Tuesday, February 15, 2011

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது நல்ல பழக்கம்

காலையில் செய்தித்தாள் வாசித்து கொண்டிருக்கும் போது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால் என்னென்ன விபத்துக்கள் நடந்துள்ளன என்ற கணக்கெடுப்பை உலக நிறுவனம் ஒன்று கணித்து வழங்கி இருந்தது எப்படியோ என் கண்களில் விழுந்து விட்டது.
அதன்படி, நடக்கும் வாகன விபத்துகளில் 40% இரவில் நடக்கிறது. அதில் 33% விபத்து குடித்து விட்டு வண்டி ஓட்டுவதால் நடக்கிறதாம். ம்ம்ம் என்னத்த பண்றது.

இதுல எனக்கு என்ன இடிக்குதுன்னா... இந்த குடிக்காம தெளிவா வண்டி ஓட்டுற மத்த 67% பேர்களால் தான் அதிகமா விபத்துக்குள்ளாகி இருக்காங்க. அப்போ கவர்மென்ட் என்ன பண்ணனும். எல்லாரும் "மூக்குமுட்ட குடித்துவிட்டு வண்டி ஓட்டுங்க" இப்படின்னு விழிப்புணர்வை ஏற்படுத்தணும். மாறாக "குடித்துவிட்டு வண்டி ஓட்டதீங்க" இப்படின்னு அங்கே இங்க அறிவுப்பு பலகைகளை வச்சிருக்குறாங்க. இது வருத்தத்திற்குரியது, கண்டனத்துக்குரியது. எனவே, "Always Drunk and Drive - help to reduce accidents" சரிதானங்க?

பி.கு: இத படிச்சிட்டு குடிச்சிட்டு வண்டி ஓட்ட போரேன்னு போக தீங்க. "Don't Drunk and Drive"

5 comments:

Philosophy Prabhakaran said...

Super...

Philosophy Prabhakaran said...

உங்கள் இடுகைகள் சிலவற்றைப் பற்றி வலைச்சரத்தில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து பார்த்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html

Chitra said...

இப்படியெல்லாம் யோசிக்க.... எப்படிங்க முடியுது? அதான் அரசாங்கமே டாஸ்மார்க் திறந்து வச்சுருக்காங்களே.... மறைமுகமாக உங்க மெசேஜ் பாஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க போல.... :-(

ஞாஞளஙலாழன் said...

>ஆதாரத்துக்கு சேதாரம் ஆனா நான் பொறுப்பில்ல

உண்மை தான் போல.

ஆர்வா said...

டெரரா டைட்டில் வெச்சி இப்படி பயம் காட்டுறீங்களே....

நியூட்டனின் 3ம் விதி

Post a Comment