மருத்துவமனையில் ஒருவருக்கு மூளையில் பிரச்சனை உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் மருத்துவர் அறையில் இருந்து வந்து உறவினர்களிடம் நோயாளிக்கு உடனடியாக "மூளை மாற்று அறுவை சிகிச்சை" செய்தால் தான் நோயாளி பிழைப்பார். உடனடியாக, மூளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
மூளை வேண்டுமானால் நானே ஏற்பாடு செய்துவிடுகிறேன் என்றார். "சரி, எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள்" என்று உறவினர்களில் பலரும் மருத்துவரை கேட்டு கொண்டார்கள். உறவினர்களில் ஒருவர் எவ்வளவு மூளைக்கு செலவாகும் என்றார்.
மருத்துவர் அனைவரையும் பார்த்துவிட்டு ஆண் மூளை என்றால் 5 லட்சம். பெண் மூளை என்றால் 5 ஆயிரம் என்று அவர்களது விலை பட்டியலை காட்டினர். அதை கேட்ட அங்கிருந்த ஆண்களில் சிலர் சிரிப்பை கட்டு படுத்தி கொண்டு பெண்களை பர்ர்த்து ஒரு ஏளனமான பார்வை பார்த்தனர். அதில் ஒருவர் மருத்துவரிடம் "ஏன் பெண்கள் மூளை ஆண்கள் மூளையை விட மிக மலிவாக இருக்கிறது" என்று பலர் கேட்க துடித்த கேள்வியை கேட்டார்.
இது பொதுவாக எல்லா மருத்துவமனையிலும் உள்ள விலை பட்டியல் தான். பெண்கள் மூளை மலிவாக இருக்க காரணம். அது அதிகமாக உபயோக பட்டிருப்பது தான் என்று மருத்துவர் கூற அனைவரும் திரு திரு வென பெண்களை பார்த்து மரியாதையாக முழித்தனர். முற்றும் :D
5 comments:
mm.... Interesting....
உண்மையாகவ ?
உண்மையா பொய்யா? என்பது நீங்கள் எடுத்துகொள்வதில் தான் உள்ளது
நல்லா இருந்தது என் வலைபூவிலும் மீள் பதிவ போட்டுட்டேன்.
நன்றி சரவணகுமார்
Post a Comment