ஒரு திங்கள்கிழமை நண்பர் ஒருத்தரை பார்க்க செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த "மூதாட்டி", மூதாட்டி என்று சொல்லமுடியாது சற்று திடமான உடல் தான். அனைவரிடமும் தர்மம் கேட்டார். சிலர் 2, 5 ருபாய் போட்டார்கள்.
அப்பொழுது அங்குவந்த பேருந்து நடத்துனர் அந்த மூதாட்டியை பேருத்தில் இருந்து வெளியே போகும்படி வற்புறுத்தினார். மூதாட்டி முனகி கொண்டே பேருந்தில் இருந்து கீழே இறங்காமல் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தார். வேகமாக வந்த நடத்துனர் வெளியே செல்லும்படி கூச்சலிட்டார்.
கோபமடைந்த அந்த மூதாட்டி நடத்துனரை பயங்கரமாக திட்டினார். அவர் கடைசியாக ஒன்று சொன்னார் "நாங்கெல்லாம் டிரைன்லயே பிச்சை எடுத்தவங்க. அவ்ளோ பெரிய வண்டிலயே என்னை யாரும் கேள்வி கேட்டதில்லை. இத்துநோண்டு பஸ்ஸ வைச்சிட்டு ரொம்பதான் பேசுறான்."
என்று பெருமையாக சொன்னார்.
இதை கேட்ட எனக்கு சிரிப்பதா அவர் அறியாமை கண்டு பரிதாபபடுவதா என்று தெரியவில்லை.
2 comments:
நாம எல்லாம் பிட்சைகாரங்ககளை கூட இலக்கிய பார்வையோடு நோக்கி பதிவு போடுற ஆளுகன்னு conform பண்ணிடுவீங்க போல..!
அதில் என்ன சந்தேகம் :)
Post a Comment