியது.
ஆஹா வடை போச்சே....
நன்றிங்கோ!
Post a Comment