Monday, October 3, 2011

சண்டே குளிக்காதீங்க - இத முதல்ல படிங்க

சண்டே குளிச்சா பல பிரச்சனைகள் லைப்ல வருது என்பது பலர் அறியாத உண்மை.. எப்படின்னு கேட்கிறீங்களா கீழபடிங்க நீங்களே ஒத்துபீங்க.

சண்டே குளிச்சா வெளிய போகலாம்ன்னு தோனுது, வெளிய போன எந்த பிகரையாவது  சைட் அடிக்கலாம்னு தோனுது, சைட் அடிச்சா அப்படியே கொஞ்சம் சிக்னல் காட்டலாம்னு தோனுது, சிக்னல் வந்தா அப்படியே கொஞ்சம் பேசலாம்ன்னு தோனுது, அப்படியே பேச ஆரம்பிச்சா கடலை போடலாம்னு தோனுது, கடலை போட்டா அப்படியே நெக்ஸ்ட் சண்டே ப்ரீயான்னு கேக்க தோனுது, ப்ரீன்னு சொன்னா வெளிய போகலாமான்னு கேக்க தோனுது, எங்க போகலாம்னா பீச்க்கு போகலாம்ன்னு தோனுது, பீச் போன பைக்ல தான் போகனும்னு தோனுது, பைக்ல போன சடன் பிரேக் போடனும்னு தோனுது, அங்க போன அவ ரசிக்கிறதை எல்லாம் நாமளும் ரசிக்கனும்னு தோனுது, அப்படியே ரசிச்சா அதுக்குள்ள டைம் ஆகிடுச்சானு தோனுது, அப்படியே ட்ராப் பண்ணும் போது நெக்ஸ்ட் சண்டே சினிமா போலாமான்னு கேக்க தோனுது, அப்படியே போனாலும் நல்ல ரொமாண்டிக் மூவிக்கு போகலாம்ன்னு தோனுது, அப்படியே மூவி போனாலும் படத்த பாக்காம அவளை பாக்கலாம்னு தோனுது, படம் முடிஞ்சதும் அப்படியே  ஐஸ்கிரீம் பார்லர் போலாம்ன்னு தோனுது, கடைகாரர் நீங்க கேட்ட ப்லேவர் ஒன்னே ஒன்னுதான் இருக்குனு சொல்லனும்னு நினைக்க தோனுது, அவளும் "இட்'ஸ் ஓகே ஒன்ன ரெண்டுபேரும் ஷேர் பண்ணிக்கலாம்"ன்னு சொன்ன நன்னா இருக்கும்னு தோனுது, அப்பறம் அன்னைக்கு நைட் எல்லாம் ஒரே கவிதையா தோனுது, கடைசில இது தான் லவ்வோன்னு தோனுது, அடுத்தநாள் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணிடலாம்னு தோனுது, ஆனா பாருங்க அவ மட்டும் ஒத்துகிட்டா லைப்லாங்  கஷ்டம்னு மட்டும் தோனவே மாட்டிகுது.



இதெல்லாம் தேவையா? பேசாம சண்டே குளிக்கமா ஒரு ஓரமா மூடிகிட்டு தூங்கினா இந்த பிரச்சனை எல்லாம் வருமா..யோசிங்கபா.. நல்லா யோசிங்க o:

Saturday, September 17, 2011

ஒரு பெண்ணிடம் நேர்காணல்


எனக்கு பொழுதுபோகலை அதனால ஒரு பெண்ணிடம் சில கேள்விகள்  கேட்டேன். அவங்களுக்கும் பொழுதுபோகலை அதனால பதில் சொன்னங்க..  உங்களுக்கும் பொழுதுபோகலைன்னா இத படிங்க..

கேள்வி: மிஸ். உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீங்க எத்தனை வருசமா மிஸ்.உஷாவா இருக்கீங்க?
பதில்: பிறந்ததில் இருந்தே மிஸ் உஷா தான். 
(பெண்களால் ரசசியத்தை காக்கமுடியாதுன்னு யார்யா சொன்னா.. அவங்களோட  உண்மையான வயச சாகும்வரை ரகசியமாவே வச்சிருபாங்கலாம். அதற்கு இது ஒரு சாம்பிள்.)

