Saturday, February 12, 2011

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

இன்றைக்கு காலையில் சாப்பிடும் போது கேட்டவை: (சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடலின் ராகத்தில் படிக்கவும்)

சத்தம் போடாத பெற்றோர் கேட்டேன்
யுத்தம் செய்யாத சிஸ்டர் கேட்டேன்

கிரெடிட் கார்டு -ன் பின் கோட் கேட்டேன்
டெபிட்டே ஆகாத டெபிட் கார்டு  கேட்டேன்

உண்மையை சொல்லும் விளம்பரம் கேட்டேன்பொய்யே சொல்லாத நண்பனை கேட்டேன்

முத்தம் கொடுக்க காதலி  கேட்டேன்
புழுக்கை போடாதா சுண்டெலி கேட்டேன்

கடலை போட பிகர்கள் கேட்டேன்
ப்ரீ-ஆ  போக புல்வெளி கேட்டேன்

உணவு ஊட்ட சம்சாரம் கேட்டேன்
பக்கத்து ஸ்டேட்-இல் மின்சாரம் கேட்டேன்

சீரியல் இல்லாத TV ஐ கேட்டேன்
ஹீரோவே இல்லாத திரைப்படம் கேட்டேன்

5 வயதில் சம்சா கேட்டேன்
6 வயதில் அம்சா கேட்டேன்

உயிர் மெய் இல்லாத பெயரை கேட்டேன்
பஞ்சர் ஆகாத டயரை கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடக்கவில்லை தட்டில் தோசை தீரவில்லை. சாம்பார் சாம்பார் சாம்பார் என்று சாம்பார் கேட்டேன்.... ஆஅ  ஆ ஆஆ..... ஆஆஆ.... ஆ (ஐயகோ அதுவும் கிடைக்கவில்லை).

இது சும்மா க்ளாமரப்பி :


18 வயச தாண்டினவங்க ஓட்டு போட வேண்டியது அவர்கள் கடமை (பிடிச்சாலும் பிடிக்கலைனாலும்). அதனால கீழ உள்ள ஒட்டு பெட்டியில ஒட்டு போடுங்க.

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//புழுக்கை போடாதா சுண்டெலி கேட்டேன்//

என்னா வில்லத்தனம்.....

MANO நாஞ்சில் மனோ said...

//6 வயதில் அம்சா கேட்டேன்//

பிச்சிபுடுவேன் பிச்சி.....

MANO நாஞ்சில் மனோ said...

//இத்தனை கேட்டும் கிடக்கவில்லை தட்டில் தோசை தீரவில்லை. சாம்பார் சாம்பார் சாம்பார் என்று சாம்பார் கேட்டேன்.... ஆஅ ஆ ஆஆ..... ஆஆஆ.... ஆ (ஐயகோ அதுவும் கிடைக்கவில்லை)//


நாசமா போச்சு போங்க.....

Post a Comment