இது ஒரு கதை அவ்வளோதான். இது ஒரு நகைச்சுவைக்காக எழுதபட்டது தான்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்.
ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்).
சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)
இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.
அமெரிக்க அதிகாரிகள், "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க
டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் டாக்கிஸ்.
4 comments:
ஹி ஹி.. நல்ல நகை..
நல்ல நகைச்சுவை. ஒரு வேளை உண்மையாகவும் இருக்கக்கூடும்.
ஹா ஹா நல்லாயிருக்கு
நம்மாளு யாரு..!!
நம்ம யாரும் அசைச்சிக்க முடியாது..
அதுலயும் நம்ம அரசியல்வாதிகள யாரும் ஏமாத்த முடியாது (ஏனா அவங்க தான் நம்மள ஏமாத்துவாங்க)
Post a Comment