Thursday, February 3, 2011

இன்றைக்கு இது பெரிய மான பிரச்சனை

 அது என்ன அவ்வளவு பெரிய மான பிரச்சனை? இது பசங்க பிரச்சனை. வேற ஒன்னும் இல்ல பொண்ணுங்க கிட்ட அடிவாங்குறது தாங்க அந்த மான பிரச்சனை. உண்மையாவே... அடிவாங்குறது மான பிரச்சனை இல்லை. கம்மியா அடிவங்குனாதான் கொவ்ரவம் குறைஞ்சி போயிரும்.

இந்த பசங்கள பாருங்களேன். அவங்களுக்கு பொண்ணுங்க கிட்ட அடிவாங்கும்போது அவ்வளவு சந்தோசம். அடிவாங்குன பிறகு முகம் அவ்வளவு பளீர்ன்னு தெரியும்.

ஆனா, இதேபசங்க ஒரு பையன் லேசா முறைச்சி பாத்தாலே சண்டை போடுறாங்க. இப்படிதான் பாருங்க நான் ஒரு காலேஜ் கல்ச்ரல்ஸ் போயிருந்தேன். அந்த காலேஜ்-ல ஒரு பிகருகிட்ட போய் ஹாயா கடலை போட்டுக்கிட்டு இருந்தேன் (நாம்பெல்லாம் போறதே அதுக்கு தானே). அந்த காலேஜ் பையன் ஒருத்தன் வந்து அந்த பொண்ண தொந்தரவு பண்ணினான். நான்... ஏன்? அண்ணா, அந்த பொண்ண கிண்டல் பண்றீங்கன்னு சிரிச்சிகிட்டே தான் கேட்டேன். அவனோ... என்னை முறச்சிகிட்டே போய்டான். பிறகு, விஜய் படத்துல அவரோட இன்ட்ரோ காட்சில அவர 5 - 6  ஆங்கில்லே கட் பண்ணி கட் பண்ணி காட்ற மாதிரி. ஒரு 5 பசங்கள கூட்டிட்டு வந்து தூரத்துல 6 ஆங்கில்லே நின்னு என்ன அவங்களுக்கு அடையாளம் காண்பித்து "இவனதாண்டா, எங்கிட்ட வம்பிழுத்தான்." ன்னு  சொன்னான்.

மாலை எல்லாம் முடிச்சு போகும் போது ஒருத்தன் வந்து "உங்கள கூப்புடுறாங்க" அப்படின்னான். யார்ரா என்ன கூப்புடுறது ஏதாவது பிகரா இருக்குமோ? ன்னு போனேன். கூட என்னோட நண்பர்கள் மூணு பேர் வந்திருந்தாங்க. பாத்த ஒரு எட்டு பசங்க நின்னு கிட்டு இருந்தாங்க. என்னன்னு கேட்க்குறதுக்குள்ள "புக்காகா.... டிமீல்... டுச்.. டம்ம்ம்...."  அப்படின்னு அடி விழுற சத்தம். 10 நிமிஷம் கழிச்சு நானும் என் நண்பர்களும் அங்கே இருந்து வந்தோம். என்ன.... கை கால் எல்லாம் ஒரே வலி கொஞ்சம் ஷர்ட் கிளிஞ்சிருந்தது அவ்வளோ தான். அது வேற ஒன்னும் இல்ல அந்த 8 பேரையும் அடிச்சு புரட்டி எடுக்கும் போது (எங்கள நம்புங்க) ஷர்ட் இருக்கமா இருந்ததால கிழிஞ்சி போச்சு. சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குது?. பாத்தீங்களா? ஒரு சின்ன வார்த்தை தான் சொன்னேன் அதுக்கு இவ்வளவு கலாட்டா பண்ணிடாங்க. நான் சொல்ல வந்தத விட்டுட்டு என் சொந்த சோக கதை எல்லாம் சொல்லி கிட்டு இருக்குறேன்.


இப்போ ஒரு பொண்ணு கிட்ட அடிவாங்குனத்தை பசங்க ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டு சுத்துவாங்க. டேய் ரமேஷ்,  "நீ சொன்ன மாதிரி இல்லைடா ஆர்த்தி அடி சும்மா இடி மாதிரி இருந்தது. ரெண்டு நாளைக்கு முன்னாடி பளார்ன்னு ஒன்னு விட்டா இன்னும் கூட கன்னம் சிவப்பா இருக்குது". போட  கணேஷ், "கீர்த்தி, ஒரு வாரத்துக்கு முன்ன ஒரு அரை விட்டால்ல இன்னும் காதுக்குள்ள "நொய்ய்ய்ய்....." ன்னு சத்தம் கேட்டு கிட்டு இருக்குது.

காலைல திவ்யா கிட்ட வாங்குன விளக்கமாத்து அடி நல்லா இருந்ததா? இல்ல நேத்து கவிதா கிட்ட  வாங்குன புத்தம் புது செருப்படி நல்லா இருந்ததா? ன்னு நண்பர்களுக்கு போன் செய்து கான்பிரன்ஸ் ல போட்டு  ஒரு விவாதமே செய்தது அவங்க கவ்ரவத்தை உயர்த்துவங்க. கல்யாணம் ஆனா பிறகு இதெல்லாம் வெளிய சொல்ல முடியாது. அதனால அதுக்கு முன்னாடியே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிவாங்கி உங்க கவுரவத்த உயர்திகோங்கோ... அடிவாங்கலன்னா இன்றைய நிலையில் இது பெரிய மான பிரச்சனை ஆகிவிடும்!

நீங்களும் அடிவங்குபவரா? நீங்க வாங்கியதில் ஒன்றை இந்த பதிவிற்கு ஓட்டாக குத்தவும்

அடிகள் பல வாங்கி தவிக்கும் அன்பர்களுக்கு  இது எக்ஸ்ட்ரா பிட்


4 comments:

Philosophy Prabhakaran said...

இதற்கு விழிப்புனர்வுன்னு லேபில் வேறயா... வெளங்கிடும்... ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை...

பாலா said...

என்ன இருந்தாலும் ஆசப்பட்டவங்க கையால அடி வாங்குர மாதிரி வருமா?

MANO நாஞ்சில் மனோ said...

அடிவாங்குவோர் சங்கம்னு ஒன்னை ஆரம்பியுங்க....
நாங்களும் கோபம் [பொண்டாடி மேல] வரும் போது உங்களை கூப்பிட்டு அடிக்க வசதியா இருக்கும்ல....

Unknown said...

@பிரபாகரன் என்னால் முடிந்த விழிப்புணர்வு
@பாலா கையால் அடிவாங்கினா சரி... ஆனால் விளக்கமாரு... செருப்பு... இப்படியும் ஒரு லிஸ்ட் போதே
@மனோ குவாட்டர் அடிக்கிற உங்களுக்கு சைடிஷ் நானா?

Post a Comment