கேள்வி: வருங்கால அமெரிக்க ஜனாதிபதி உஷா.. இந்த வாக்கியத்துல எத்தனை உண்மை இருக்கிறது?
பதில்: அது உறுதியா தெரியல.. ஆனா, சிறந்த குடும்பத்து குத்துவிளக்கு, நல்ல மருமகள், அன்பான மனைவி இப்படி சில பதவிகள் எல்லாம் கண்டிப்பா உண்டு.

கேள்வி: உங்க பிளஸ் என்னது?
பதில்: என்னோட  உயரம் 5.8. கூட்டத்துல கூட சைட் அடிக்க வசதியா இருக்கு.

கேள்வி:  நீங்க சைட் அடிக்கறத எதாவது அறிகுறி வச்சி தெரிஞ்சிக்கலாமா?
பதில்: எதோ முக்கியமான வேலைக்காக தான் உங்க பக்கம் திரும்பற மாதிரி நடிப்போம்.. ஆனா, அக்சுவலி அது சைட் தான்.. ஆஸ்கார் அவார்ட் வாங்கின நடிகர்களே தோத்து போயிருவாங்க.

கேள்வி: ஏன் எல்லா பொண்ணுகளும் தங்களை ஒரு உலகஅழகி ரேஞ்சுக்கு பீல் பண்றீங்க?
பதில்: நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை.

கேள்வி:  பசங்க என்ன பண்ணினா தான் நீங்க லவ் பண்ணுவீங்க?
பதில்: ஒரு தடவை முடிவு பண்ணிட்ட எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம். அதாவது, லவ் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட லவ் வந்தா கூட வெளிய சொல்லமாட்டோம்.. (தெளிவா குழப்பிடாங்கன்னு மட்டும் தெரியுது)

கேள்வி: "பாய்ஸ்" ரெண்டே வார்த்தையில் சொல்லுங்க? 
பதில்: பசங்க இல்லைனா பொண்ணுங்க லைப்பே போர். அஞ்சு வார்த்தை வந்துட்டு அட்ஜஸ்ட் பண்ணிகோங்க (இந்த பதிலுக்கு உங்களுக்கு அவார்ட் கொடுக்கலாம்)

கேள்வி: இன்றைய தலைமுறை பசங்களுக்கு நீங்க ஏதாவது அட்வைஸ் சொல்ல ஆசைபடுறீங்களா?
பதில்: அட்வைஸ் பண்ற அளவுக்கு பசங்க கெட்டு போய்டாங்களா... நீங்க நீங்களா இருங்க நாங்க நாங்களா இருக்கோம். பால்கோவான்ன இனிக்கனும் பாவக்காய்ன்னா கசக்கனும்..

கேள்வி: உங்களை ஒருத்தன் கரெக்ட் பண்ண பாக்கறான்.. அத தெரிஞ்சா என்ன செய்வீங்க?
பதில்: அட்வைஸ் பண்ணுவோம்.. அவன் பக்கதுல வரதுக்கே பயப்படற அளவுக்கு அட்வைஸ் பண்ணுவோம்.

கேள்வி: உங்கள் வாழ்க்கை லட்சியம்? 
பதில்: pass

கேள்வி: பெண்களை உண்மையா காதலிக்கற பசங்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?
பதில்: பொண்ணு ஒத்துகிட்டா பாருங்க.. இல்லாட்டி உங்களுக்கு ஆயிரம் பிகர் மடியும் மச்சி..

கேள்வி: உலகத்துல பசங்க எல்லாரும் ஓவர்நைட்ல சாமியாரா போய்டா என்ன பண்ணுவீங்க? 
பதில்: பிரியாணி சாப்ட்டு ப்ரீயா தூங்குவோம்.

கேள்வி: உங்க பெட்ரூம்ல ஒரு மெழுகுசிலை வைக்கறதா இருந்த அது யாரோட சிலையா இருக்கும்?
பதில்: கல்யாணம் முடியும் வரை சூர்யா.. கல்யாணத்துக்கு பிறகு கல்லானாலும் கணவன்.


