Monday, May 9, 2011

ட்விட்டர், பேஸ்புக்கை விட்டு விட்டு உருப்பட சில யோசனைகள்

வேலை வெட்டிய விட்டுட்டு சொந்த கேர்ள்பிரெண்ட்டை கூட விட்டுட்டு ட்விட்டர், பேஸ்புக் -ல் குடும்பம் நடத்துபவரா நீங்கள் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதிலிருந்து விடுபட உங்களுக்கு சில யோசனைகளை கூறுகிறேன்.


  1. முதலும் முடிவுமாக நீங்கள் செய்யவேண்டிய வேலை நீங்கள் ஆணாக இருந்தால் இதிலுள்ள பெண்கள் சகவாசத்தையும், பெண்கள், ஆண்கள் சகவாசத்தையும் கலட்டிவிடுவது மிகுந்த பயனை தரும். 
  2. இதுலயே மூணு நாள் மூச்சி விடாம  இருந்தீங்கன்னா... இதுல மட்டும் இல்ல உங்க வாழ்கையில் உள்ள எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடு பட்டு விடலாம். (உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா பிளாஷ் நியூஸ்ல கூட வரலாம்... )
  3. ஒவ்வொரு முறை logout செய்யும் போதும் நீங்கள் உபயோக படுத்திய கணினியை அடித்து நொறுக்குவதன் மூலம் இதிலிருந்து சுலபமாக விடுபடலாம்
  4. ஒவ்வொரு முறை login செய்யும் போதும் உங்கள் தலையை சுத்தியல் கொண்டு சிறிது ரெத்தம் வருமளவு மெதுவாக "நங்." என்று அடிக்கவும். ரெத்தம் வரவில்லை என்றால் " நங் நங்.." என்று அடிக்கவும். இன்னும் வரவில்லை என்றால் "நச்சு"ன்னு ஒரே போடு போடவும். 
  5. "ட்விட்டர், பேஸ்புக் -ஐ  விட்டு விட்டு உருப்படுவோர் சங்கம்" அப்படின்னு ட்விட்டர்ல ஒரு hashtag -ம் பேஸ்புக்கில்  ஒரு group -ம் உருவாக்கி உருப்படலாம்.   
இதை மற்றவர்களுக்கும் சென்றடைய செய்து அவர்களும் உருப்பட உதவ வேண்டுகிறேன் . (ஓட்டு போடுங்க)

Friday, May 6, 2011

த்ரிஷாவுக்காக... ஒரு ரீமிக்ஸ்




மண்ணானாலும் திரிஷா தலையில் மண்ணாவேன் (களிமண்ண சொன்னேன்)
ஒரு மரமானாலும் திரிஷா தோட்டத்து மரமாவேன் 
ஒரு கல்லனாலும் திரிஷா குளியலறை கல்லாவேன்  
ஒரு புல்லானாலும் திரிஷா அடிக்கும் புல்லாவேன். நான் ...

(மண்ணானாலும்) 

பொன்னானாலும்  திரிஷா கழுத்தில் செயின் (கொஞ்சம் நீளமான செயின்) ஆவேன்
பனி பூவானாலும்  திரிஷா தலையில்  பூவாவேன்
தமிழ் பேச்சானாலும்  திரிஷா புகழ் பாடும் பேச்சாவேன்
மனம் தெளிவானாலும்  திரிஷா அருளால் பித்தவேன்.  நான் ...

(மண்ணானாலும்) 

ஒரு சொல்லானாலும்  திரிஷா என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும்  திரிஷாவுக்கு சுவையாவேன்
நீ உண்டானாலும் அதுக்கு நானே முதலாவேன்
நீ தண்ணி அடித்தாலும் அதுக்கு நானே சைடுடிஷ் ஆவேன். நான்....(மண்ணானாலும்) 

Monday, April 18, 2011

ட்வென்டி/ ட்வென்டி ரக பரிட்சை - சில ஆலோசனைகள்

ட்வென்டி/ ட்வென்டி கிரிகெட் போட்டிகள் ரொம்ப விறு விறுப்பா இருக்குது. கிரிகெட் போட்டிகள் ரொம்பவும் பிரபலம் ஆகிவிட்டது.



இப்போ பசங்க பரிட்சை என்றாலே வெறுப்பா பாக்குறாங்க. அதுக்காக ஒரு மாற்றத்துக்கு ட்வென்டி/ ட்வென்டி ரகத்துல பரிட்சை நடத்தினா வெறுப்பை பெருமளவு குறைக்கலாம். அதற்காக சில ஆலோசனைகள்

Friday, March 11, 2011

பதிவர்களுக்கு சில பஞ்ச் டயலாக்

பதிவர்கள் பஞ்ச் டயலாக் இல்லமா கஷ்டபடுறதா எனக்கு உளவுத்துறை தகவல் வந்தது. அதுக்காத்தான் இந்த பஞ்ச் பதிவு.
  1. கண்ணா... படிக்கிறத படிக்காம இருக்க முடியாது. படிக்காம இருக்குறத படிக்க முடியாது.
  2. நான் எப்போ எழுதுவேன் எப்படி எழுதுவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்துல கரைக்ட்டா  எழுதுவேன்.
  3. ஆண்டவன் சொல்றான்.  பதிவு எழுதி முடிக்கிறான்.
  4. என் பதிவு... தனி பதிவு.... சீண்டாத தாங்கமாட்ட
  5. நாலு பேருக்கு பொழுதுபோகலைன்னா.... எந்த மாதிரி பதிவு போட்டாலும் தப்பில்லை. (டோன்ட டோன்ட டோன்ட டோய் டோன்ட டோய் )
  6. ஒருதடவை பப்ளிஷ் பண்ணிடேன்னா  என் பதிவை நானே தொட மாட்டேன்.
  7. எவ்வளவோ போஸ்ட் பண்ணியாச்சி இத பண்ண மாட்டமா...
  8. அசந்தா பதிவு போடுறது உங்க பாலிசி. அசராம கமெண்ட் போடுறது எங்க பாலிசி. 
  9. பிளாக்குறவனும் பிளாக்மெயில் பண்றவனும் ஒண்ணா சேர்ந்ததா சரித்திரமே கிடையாது.
  10.  மிளகுப்பு (என் ப்ளாக் பேருதான்) .... தமிழ்லயே எல்லாருக்கும் பிடிச்ச ஒரே ப்ளாக். (சில கொடுமையான விசயங்கள பொருத்துகணும்)
உங்களுக்கு ஏதாவது பஞ்ச் டயலாக் தெரிஞ்சா சொல்லுங்க அதையும் இதுல சேத்துகிடுவோம்.

Thursday, March 10, 2011

இது ஒரு சராசரி மனிதனுக்காக

வாங்க வணக்கம். சரி ஒரு வாழ்கை தத்துவத்த சொல்லலாம்ன்னு நினைச்சு இந்த பதிவை போட்டிருக்கிறேன். கீழ உள்ளத முழுதாக படிக்கணும். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிருக்கான்னு ஓடிரகூடாது.  கடைசில தான் முக்கியமான விசயமே இருக்குது.