Thursday, May 19, 2011

எவ்வளவோ படிச்சிடீங்க இதையும் படிங்க...

இது ஒரு கதை அவ்வளோதான். இது ஒரு நகைச்சுவைக்காக எழுதபட்டது தான். 

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள். 

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப்  வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400  டீம்க்கு $100 லாபம்).

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள், "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல  "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க 

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் டாக்கிஸ்.



4 comments:

Ram said...

ஹி ஹி.. நல்ல நகை..

பாலா said...

நல்ல நகைச்சுவை. ஒரு வேளை உண்மையாகவும் இருக்கக்கூடும்.

SOWMYA said...

ஹா ஹா நல்லாயிருக்கு

முனைவர் இரா.குணசீலன் said...

நம்மாளு யாரு..!!

நம்ம யாரும் அசைச்சிக்க முடியாது..

அதுலயும் நம்ம அரசியல்வாதிகள யாரும் ஏமாத்த முடியாது (ஏனா அவங்க தான் நம்மள ஏமாத்துவாங்க)

Post a Comment