இத்தனை நாட்களாக இணையத்தில் சுற்றி திரிகிறேன்.. அப்படி என்ன தான் பண்ணுகிறேன்? கேளுங்கள் என் ஸ்டோரியை...
பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல பதிவுகளை சந்தித்திருக்கிறது புதுமையான பல மொக்கைகளை தந்திருக்கிறது. ஆனால், இந்த பதிவு ஒன்றும் உருப்படியானது அல்ல.. பதிவு எழுதும் நான் ஒன்றும் வெட்டிபையன் அல்ல.. பரந்து விரிந்த இந்த இணைய உலகத்திலே உலாவிகளிலே சர்வ்வ்வ்வ சாதாரணமாக உலாவி வந்த ஜீவன்களிலே நானும் ஒருவன்.
பேஸ்புக்கில் அத்துமீறி நுழைந்தேன். ட்விட்டர்ரில் காலடி வைத்தேன் ப்ளாக் எழுத்து கொண்டிருக்கிறேன் இப்படியெல்லாம் ஏன் ஏதாவது உருப்படியா பண்ணலாம் என்றா !! இல்லை.. . நிச்சமாக இல்லை...