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

கேள்வி: தமிழ்ல உங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை?  
பதில்: அரசியல். ஏன்னா, எனக்கு அரசியல் தெரியாது.. இத்துனூண்டு கூட..



Thursday, August 4, 2011

அன்ப பத்தி எல்லாம் கவிதை - என் நிலைமைய பாத்தீங்களா!!

இந்த பதிவு முழுவதும் அன்பை மையமாக கொண்டு எழுதப்பட்டது..

ரசிகன்
உன் அழகிற்கு ஆயிரம் ரசிகர்கள். உன் அன்பிற்கு நான் மட்டுமே ரசிகன்.

மண்புழு நான்
உன் அழகென்னும் பூவை சுற்றி வரும் தேனீ  நானல்ல. உன் இதயமெனும் வேரில் இதமாய் இருக்கம் மண்புழு நான்.

இதயதராசு
என் இதயதராசில் உன் அன்பிற்கு இணையாக.. அஸ்வர்யாராய், அனுஷ்கா, அமலாபால் இவர்களை வைத்து பார்க்கிறேன். துளியும் உயரவில்லை உன் பக்கம்!!




உன் மூச்சு காற்று
உன் அழகை தொட்டு செல்லும் காற்றை விட, நீ மூச்சாக விட்டு செல்லும் காற்றையே சுவாசிக்க விரும்புகிறேன்.. அது உன் இதயத்தை உரசி வந்ததால்!! 

குழந்தை நீ
இதனை வயதான பின்னும் தவழ்கிறாயே என் இதயத்தில்,  அங்கு என்றுமே  நீ குழந்தை தான் என்பதை மூளை சொல்லி தான் என் இதயத்திற்கு தெரியவேண்டும் என்பதில்லை!!

அழியா காதல்
கண் பார்த்து மனம் தேடுவது முதல் காதல், மனம் பார்த்து கண் தேடுவது கடைசி காதல். அதுவே என்றும் அழியா காதல்!

உறவின் அணிகலன்
நம்மை ஆதாரமாக்கி ஈகோவை சேதாரமாக்கி அன்பை செயகூலியாக்கி செய்யப்படும் விலைமதிப்பற்ற  உறவின் அணிகலனே காதல்!

லப், டப்
இதயம் பேசிய ரெண்டே வார்த்தை லப், டப். மூன்றாவதாக இப்பொழுது இன்னொரு வார்த்தை உன் பெயர்..! 

அன்பு காந்தம்
உன் அன்பென்ன ராட்சத காந்தமா? நான் எங்கிருந்தாலும் என்னை உன் பக்கமாகவே ஈர்க்கிறது..!

Thursday, July 14, 2011

கடைசில என்னையும் கவிஞன் ஆகிட்டாங்களே - கவிதை தொகுப்பு (பகுதி -2)

சிரிப்பின் ஒலி.
ஒவ்வொரு நரம்பிலும் அதிர்ந்து கொண்டிருக்கிறது.. நீ சத்தமின்றி சிரித்த சிரிப்பின் ஒலி.

நீ பேசுகிறாய்
நீ என்னிடம் ரகசியமாய் பேசும் வார்த்தைகளை ஒட்டுகேட்கவே நம்மருகில் வருகின்றன வண்ணத்துபூச்சிகள்.



கடன் கொடு
ஒரு முத்தமாவது கடனாக கொடு. கண்டிப்பாக வட்டியோடு திருப்பி தருகிறேன்.!

தென்றல் காற்றே
தென்றலுக்கும் கூட பொறாமை இருக்கும். எங்கள் நெருக்கத்தில் அதற்கு கூட இடம் இல்லையே! 

நீ இருக்கமாட்டாய் தென்றலே
என்னவளின் பூவிழியில் தூசு இட்ட தென்றலே. என் கண்ணில் பட்டுவிடாதே! பின் யாரும் ரசிக்க நீ இருக்க மாட்டாய்!

நீ கள்ளியடி
நமக்குள் இடைவெளி தேவை என்று கூறி, நீ என் விரல்களை இறுக பிணைப்பதே நீ பொய்யாக கூறியதை கட்டவிழ்த்து விடுகிறது. 

தனிமை 
தனிமையை என்றும் உணர்ந்ததே இல்லை. உன்னை சந்திக்கும் வரை.!!

தேன் கொடு
தேனீக்கள் உன் உதட்டை வட்டமிடுகிறதே.. அவைகளுக்கும் தேன் வேண்டுமாம்!!



Monday, July 11, 2011

சப்பை பிகரும் பிகரே!! - கவிதை தொகுப்பு

இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரையும் காயபடுத்த அல்ல. சும்மா உலுலுலுலாய்க்கு. உலகில் எல்லா பெண்களும் அழகே!!

எத்தனை நாள் தான் அழகான பிகருங்களுக்காகவே கவிதை எழுதுறது. சப்பை பிகருங்களையும் கவனிச்சு கவிஞர்கள் கவிதை எழுதவேண்டும். என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தொடக்கம்.. நானே இந்த பதிவின் மூலம்  பிள்ளையார் சுழி போடுறேன்.

கொலு கொளு பொம்மைகள்
உங்கள் வீட்டிலே கொலு வீற்றிருக்கும் கல் பொம்மைகள் அருகில் செல்லாதே.. அவையும் உன்னை கண்டு கொலுவில் இருந்து ஓடிவிடலாம்! 

சப்பை
நீ தான் சப்பை என்று நினைத்திருந்தேன்.. இல்லை.. உன் மூக்கு உன்னை விட சப்பை.. !

நரக வேதனை
தினமும் உன் சிரிப்பில் அழும் உன் அறை கண்ணாடியை விட நரக வேதனையை அனுபவிக்கும் பொருளும் உலகில் உண்டோ!!! 


உன்னை தேடி 

மிருககாட்சிசாலையின் பக்கம் தவறியும் சென்றுவிடாதே!! அங்கே ஒரு கொரிலாகுரங்கு ஜோடி தேடி அலைகிறதாம்!! 



உன் புகைபடம்
என் வாகனத்தின் முன் எலுமிச்சைபழம், திருஷ்டிக்காக. எனக்கோ அது எனக்கு தேவை இல்லை.. என்னிடம் இருக்கிறது உன் புகைபடம்!! 

பிழைத்தது என் கண்கள்
அதோ அங்கே ஒரு எருமை கூட்டம்.  அங்கே உன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தப்பித்து பிழைத்தது என் கண்கள்.. !

நட்சத்திரங்கள்
நீ பார்த்து இளிததும் சுக்குநூறாக உடைந்த நிலாவின் சில பாகங்களே  நட்சத்திரங்கள்.. !

முத்தம் ஒரு குத்தம்
முத்தம் ஒன்று நீ கேட்டால்,  சத்தம் இன்றி போகும் அதை காதால் கேட்டவனின்  உயிர்..!

உன் பார்வை  
இனி யாரையும் பால் ஊற்றி கொல்லவேண்டாம்.. உன்னை ஒரு நிமிடம் பார்க்க வைத்தாலே போதும்.. !

ஒளிந்து கொள்ளும் இதயம் 
உன்னை காணும் வரை லப்டப் என சீராக துடிக்கும் இதயம், உன்னை கண்டதும்  ஓடி சென்று என் முதுகின் பின்னே சென்று ஒளிந்து கொள்கிறது. !!

அணு ஆற்றல்
அணுவை துளைத்து ஆற்றல் எடுத்தால் கதிர்வீச்சு. உன்னை காணும் நாள் எல்லாம் எனக்கு நாசமா போச்சு..!!

சப்ப பிகருக்காக சப்ப கவிதைகள் எழுதியாச்சு..   இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. "எல்லா புகழும் இறைவனுக்கே!!" ஏ.ஆர் ரகுமான் சொன்னது. "எல்லா பெண்களும் அழகே!!" இது நான் சொன்னது.